ஜாக்கிரதை இது வஹ்ஹாபிகளின் ஊடுருவல்

July 5, 2015
இலங்கைத் திருநாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்

             நமது உயிரினும் மேலான நற்குணத்தின் தாயகம், “ஷரீஆ”வின் மூலவர், நபீகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்தார்களா? என்ற தலைப்பில் ஆதாரங்களோடு நான் பேசிய கருத்துக்களில் வஹ்ஹாபிகள் ஊடுருவல் செய்தும் திரிவுபடுத்தியும் மக்கள் மத்தியில் தவறான – பொய்யான கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.

                    நான் இவர்களை எதிர்த்துப் பேசியும், எழுதியும் வருவதால் என்னை அடக்கியும், ஒடுக்கியும் வைக்கும் நோக்கத்துடனும், என்னை பொதுமக்களுக்கு இஸ்லாமிய விரோதி என்று காட்டும் நோக்கத்துடனும் தவறான கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.
            இது தொடர்பான மேலதிக விபரம் தேவையான “உலமாஉ” மார்க்க அறிஞர்கள் இமாம் புகாரீ றஹிமஹுல்லாஹ் அவர்களால் கோர்வை செய்யப்பட்டதும், அகில உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான “ஸஹீஹுல் புகாரீ” ஹதீத் இலக்கம் 6982யும்,  இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹிமஹுல்லாஹ் அவர்களால் கோர்வை செய்யப்பட்ட “முஸ்னத் அஹ்மத்” ஹதீத் இலக்கம் 25959யும் இறை மெய்ஞ்ஞானி அல் இமாம் அஷ்ஷெய்க் அஹ்மதிப்னுல் முபாறக் றஹிமஹுல்லாஹ் அவர்களால் எழுதப்பட்ட “அல் இப்ரீஸ்” என்ற நூல் 152ம் பக்கத்தையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
             இது தொடர்பான தெளிவில்லாத பொதுமக்கள் எம்முடன் நேரில் அல்லது தபாலில் தொடர்பு கொண்டு உண்மை விளக்கம் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அன்புடன்
மௌலவீ, அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
BJM. பில்டிங், BJM வீதி, காத்தான்குடி – 06

05.07.2015

You may also like

Leave a Comment