ஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ்

April 27, 2015
அஜ்மீர் அரசர், கரீபே நவாஸ், அதேயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹாஜா முயீனுத்தீன் சிஸ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெறவிருக்கின்ற 29வது வருட ஹாஜாஜீ கந்தூரியை முன்னிட்டு கடந்த 25.04.2015 (சனிக்கிழமை) அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார் பேரிலான நினைவு மஜ்லிஸ் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையின் பின் அன்னாரின் பேரிலான திருக்கொடியேற்றமும் நடைபெற்று, தொடர்ந்து அவர்கள் பேரிலான மௌலிது அதேயே றஸூலும் ஓதப்பட்டது.
இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் ஆத்மீகப் பேருரையும் இடம்பெற்றது. இறுதியாக துஆ, ஸலவாத்துடன் மஜ்லிஸ் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
குறிப்பு – வருடாந்தம் நடைபெற்று வரும் 29வது வருட ஹாஜாஜீ மாகந்தூரீ இன்ஷா அல்லாஹ் எதி்ர்வரும் 03.06.2015 – 07.06.2015 வரை காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெறவிருக்கின்றது.

You may also like

Leave a Comment