Tag

கட்டுரைகள்

ஆஷுறா வருகிறது ஆயத்தமாகுங்கள்.

September 17, 2018 0 comments

முஹர்றம் மாதத்தின் பத்தாம் நாள் “ஆஷூறா” தினம் என்று அழைக்கப்படுகின்றது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முந்தின ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் மார்க்கத்தில் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் முஹம்மது (صلى الله عليه وسلم) அவர்கள் ஜாஹிலிய்யஹ் காலத்திலிருந்தே “ஆஷூறா” நோன்பை நோற்று வந்துள்ளார்கள்.

பின்னர் மதீனா வந்த போதும் யூதர்கள் அந்த நோன்பை நோற்றிருப்பதைக் கண்டு அதை நோற்பதற்கு நாமே தகுதியானவர் எனக்கூறி தாமும் நோற்று மற்றவர்களையும் நோற்கும்படி நவின்றார்கள்.

பிற்காலத்தில் “தாஸூஆ” ஒன்பதாம் நோன்பையும் தான் மறுவருடம் ஹயாத்தாக இருப்பின் நோற்பேன் என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார்கள். நபீ (صلى الله عليه وسلم) அவர்கள் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்காவிட்டாலும் நோற்பேன் என்று கூறியதால் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது. Continue Reading

ஷஹீதே கர்பலா நபீ பேரர் இமாம் ஹூஸைன் றழில்லாஹு அன்ஹு அவர்களின் படுகொலை! அஹ்லு பைத்தினரை அழிக்கும் திட்டம் அன்றே உருவாகி விட்டது.

September 15, 2018 0 comments
மெளலவீ HMM. இப்றாஹீம் நத்வீ
அல் ஆலிமுல் பாழில் வல் வலிய்யுல் வாஸில் அஷ்ஷெய்கு அப்துர் றஹ்மான் பின் அப்தில்லாஹ் அவர்களினால் ஹிஜ்ரி 1318இல் எழுதப்பட்டு ஹிஜ்ரி 1329இல் (1911 ஆகஸ்ட் 31) இல் அச்சிடப்பட்ட ‘’துஹ்பதுல் அப்றார் பீ அஷ்றாதிஸ்ஸாஅதி வஅஹ்வாலின்னார் ,வநயீமி தாரில் அக்யார் , வஉர்ஸி ஸெய்யிதினல் முக்தார், வலிகாஇ காலிகில்லைலி வன்னஹார்’’ என்ற அறபு நூலின் 13ம் 14ம் பக்கத்தில் இறுதி நாளின் 9வது அடையாளமான ஹழ்றத் ஹூஸைன் பின் அலீ (றழீ) அவர்களின் கொலை பற்றிக் குறிப்பிடுகையில்
ஹழ்றத் அனஸ் இப்னுல் ஹரித் (றழீ) அவர்களைத்தொட்டும் தனது முஸ்னதில் அல் முஹாபிழ் அபூ ஷூஐப் உத்மான் பின் ஸகன் (றஹ்) சொல்கிறார்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் ஹூஸைன் (றழீ) அவர்களைக் காட்டி எனது இந்த மகன் இறாக் நாட்டில் கொலை செய்யப்படுவார். யார் அவர்களை அடைகின்றாரோ அவர் அவருக்கு உதவிசெய்யவும் என்று !

Continue Reading

இதுதான் சரியான நம்பிக்கை

August 20, 2018 0 comments

மெளலவீ KRM ஸஹ்லான் றப்பானீ

வஹ்தத்துல் வுஜுத் பற்றி விமர்சனம் செய்ய முன்வந்துள்ள ஒருவர் “வஹ்ததுல் வுஜூத்” என்பது “உள்ளமை ஒன்று அல்லது மெய்ப்பொருள் ஒன்று என்பதை விபரிக்கின்றது என்தையும் ஒரே உள்ளமையான அல்லாஹ் தான் ஹுலூல், இத்திஹாத் இன்றி பஞ்சு பிடவையாக,சேட்டாக, சாரனாக,தொப்பியாக தோற்றுவது போலவும், தங்கம் காப்பாக, மாலையாக, மோதிரமாக தோற்றுவதுபோலவும் கடல் அலையாக,நுரையாக தோற்றுவது போலவும் இரும்பு திறப்பாக,பூட்டாக தோற்றுவது போலவும் படைப்புகளாக ஒரே உள்ளமையான அல்லாஹ் தோற்றமளிக்கின்றான் என்பதையும் விபரிக்கின்றது என புரிந்து கொள்ளாமல் படைப்பின் ஒவ்வொரு பொருளும் “அல்லாஹ்” என்கின்றனர் எனவும் படைப்புக்களை அல்லாஹ் என்கின்றனர் எனவும் ஒன்றை அல்லது பிரபஞ்சத்தைப் பார்த்து “அல்லாஹ்.” என்று கூறினால் அவர் கூறும் பொருளை அல்லது பிரபஞ்சத்தை தெய்வீகத் தன்மையுள்ளது (உலூஹிய்யத் உள்ளது) என்று வாதிக்கின்றார்கள் என்றும் தவறாக விமர்சனம் செய்கின்றார். Continue Reading

புனித அறபா நாள் !

August 19, 2018 0 comments
மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ
பேஷ் இமாம் – மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத்

சங்கையான மாதங்களின் நாட்களில் ஒன்று அறபாவுடைய நாளாகும்.

அல்லாஹ் அல்குர்ஆனில் சங்கையான மாதங்கள் குறித்து குறிப்பிடும்போது..
اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌ ؕ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ‌ ؕ وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً‌  ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Continue Reading

வஹ்ததுல் வுஜூத் கோட்பாடும், முல்லாக்களும்

July 25, 2018 0 comments

ஆக்கம் – மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

கடந்த 1979ம் ஆண்டு தொடக்கம் நமது இலங்கை நாட்டில் வஹ்ததுல் வுஜூத் – இறையியல் பகிரங்கமாக, தெட்டத் தெளிவாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவது யாவரும் அறிந்த ஒன்றே. காத்தன்குடியில் ஆரம்பிக்கப்பட்ட கொள்கைப் பிரச்சாரம் இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவு உலகலாவிய ரீதியில் பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகின்றது. 1979ம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த, நம் தாய்த்திரு நாட்டிற்கு வருகை தந்த ஷெய்குமார்கள் மற்றும் மார்க்க அறிஞர்களால் தமக்கு நெருங்கிய முரீதுகள், முஹிப்புகள் மத்தியில் போதிக்கப்பட்டு வந்த போதிலும் அதனை பகிரங்கமாக பேச வேண்டிய கட்டாயத்தின் அடிப்படையில் ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்றுஹு அன்னவர்கள் இன்று வரை சுமார் நாற்பது வருடங்களாக பல சவால்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பேசியும், எழுதியும் வருகின்றார்கள். இவர்களின் இப்புனித சேவையின் காரணத்தினால் ஒரு இஸ்லாமியன் கட்டாயம் அறிய வேண்டிய இறையியல் கோட்பாட்டை பல்லாயிரக்கணக்கான மக்கள் அறிந்து தரீகஹ் வழியில் செவ்வனே சென்று கொண்டிருக்கின்றார்கள். Continue Reading