Tag

தொடர்கட்டுரைகள்

உருவமும் பிரம்மமும் (தொடர்-2)

September 12, 2018 0 comments

ஆக்கம் – சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ்
A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ அன்னவர்கள்
————————————————-

உதாரணம் : 2 -தோட்டம்

“தோட்டம்” என்பது பல்வேறு மரம், செடி, கொடிகளை கொண்ட ஒர் இடத்தின் பெயராகும். இச் சொல்லுக்குள் எல்லாவிதமான தாவர வர்க்கங்களும் அடங்கிவிடும். தோட்டத்திலுள்ள தாவரங்கள் தோட்டத்துக்கு வேறானவையல்ல. மா, பலா, வாழை போன்ற தாவர வர்க்கத்தின் மொத்த தொகுதியே தோட்டமாதலால் இவை எதுவும் தோட்டத்துக்கு வேறானதாக எங்ஙகனம் ஆக முடியும்? எனவே அவை தோட்டத்துக்கு வேறானவையல்ல!

ஆயினும், தோட்டத்திலுள்ள மா மரம், வாழை மரத்திற்கு வேறானதுதான். மாங்காய், தேங்காய்க்கு வேறானதுதான். இனிப்பு, புளிப்புக்கு வேறானதுதான். இவை யாவும் தோட்டத்திலிருந்து வெளியாகுவதால் இவைகளுக்கிடையே வேறுபாடு காணப்பட்டாலும், இவற்றில் எதுவும் தோட்டத்துக்கு வேறாகிவிட முடியாது.

எனவே, “தோட்டம் ஒன்றென்று” நம்புவதென்றால், அதிலுள்ள சகல வஸ்த்துக்களும், தன்மைகளும் ஒன்றென்று நம்புவதேயாகும். “அல்லாஹ் ஒருவன்” என நம்புவதின் கருத்தாவது, சகல வஸ்த்துக்களையும், தன்மைகளையும் உள்ளடக்கிய பிரம்மம் (தாத்) ஒன்றென்று நம்புவதேயாகும். Continue Reading

உருவமும் பிரம்மமும் (தொடர்-1)

August 30, 2018 0 comments

ஆக்கம் – சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ்
A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ அன்னவர்கள்
————————————————-

ஒரு விளக்கம்

1983-12-27 திகதிய ”தினபதி” நாளிதழில் ஞானபிதா அவர்கள் “உருவ வணக்கம் இஸ்லாம் அதை ஏற்கவில்லை” எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்கள். அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் விமர்சணக் கட்டுரைகளை வெளியிட்டார்கள். எனினும் எஸ்.எம. மன்சூர் என்பவர் 1984-01-02ம் திகதியன்று ”தினபதி”யில் எழுதிய மறுப்புக் கட்டுரையில் ”சூரதுல் இக்லாஸ்” எனும் திருமறை அத்தியாயம் எதிராதாரமாக அவரால் எடுத்தாண்டு எழுதப்பட்டிருந்தது.

உண்மையில் ஞானபிதா அவர்கள் வலியுறுத்தி விளக்கிவருகின்ற ”வஹ்ததுல் வுஜூத்” (உள்ளமை ஒன்றே) கொள்கைக்கு ஆதரவான – ஆதாரமான அத்தியாயமே ”சூரதுல் இக்லாஸ்“ ஆகும். எனவே, ஜனாப் மன்சூர் அவர்களது அம் மறுப்புக் கட்டுரைக்கு ஞானபிதா அவர்கள் “உருவமும் பிரம்மமும்” எனும் தலைப்பில் இவ்விளக்க கட்டுரையை எழுதி முடித்த போது “தினபதி” ஆசிரியபீடம் மேற்படி கட்டுரை தொடர்பான வாசகர்களின் வாதப் பிரதிவாதங்களுக்கு முத்தாய்ப்பு வைத்தது. Continue Reading

அத்துவைதம் (தொடர்-06)

July 20, 2018 0 comments

தொகுப்பு : மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ

ஒரு முஸ்லிமை காபிர், முஷ்ரிக், முர்தத் என்று சொல்வதன் விபரீதம்

முஸ்லிமான ஒரு மனிதனை அவன் பேசுகின்ற பேச்சின் விபரத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவனுடைய பேச்சின் சில கருத்துக்கள் குப்ருடைய வார்த்தையாக இருக்கும் என்ற சந்தேகத்தில் அவனுடைய பேச்சின் விளக்கத்தை அறிந்து கொள்ளாமல் அந்த மனிதனை காபிர் என்றோ முர்தத் என்றோ முஷ்ரிக் என்றோ சொல்வது அல்லது தீர்ப்புச் செய்வது அல்குர்ஆனுக்கும் அல்ஹதீதுக்கும் இஜ்மாஃ கியாஸுக்கும் மாற்றமான நடைமுறையாகும்.

இவ்வாறு சொல்பவன் அல்லது தீர்ப்புச் செய்பவர் மிக மோசமான நிலைக்கு ஆளாக வேண்டி ஏற்படும்.

ومن لم يحكم بما انزل الله فأولئك هم الكافرون (مائدة 44)
ومن لم يحكم بما انزل الله فأولئك هم الظالمون (مائدة 45)
ومن لم يحكم بما انزل الله فأولئك هم الفاسقون (مائدة 46)

Continue Reading

அத்துவைதம் (தொடர்-05)

July 16, 2018 0 comments

தொகுப்பு : மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ

*ஷிர்க் – இணை – கூட்டு*

ஷிர்க் என்பதன் பொருள் இணை அல்லது கூட்டு. ஒன்றைப்போல் இன்னொன்று இருப்பதை நாம் இணை என்று சொல்கின்றோம். அல்லாஹ்வுக்கு யதார்த்தத்தில் இணை இல்லை. மனிதன் தனது எண்ணத்திலேயே இணையை ஏற்படுத்துகின்றான். அல்லாஹ் தஆலாவுக்கு இணை இல்லை என்பதுவே இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை. அதுவே யதார்த்தமும்கூட. அல்லாஹ் தஆலாவைப்போல் இன்னொரு வஸ்த்துவுக்கு சுயமான உள்ளமை இல்லை. அவனது செயல்களைப்போல் எந்தவொரு வஸ்த்துவுக்கும் சுயமான செயல்கள் இல்லை. அவனது பண்புகளைப்போல் எந்தவொரு வஸ்த்துவுக்கும் சுயமான பண்புகள் இல்லை. அவன் மாத்திரமே இருப்பதால் உள்ளமையும் செயல்களும் பண்புகளும் அவனுக்கு மாத்திரமே இருக்கின்றன. எனவே அவனுக்கு இணை இல்லை. இணை என்பது யதார்த்தத்தில் அசாத்தியமானது. யதார்த்தமான உள்ளமையுடையவனே வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன். எனவே வணக்கமும் அவனுக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும். Continue Reading

அத்துவைதம் (தொடர்-04)

July 12, 2018 0 comments

தொகுப்பு : மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ

*வஹ்ததுல் வுஜூத்’*

‘வஹ்ததுல் வுஜூத்’ என்பது உள்ளமை ஒன்று அல்லது மெய்ப் பொருள் ஒன்று எனும் பொருள் தருகின்றது. ‘வஹ்தத்’ என்பது ஒன்று என்பதைக் குறிக்கின்றது. ‘வுஜூத்’ என்பது உள்ளமை என்பதைக் குறிக்கின்றது. ‘உள்ளமை’ என்பது ‘இல்லாமை’ என்பதற்கு மாற்றமானது. ‘வுஜூத்’ உள்ளமை என்பது அல்லாஹ்வின் ‘தாத்’ எனும் மெய்ப் பொருளைக் குறிக்கின்றது. எனவே ‘வஹ்ததுல் வுஜூத்’ என்பது ‘உள்ளமை ஒன்று அல்லது மெய்ப் பொருள் ஒன்று’ அல்லாஹ் ஒருவன் எனும் பொருளைத் தருகின்றது. ஸூபியாக்கள் வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று பொருள் கொள்கின்றனர்.

வுஜூத் – உள்ளமை மூன்று வகைப்படுகின்றது.

*01.வாஜிபுல் வுஜூத் 
இது தன்னைக் கொண்டு நிலைபெற்றது. இது நிலைபெறுவதற்கு மற்றொன்று தேவையில்லை. உதாரணம் : அல்லாஹ் தஆலாவின் ‘தாத்’ எனும் மெய்ப் பொருள். (قائم بنفسه) Continue Reading