Friday, April 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஆதம் ஒருவரல்ல. இரண்டு இலட்சம் பேர்கள்

ஆதம் ஒருவரல்ல. இரண்டு இலட்சம் பேர்கள்

قال الشيخ محي الدين رحمه الله ”ولقد رأيت وأنا بين النّائم واليقظان أنّي طائف بالكعبة مع قوم لا أعرفهم، فأنشدوني بيتين، حفظت أحدهما ونسيت الآخر

لَقَد طُفْنَا كما طُفْتُمْ سِنِيْنَا    بِهَذَا الْبَيْتِ طُرًّا اَجْمَعِيْنَا

وتكلّمت مع واحد منهم ، فقال لي أما تعرفني؟ فقلت لا، فقال أنا من أجدادك الأُوَل، قلت كمْ لك مُنْذُ مُتَّ؟ فقال لي بضعٌ واربعون ألف سنة، فقلتُ له ليس لأبينا آدم عليه الصلاة والسلام هذا القدر من السنين ، فقال لي عن أيِّ آدم تقول؟  عن هذا الأقرب إليك أم عن غيره؟ فتذكَّرْتُ حديثا رواه ابن عبّاس عن رسول الله صلّى الله عليه وسلّم أنّه قال إنّ الله تعالى خلق مأتي ألف آدم، فقلتُ في نفسي قد يكون الجدّ الّذي نسبني ذلك الشخص إليه من أولئك.

وقال الشيخ محي الدين في الباب السابع والستّين وثلاثمأة إجتمعت بإدريس عليه الصلاة والسلام في واقعة من الوَقَائع فقلت له إنّي رأيت شخصا في الطواف فأخبرني أنّه من أجدادي، فسئلته عن زمان موته ، فقال لي أربعون ألف سنة، فسئلته عن آدم لِمَا تقرّر عندنا في التّاريخ من مدّته، فقال عن أيّ آدمٍ تسئل؟ عن آدم الأقرب ام غيره؟ فقال إدريس عليه السلام صدق هذا الشخص، إنّي نبيّ الله ولا أعلم للعالم مدّةً، 

(اليواقيت والجواهر – الجزء الأوّل – ص 36)

சுருக்கம்:

முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். (நான் உறக்கத்திற்கும், விழிப்பிற்குமிடைப்பட்ட நிலையில் இருந்தபோது எனக்கு அறிமுகமில்லாத ஒரு கூட்டத்துடன் நான் “கஃபஹ்”வை “தவாப்” சுற்றிக் கொண்டிருக்கக் கண்டேன். அவர்கள் இரண்டு பாடல்கள் பாடினார்கள். அவற்றில் ஒன்று என் நினைவில் உள்ளது. மற்றதை நான் மறந்து விட்டேன்.)

பாடல்: “நீங்கள் இந்த வீட்டை – கஃபஹ் – வை சுற்றுவது போல் நாங்கள் அனைவரும் இதைப் பல வருடங்களாக சுற்றிக் கொண்டிருக்கின்றோம்”

அவ்வேளை அவர்களில் ஒருவருடன் நான் பேசினேன். அவர், என்னை உங்களுக்குத் தெரியுமா? என்று என்னிடம் கேட்டார். இல்லை என்றேன். அதற்கவர், நான் உங்களின் பாட்டன்மார்களில் ஒருவர் என்றார். நீங்கள் மரணித்து எவ்வளவு காலம் என்று நான் அவரிடம் கேட்டேன். நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன் என்று சொன்னார். எங்களின் தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கே இந்த அளவு காலமில்லையே என்று அவரிடம் கூறினேன். அதற்கவர், நீங்கள் எந்த ஆதம் பற்றிச் சொல்கிறீர்கள்? உங்களுக்கு சமீபத்தில் உள்ள ஆதம் பற்றியா? அல்லது அவருக்கு முன் வாழ்ந்த ஆதம் பற்றியா? என்று வினவினார். அப்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த “நிச்சயமாக அல்லாஹ் இரண்டு இலட்சம் ஆதம்களைப் படைத்துள்ளான்” என்ற ஹதீது என் நினைவிற்கு வந்தது. அப்போது இறுதியாக படைக்கப்பட்ட ஆதம் அவர்களுக்கு முன் வாழ்ந்த ஆதம் அவர்களின் சந்ததியில் உள்ளவர்தான் என்னுடன் பேசிய அந்த மனிதன் என்று நான் எனக்குச் சொன்னேன்.

முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்கள் தங்களின் “அல் புதூஹாதுல் மக்கிய்யஹ்” என்ற நூல் 367ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

மேற்கண்ட நிகழ்வின் பின் ஒரு சமயம் நபீ இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் ஒரு நிகழ்வில் நான் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு நிகழ்ந்த மேற்கண்ட சம்பவத்தை அவர்களிடம் நான் சொன்னேன். அதற்கவர் “குறித்த அந்த மனிதர் சொன்னது உண்மைதான். நான் ஒரு நபீயாக இருந்துங் கூட “ஆலம்” உலகத்துக்கு எத்தனையாண்டு – எத்தனை வயது – என்பது எனக்கே தெரியாது) என்று கூறினார்கள்.

அல் யவாகீத் வல் ஜவாஹிர்

பாகம் -01, பக்கம் 36

“துன்யா” என்ற இச் சொல்லுக்கு இவ்வுலகம் என்று பொருள் வரும். “ஆலம்” என்ற சொல்லுக்கு அர்ஷு, குர்ஸீ, லவ்ஹு, கலம், சுவர்க்கம், நரகம் உள்ளிட்ட அனைத்து சிருஷ்டிகளும் என்று பொருள் வரும்.

இவ்வுலகம் தோன்றி எத்தனை ஆண்டுகள் என்பதை புவியியல், வானவியல் ஆய்வாளர்களால் கூட இது வரை திட்டவட்டமாகக் கூற முடியாதிருக்கும் போது உலகம் தோன்றி எத்தனை ஆண்டுகள் என்பதை எவ்வாறு அவர்களால் கூற முடியும்?

பிரபஞ்சத்தின் வயதை – தோற்றத்தின் காலத்தை – எந்த ஓர் ஆய்வாளனாலும் இதுவரை அறிந்து கொள்ள முடியாதிருப்பது போல் உலகம் முடியும் வரை தோன்றக் கூடிய எந்த ஓர் ஆய்வாளனாலும் அறிந்து கொள்ளவே முடியாது.

பிரபஞ்சத்தின் மூலவனான இறைவனின் தோற்றம் எப்போது? அவனின் ஆரம்பம் எப்போது?  என்று எவராவது கேட்பாராயின் அவரின் கேள்வியே பிழையாகிவிடும். ஏனெனில் அவன் ஆரம்பம் இல்லான். தொடக்கமும் இல்லான். அதே போல் முடிவும் இல்லான். لا أوّل له ولا آخر له  ஆயினும் அவனே முந்தினவனாயும், அவனே பிந்தினவனாயும், அவனே உள்ளானவனாயும், அவனே வெளியானவனாயும் உள்ளான்.

هو الأوّل والآخر والظاهر والباطن

இதுவே “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் அத்திவாரம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments