திரு முடிகள் தரிசன நிகழ்வு

February 9, 2015
அகிலத்தின் அருள் வெளிப்பாடு அருள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், வலீகட்கரசர் கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களினதும் அருள் நிறைந்த திரு முடிகளைப் பார்வைியிடும் நிகழ்வு 06.02.2015ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.
அன்றைய தினம் அதிகாலை 06.00 மணியளவில் கொழும்பிலிருந்து காத்தான்குடியை நோக்கி உயர்ரக வாகனங்களில் திருமுடிகள் கொண்டு வரப்பட்டன. திருமுடிகளின் அருள்களைப் பெற்றுக் கொள்ள மக்கள் வெள்ளம் போல் பள்ளிவாயலை நோக்கித் திரண்டனர். தொடர்ச்சியான ஸலவாத் முழக்கத்துடன் வீதிகளில் இரு மருங்களிலும் ஆண்களும், பெண்களும் கூடி நின்று கைகளில் பச்சை நிறக் கொடிகளை அசைத்தவாறு பள்ளிவாயலை நோக்கி திரு முடிகள் கொண்டு வரப்பட்டன.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மீதும், கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் மீதும் அளவில்லாத அன்பு கொண்ட மக்களுக்காக இவ்வாறான ஓர் அறிய சந்தர்ப்பம் கிடைத்தது பெரும் பாக்கியமே!
காத்தான்குடி வரலாற்றிலேயே இந்நிகழ்வு முதன் முறையாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக சரியாக பி. ப 04.45 மணியளவில் திருமுடிகள் கொழும்பை நோக்கி பிரியாமல் பிரிந்து சென்றன.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்

You may also like

Leave a Comment