Tag

கவிதைகள்

தியாகங்கள் செய்வோம்! இறைவனைக் காண்போம்!!!

September 9, 2016 0 comments

கவி – மௌலவீ MJ. அஹ்மத் ஸுஹ்ரீ (றப்பானீ)

எல்லாம் அவனாய் இருந்திடும் இறையை
துல்ஹஜ் மாதம் தோன்றிய பிறையை
கண்டதும் எம்மில் அழித்திட்டான் கறையை
அவனை நாமும் போற்றிட வாரீர்!
 
நபிமார் அணியில் தோன்றிய நாதர்
இறைவனின் சோதனை பெற்றிட்ட வேதர்
“கலீலுல்லாஹ்” என்னும் பெயர் பெற்ற ராஜர்
இப்றாஹீம் நபியின் சரித்திரம் கேட்பீர்!
Continue Reading

அப்துல் ஜவாத் வலீ! நான் தேடும் நேர் வழி!!

July 24, 2016 0 comments

ஆக்கியோன்

மௌலவீ  MJ.அஹ்மத் ஸுஹ்ரீ (றப்பானீ)

 
மண்ணோர் வலம் வரும் இணையிலா கோனே
விண்ணோர் புகழ்ந்திடும் மட்டில்லாப் புகழே
நல்லோர் தேடிடும் காதலன் நீரே
புகழ்ந்தே துதித்தேன் இரு கரமேந்தியே!
 
அலியார் ஆலிமின் ஆன்மிக ஒளியே
மூஸா உம்மா பெற்றிட்ட தவமே
ஷெய்குனா தந்த தௌஹீதின் தளமே
பத்ரிய்யஹ் ஆண்டிடும் நிகரிலா மதியே!
Continue Reading

“ஷம்சுல் உலமா” மிஸ்பாஹீ வாழ்க!

July 23, 2016 0 comments

      -கவித்திலகம் இப்றாஹீம் நத்வீ

அறிவுக்கண் திறந்த
ஆத்மிகப் பேரொளியே
அகவிருளை நீக்கிவைத்த
அருள் ஞானம் கொண்டவரே
ஆண்டு பல வாழ்ந்திடவே
அல்லாஹ்வை பிரார்த்தித்தேன்
அன்புள்ளம் கொண்டவரே
அகமகிழ்ந்து வாழ்த்திடுவீர்!
தியாகத்திரு நாளாம் திக்கெல்லாம் புகழ் நாளாம்
திருவருள் சொரி நாளாம்
தியாகங்கள் சொரி நாளாம்
தரணியிலே நீங்கள்
தித்திக்கும் பேரின்பம்
தனித்துவங்கள் கொண்டுயர
துய்யோனை வேண்டுகின்றேன்
சற்குணத்தின் சற்குருவே
சாந்தமொழிர் இன்முகமே
சலனமற்ற மனங்கொண்ட
சமூகத்தின் தீன் சுடரே
சத்தியத்தை நிலை நாட்டி
சரித்திரங்கள் படைத்தவரே
சங்கையப்துல்ஜவாத் வலியின்
சத்தியமே வாழ்க என்றேன்
உத்தமரே உம்போதம்
உணவாக நானுண்டேன்
உம்மாலே உயிர் பெற்றேன்
உம்போதம் உளம் சுமந்தேன்
உலக​மெனும் மாயையதன்
உட்பொருளை உணர்து கொண்டேன்
உவகையுடன் வாழ்த்துகின்றேன்
உரவோரில் உயர் ஷம்ஸே!
இவ்வுலகம் மறுவுலகம்
இடர் நீக்கும் சற்குருவே
இறை நேசர் பரம்பரையில்
இகம் வந்த சொல்லமுதே
இணையில்லா இரத்தினமே
இறை நூல்கள் படைத்தவரே
இல்லையுங்கள் போலொருவர்
இல்மினிலே இரவியானீர்!
இப்றாஹீம் நத்வியெந்தன்
இதயத்தை ஆள்பவரே
இறை ஞானக் கவ்ம்களுக்கு
இறையிரசம் தருபவரே
இரக்க மனம் கொண்டவரே
இழவு எனைத்தொடுகையிலே
இறையிவனைப் பொருந்திடவே
இறைஞ்சிடுவீர் நாயகமே!
அருஞ் சொற்பத விளக்கம்-
01)சலனம்-சஞ்சலம்
02)உரவோர்-அறிஞர்
03)இரவி-சூரியன்
04)இழவு-மரணம்

லைலதுல் கத்ரே வருக!

July 2, 2016 0 comments

கர்த்தனின் திருநாமம் போற்றிப் புகழ்ந்தேன்.
திருநபி வதனம் நெஞ்சில் வரைந்தேன்.
றமழான் நோன்பை நெஞ்சில் சுமந்தேன்.
வரையத் தொடங்கினேன் பேனை நட்டியே!
காலங்கள் ஓடி வருடமும் செல்லுதே
அதிலும் ஒருமாதம் சிறப்பும் கொள்ளுதே
றமழான் வந்திடின் கடைசிப் பத்திலே
கத்ரெனும் இரவும் ஒற்றையில் வருகுமே! Continue Reading

ஈழத்தின் சொற்கொண்டல் அறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ நாயகம் அன்னவர்களின் 72வது பிறந்த நாளன்று வெளியிடப்பட்ட பிரசுரங்கள்

February 5, 2016 0 comments