Tag

நிகழ்வுகள்

முஹர்றம் மாத மஜ்லிஸ் நிகழ்வும், இரு பெரு மகான்களின் கந்தூரியும்

September 23, 2018 0 comments

மலர்ந்திருக்கும் இஸ்லாமியப் புது வருடமான முஹர்றம் ஹிஜ்ரி 1440 இனை சிறப்பிக்கும் முகமாகவும், இம்மாததத்தில் ஷஹீதான நபீமணி பேரர் இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களை நினைவு கூரும் நினைவு மஜ்லிஸும், பாசிப்பட்டணம் வாழும் மகானான அஷ்ஷெய்க் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், கோட்டைப்பட்டணத்தில் வாழும் அஷ்ஷெய்க் ராவுத்தர் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாகவும் கடந்த 18,19,20.09.2018 ஆகிய மூன்று தினங்கள் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான நினைவு தின மஜ்லிஸும், அருள்மிகு கந்தூரியும் மிகச்சிறப்பாக நடைபெற்றன.

ஆன்மீக நிகழ்வுகளாக மேற்கூறிய மகான்களின் பெயரிலான திருக்கொடியேற்றம், மவ்லிது ஹஸனைன், ஆஷூறா தின நிகழ்வு, மகான்கள் புகழ்பாடும் மவ்லி்த் மஜ்லிஸ், சங்கைக்குரிய உலமாஉகளின் சிறப்பு சொற்பொழிவுகள் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

சிறப்பு நிகழ்வுகளாக அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ நாயகம் அன்னவர்கள் அறபு மொழியில் எழுதிய “அல் குலாஸதுல் மிஸ்பாஹிய்யஹ்” எனும் இறையில் “வஹ்ததுல் வுஜூத்” சம்பந்தமான நூல் முதலாம் நாளன்று இஷா தொழுகையின் பின்னால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், இறுதித் தினமான 20.09.2018 அன்று ஷஹீதே கர்பலா இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் திருமுடிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மஜ்லிஸை அலங்கரித்தது.

இறுதியாக துஆப்பிரார்த்தனை நடைபெற்று தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

Continue Reading

4ம் வருட நினைவு மஜ்லிஸ்-2018

August 6, 2018 0 comments

குத்புல் வுஜூத் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களினதும், அன்னாரின் கலீபாவாகிய இமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களினதும் 4ம் வருட மனாகிப் மஜ்லிஸ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 05.08.2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று  மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றமும்,கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் அன்னார்கள் பேரிலான மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின்  சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் ஷாதுலீ நாயகம் அன்னவர்கள் பற்றிய ஆத்மீக பேருரையும், இறுதியாக துஆ ஓதப்பட்டு, தபர்றுக் விநியோகத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ். Continue Reading

41வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி – 2018

July 3, 2018 0 comments

அல் ஆலிமுல் பாழில், வல் வலிய்யுல் வாஸில், அபுல் இர்பான் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 41வது வருட அருள் மிகு கந்தூரி 30.06.2018 சனிக்கிழமை அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பி.ப 5.00 மணிக்கு புனித திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்கள் பேரில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் எழுதிய “அல்கஸீததுல் மிஸ்பாஹிய்யஹ் பீ மத்ஹில் ஹழ்றதில் ஜவாதிய்யஹ்” மௌலிதும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (தால உம்றுஹு) அன்னவர்களின் சன்மார்க்க சொற்பொழிவும், அதனைத் தொடர்ந்து பாடகர் MFM. பிஹாம் குழுவினரால் இரங்கல் கீதம் பாடப்பட்டது.

இறுதியாக துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகத்துடன் இனிதே ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ். Continue Reading

தென்னிந்திய இஸ்லாமியப் பாடகர் A.ஸெய்னுலாப்தீன் பைஸீ அவர்களின் இலங்கை விஜயத்தின் தொகுப்பு

December 30, 2016 0 comments

தென்னிந்தியாவின் புகழ் பெற்ற இறைஞான, இஸ்லாமியப் பாடகர் A. ஸெய்னுலாப்தீன் பைஸீ அவர்கள் சிங்கப்பூரிலிருந்து கடந்த 21.12.2016 அன்று இலங்கைத்திருநாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள்.
இவ்விஜயத்தி்ல் காத்தான்குடி, கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு சென்று இறைஞான கீதங்களை பாடி மக்களை மகிழ்வித்தார்கள்.
குறிப்பாக அல் ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களை புகழ்ந்து பாடி, ஸியாறத் செய்து அருள் ஆசிகளையும், சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ நாயகம் அன்னவர்களை சந்தித்து துஆ பறகத்தையும் பெற்று கொண்டு 31.12.2016 அன்று சிங்கப்பூர் நோக்கி பயணிக்கிறார்கள்.
அல்லாஹ் அன்னாரின் வாழ்வில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் அன்பைக் கொண்டும், வலீமார்களின் நல்லாசிகள் கொண்டும் பறகத் செய்வானாக! ஆமீன் Continue Reading

15 வது வருட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு

December 14, 2016 0 comments

மாதவக் கோன், மழ்ஹறுல் அதம்மு, அஷ்றபுல் வறா முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தையும், அவர்கள் பிறந்த நாளான றபீஉனில் அவ்வல் பிறை 12ம் நாளையும், அவர்கள் பிறந்த நேரமான பஜ்ருடைய நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 13.12.2016 செவ்வாய்க்கிழமையன்று புனித ஸலவாத் மஜ்லிஸும், திருமுடிகளும் தரிசனமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அன்றைய தினம் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளான இறைநபீ நேசர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் திருமுடிகளை இரவு 10.00 மணி தொடக்கம் 02.00 மணி வரை தரிசித்து அருள் பெற்றார்கள்.
அதனைத் தொடர்ந்து 2.30 – 3.30 மணி வரை சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்றுஹு அன்னவர்களினால் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
அதன்பின் சுப்ஹ் தொழுகைக்கான அதான் வரை பல்லாயிரக்கணக்கான மக்களின் ஒருமித்த குரலில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் முழங்கப்பட்டது. இறுதியாக துஆ ஓதப்பட்டு, நாயகத்தின் அன்புக்காக ஒன்று சேர்ந்த மக்களுக்காக அருள் அன்னதானம் வழங்கப்பட்டு, சுப்ஹ் தொழுகை ஜமாஅத்தாக நடைபெற்று இனிதே ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.
அல்ஹம்துலில்லாஹ் Continue Reading