Browse Category

Blog

மாதிஹுர் றஸூல் அஷ்ஷெய்கு ஸதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்!

October 10, 2018 0 comments
அல் ஆழிமுல் பாழில், வல் குத்புல் வாஸில், மாதிஹுர் றஸூல் அஷ்ஷெய்கு ஸதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்!
மௌலவீ HMM. .இப்றாஹீம் நத்வீ அவர்கள் எழுதிய
வித்ரிய்யஹ் ஷரீபஹ் நபீபுகழ் காப்பியம் எனும் நூலிலிருந்து
இம் மகானவர்கள் ஹிஜ்ரி 1042 இல் இந்தியாவிலுள்ள காயல்பட்டணத்தில் மலர்ந்தார்கள். இவர்களின் தந்தை அற்புதங்கள் பல நிகழ்த்திய அஷ்ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் அவர்களாகும்.
ஹழ்றத் சுலைமான் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களுக்கு ஐந்து புதல்வர்கள். முறையே,
01- அஷ்ஷெய்கு ஷம்சுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி
02- அஷ்ஷெய்கு ஷிஹாபுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி
03- அஷ்ஷெய்கு சதகதுல்லாஹ் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி
04- அஷ்ஷெய்கு அஹ்மத் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி
05- அஷ்ஷெய்கு சலாஹுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி ஆகியோராவர்கள்.

Continue Reading

முஹர்றம் மாத மஜ்லிஸ் நிகழ்வும், இரு பெரு மகான்களின் கந்தூரியும்

September 23, 2018 0 comments

மலர்ந்திருக்கும் இஸ்லாமியப் புது வருடமான முஹர்றம் ஹிஜ்ரி 1440 இனை சிறப்பிக்கும் முகமாகவும், இம்மாததத்தில் ஷஹீதான நபீமணி பேரர் இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களை நினைவு கூரும் நினைவு மஜ்லிஸும், பாசிப்பட்டணம் வாழும் மகானான அஷ்ஷெய்க் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், கோட்டைப்பட்டணத்தில் வாழும் அஷ்ஷெய்க் ராவுத்தர் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாகவும் கடந்த 18,19,20.09.2018 ஆகிய மூன்று தினங்கள் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான நினைவு தின மஜ்லிஸும், அருள்மிகு கந்தூரியும் மிகச்சிறப்பாக நடைபெற்றன.

ஆன்மீக நிகழ்வுகளாக மேற்கூறிய மகான்களின் பெயரிலான திருக்கொடியேற்றம், மவ்லிது ஹஸனைன், ஆஷூறா தின நிகழ்வு, மகான்கள் புகழ்பாடும் மவ்லி்த் மஜ்லிஸ், சங்கைக்குரிய உலமாஉகளின் சிறப்பு சொற்பொழிவுகள் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

சிறப்பு நிகழ்வுகளாக அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ நாயகம் அன்னவர்கள் அறபு மொழியில் எழுதிய “அல் குலாஸதுல் மிஸ்பாஹிய்யஹ்” எனும் இறையில் “வஹ்ததுல் வுஜூத்” சம்பந்தமான நூல் முதலாம் நாளன்று இஷா தொழுகையின் பின்னால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், இறுதித் தினமான 20.09.2018 அன்று ஷஹீதே கர்பலா இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் திருமுடிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மஜ்லிஸை அலங்கரித்தது.

இறுதியாக துஆப்பிரார்த்தனை நடைபெற்று தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

Continue Reading

ஆஷுறா வருகிறது ஆயத்தமாகுங்கள்.

September 17, 2018 0 comments

முஹர்றம் மாதத்தின் பத்தாம் நாள் “ஆஷூறா” தினம் என்று அழைக்கப்படுகின்றது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முந்தின ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் மார்க்கத்தில் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் முஹம்மது (صلى الله عليه وسلم) அவர்கள் ஜாஹிலிய்யஹ் காலத்திலிருந்தே “ஆஷூறா” நோன்பை நோற்று வந்துள்ளார்கள்.

பின்னர் மதீனா வந்த போதும் யூதர்கள் அந்த நோன்பை நோற்றிருப்பதைக் கண்டு அதை நோற்பதற்கு நாமே தகுதியானவர் எனக்கூறி தாமும் நோற்று மற்றவர்களையும் நோற்கும்படி நவின்றார்கள்.

பிற்காலத்தில் “தாஸூஆ” ஒன்பதாம் நோன்பையும் தான் மறுவருடம் ஹயாத்தாக இருப்பின் நோற்பேன் என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார்கள். நபீ (صلى الله عليه وسلم) அவர்கள் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்காவிட்டாலும் நோற்பேன் என்று கூறியதால் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது. Continue Reading

ஷஹீதே கர்பலா நபீ பேரர் இமாம் ஹூஸைன் றழில்லாஹு அன்ஹு அவர்களின் படுகொலை! அஹ்லு பைத்தினரை அழிக்கும் திட்டம் அன்றே உருவாகி விட்டது.

September 15, 2018 0 comments
மெளலவீ HMM. இப்றாஹீம் நத்வீ
அல் ஆலிமுல் பாழில் வல் வலிய்யுல் வாஸில் அஷ்ஷெய்கு அப்துர் றஹ்மான் பின் அப்தில்லாஹ் அவர்களினால் ஹிஜ்ரி 1318இல் எழுதப்பட்டு ஹிஜ்ரி 1329இல் (1911 ஆகஸ்ட் 31) இல் அச்சிடப்பட்ட ‘’துஹ்பதுல் அப்றார் பீ அஷ்றாதிஸ்ஸாஅதி வஅஹ்வாலின்னார் ,வநயீமி தாரில் அக்யார் , வஉர்ஸி ஸெய்யிதினல் முக்தார், வலிகாஇ காலிகில்லைலி வன்னஹார்’’ என்ற அறபு நூலின் 13ம் 14ம் பக்கத்தில் இறுதி நாளின் 9வது அடையாளமான ஹழ்றத் ஹூஸைன் பின் அலீ (றழீ) அவர்களின் கொலை பற்றிக் குறிப்பிடுகையில்
ஹழ்றத் அனஸ் இப்னுல் ஹரித் (றழீ) அவர்களைத்தொட்டும் தனது முஸ்னதில் அல் முஹாபிழ் அபூ ஷூஐப் உத்மான் பின் ஸகன் (றஹ்) சொல்கிறார்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் ஹூஸைன் (றழீ) அவர்களைக் காட்டி எனது இந்த மகன் இறாக் நாட்டில் கொலை செய்யப்படுவார். யார் அவர்களை அடைகின்றாரோ அவர் அவருக்கு உதவிசெய்யவும் என்று !

Continue Reading

முக்கிய அறிவித்தல்.

September 15, 2018 0 comments

அஸ்ஸலாமு அலைகும் வறஹ்…

அதி சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல் ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (தால உம்றுஹு ) அன்னவர்கள் அறபு மொழியில் “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் தொடர்பாக எழுதிய “அல் குலாஸதுல் மிஸ்பாஹிய்யஹ்” எனும் நூல் உலமாஉகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

ஆர்வமுள்ள உலமாஉகள் கீழ்வரும் கைபேசி இலக்கங்களுக்கு உங்கள் முகவரிகளை வாட்ஸ் அப் மூலமோ அல்லது SMS மூலமோ அனுப்பி வைக்கவும்.

+94 773 186 146
+94 774 102 602
+94 774 849 786

நன்றி, 
வஸ்ஸலாம்.