Tag

அறிவித்தல்கள்

முக்கிய அறிவித்தல்.

September 15, 2018 0 comments

அஸ்ஸலாமு அலைகும் வறஹ்…

அதி சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல் ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (தால உம்றுஹு ) அன்னவர்கள் அறபு மொழியில் “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் தொடர்பாக எழுதிய “அல் குலாஸதுல் மிஸ்பாஹிய்யஹ்” எனும் நூல் உலமாஉகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

ஆர்வமுள்ள உலமாஉகள் கீழ்வரும் கைபேசி இலக்கங்களுக்கு உங்கள் முகவரிகளை வாட்ஸ் அப் மூலமோ அல்லது SMS மூலமோ அனுப்பி வைக்கவும்.

+94 773 186 146
+94 774 102 602
+94 774 849 786

நன்றி, 
வஸ்ஸலாம்.

இறைஞான கீத நிகழ்வு

December 21, 2016 0 comments

தென்னிந்தியாவின் பிரபல இஸ்லாமியப் பாடகர், இறைநேசர்களின் புகழ் A.ஸெய்னுலாப்தீன் பைஸீ அன்னவர்கள் கலந்து சிறப்பிக்கும் “இறைஞான கீதங்கள்” பாடும் இனிய நிகழ்வு 22.12.2016 வியாழக்கிழமை இன்றிரவு 7:00 மணி 9:30 மணி வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெறும்.
இந்நிகழ்வில் அனைத்து சகோதர சகோதரிகளும் கலந்து பயன் பெறுமாறு அன்பாய் அழைக்கின்றோம். Continue Reading

முரீதுகள் – சிஷ்யர்களுக்கான மாநாடு

October 14, 2016 0 comments

அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (அதாலல்லாஹு உம்றஹு) அன்னவர்களிடம் “பைஅத்” ஞானதீட்சை – ஆன்மீக ஒப்பந்தம் செய்து கொண்ட “முரீதீன், முரீதாத்” ஆண்கள், பெண்களுக்கான மாநாடு 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை “மஃரிப்” தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி-5 பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில்  மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

இம்மாநாடு அல்ஜாமிஅதுர் றப்பானிய்யா அறபுக் கலாபீட விரிவுரையாளர் மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்களின் தலைமையில் மௌலவீ MS.அஹ்மத் ஸாஹ்ஜஹான் றப்பானீ அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பாகும்.

இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆன்மீகப் பேருரை இடம்பெற்று சுமார் 10:00 மணிக்கு இராச்சாப்பாடு வழங்கப்பட்டு “ஸலவாத்” உடன் மாநாடு நிறைவு பெறும். Continue Reading

முரீதீன்கள் மாநாடு – 2016

September 29, 2016 0 comments

காதிரிய்யஹ் திருச்சபை ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும்…

முரீதீன்கள் மாநாடு – 2016

——————————————-

காலம் : 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை
இடம் : பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-05
நேரம் : பி.ப 6:00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை Continue Reading

ஊடக அறிக்கை

March 16, 2016 0 comments
அஸ்ஸலாமு அலைக்கும் 

காத்தான்குடி – 06 அப்துல் ஜவாத் ஆலிம் மாவத்தையைச் சேர்ந்த  யுஸ்ரி எனும் சிறுமிக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்புச் சூடு வைத்து கொடுமைப் படுத்திய சம்பவத்தை கேள்வியுற்று நாம் மிகுந்த கவலையும் மனவேதனையும் அடைகின்றோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் நாம் மிக உறுதியாக இருக்கின்றோம்.

இது தொடர்பாக பாரபட்சமின்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த சிறுமிக்கு இழைக்கப்பட்டுள்ள கொடூரத்திற்கு சட்டநடவடிக்கை எடுக்குமாறும், குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் நாம் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கின்றோம்.
இது தொடர்பாக எமது நம்பிக்கைப் பொறுப்பின் நிதி முகாமைத்துவப் பணிப்பாளர் அல்ஹாஜ், MIM. ஜெஸீம் (JP) அவர்கள் மூலம் 13-03-2016ம் திகதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தோம்.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு 28-03-2016 வரை சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மௌலவீ MMA. மஜீத் றப்பானீயை 15-03-2016 ம் திகதி முதல் எமது அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் சகல பதவிகளிலிருந்தும் தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்துள்ளோம்.
தலைவர், செயலாளர்
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் 
வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு
காத்தான்குடி