ஷாதுலிய்யஹ் தரீக்காவின் ஸ்தாபகர் அஷ்ஷெய்க் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ
(مؤسّس الطّريقة الشّاذليّة الشّيخ السيّد أبو الحسن عليّ الشاذلي رحمه الله)
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ
(مؤسّس الطّريقة الشّاذليّة الشّيخ السيّد أبو الحسن عليّ الشاذلي رحمه الله)
– மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ (BBA(Hons) –
“வஹ்ததுல் வுஜூத்” எனும் அத்வைதஞானம் பேசுகின்ற சூபிகளும் , ஞானிகளும் குறிப்பாக அஷ்ஷெய்குல் அக்பர் வல்மிஸ்குல் அத்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களும் அல்லாஹ்வுக்கு “தன்ஸீஹ்” “தஷ்பீஹ்” என்று இரு நிலைகள் இருப்பதாகவும், அவ்விரண்டுக்கும் திருக்குர்ஆனிலும், திருநபியின் நிறைமொழியிலும் ஆதாரங்களிருப்பதாகவும் அவ்விருநிலைகளில் தன்ஸீஹுடைய நிலையில் அவன் உருவமற்றவனாயும், சடமற்றவனாயும் சிருஷ்டிக்குள்ள சகல தன்மைகளை விட்டும் துய்யவனாக இருப்பானென்றும் தஷ்பீஹுடைய நிலையில் உருவமுள்ளவனாயும், சடமுள்ளவனாயும், சிருஷ்டிக்குள்ள சகல தன்மையுள்ளவனாயும் இருப்பானென்றும் விளக்கம் எழுதியுள்ளனர்.
இவ்விரு நிலைகள் பற்றித் திருக்குர்ஆனும், ஹதீஸும் கூறுவதால் இவ்விரண்டில் “தன்ஸீஹ்” என்னும் நிலையை மட்டும் நம்பிக் கொண்டு “தஷ்பீஹ்” என்னும் நிலையை நம்பாமல் விட்டவனும் அதேபோல் “தஷ்பீஹ்” என்னும் நிலையை நம்பிக் கொண்டு “தன்ஸீஹ்” என்னும் நிலையை நம்பாமல் விட்டவனும் காபிர்களாவர்கள் என்றும், இரண்டு நிலைகளையும் ஒன்று சேர்த்து நம்பினவன் மட்டும்தான் உண்மை விசுவாசியாவான் என்றும் கூறியுள்ளார்கள்.
இவ்விவரத்தை உள்ளடக்கியதாக இமாம் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நாலடிகளைக் கொண்ட கவியொன்றை நயம்படக் கூறியுள்ளார்கள். Continue Reading
“கவ்ன்” என்ற அறபுச் சொல் அல்லாஹ் படைத்த அனைத்துப் படைப்புக்களையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். சுருக்கமாகச் சொன்னால் “பிரபஞ்சம்” என்று சொல்லலாம்.
பிரபஞ்சம் என்பது “ஐஸ்” கட்டி போன்றது. அதன் வெளித்தோற்றம் திண்மமானதும் , அதன் உள் தோற்றம் திரவமானதுமாகும். “ஐஸ்” கட்டி கரைந்து விட்டால் அதன் மூலமான தண்ணீராய் அது மாறி விடும். அப்போது “ஐஸ் கட்டி” என்ற பெயர் “இஸ்ம்” இல்லாமற் போவதுடன் அதன் “ஸிபத்” கடுங்குளிர் என்ற அதை ஒட்டி நின்ற தன்மையும் இல்லாமற் போய் விடும். ஐஸ் கட்டிக்குள்ள எல்லாத் தன்மைகளும் அற்றுப் போய் விடும். ஐஸ் கட்டி கொண்டு பெறப்பட்ட பயன்கள் அது கரைந்து தண்ணீரான பின் பெற முடியாமற் போய்விடும்.
சிறு விளக்கம்:
(உதாரணமாக மீன், இறால், இறைச்சி போன்ற நீண்ட நேரமிருந்தால் பழுதடையக் கூடிய உணவுகளை ஐஸ் கட்டியுடன் கலந்து வைத்தால் அவை பழுதடைய மாட்டா. அதற்குப் பதிலாக ஐஸ் கட்டியின் மூலமான தண்ணீருடன் கலந்து வைத்தால் அவை பழுதடைந்து விடும்.
பழங்கள், கீரைகள் போன்றவற்றை “ப்றிட்ஜ்” குளிரூட்டியில் வைத்தால் அவை பல நாட்கள் பழுதடையாமல் இருக்கும். ஆனால் தண்ணீருடன் அவற்றைக் கலந்து வைத்தால் அவை பழுதடைந்து விடும்.
மேற்கண்ட உதாரணங்கள் மூலம் “ஐஸ்கட்டி”யின் “ஸிபத்” தன்மை ஒரு வகை என்பதும், அதன் மூலமான தண்ணீரின் தன்மை அதற்கு மாறுபட்ட இன்னொரு வகை என்பதும் தெளிவாகின்றது. Continue Reading
– மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) BBA. Hons. –
படைப்புகளைப் பற்றி சிந்திக்குமாறு அல்குர்ஆன்
நிச்சயமாக, வானங்கள், பூமி, ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறிமாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப்புறங்களில் சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, ‘எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!
அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபம்.
‘பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்;நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்’ என்று (நபியே!) நீர்கூறுவீராக.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அல்குர்ஆனின் திருவசனங்களின் மூலம் படைப்புகளைப் பற்றி சிந்திக்குமாறு அல்லாஹ் தஆலா கூறுகிறான். Continue Reading