உலகுக்கோர் அருட்கொடையாய் வந்துதித்த பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வந்துதித்த புனித றபீஉனில் அவ்வல் மாதத்தைச் சிறப்பிக்குமுகமாக 24.01.2012 (செவ்வாய்க்கிழமை) அன்று காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மற்றும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பில் கூட்டிணைக்கப்பட்டுள்ள மஸ்ஜிது மன்பஉல் ஹைறாத், அல்மத்ரஸர் றஹ்மானிய்யஹ், அல்மத்ரஸதுல் இப்றாஹீமிய்யஹ் ஆகிய தாபனங்களிலும் திருக்கொடியேற்றப்பட்டு தொடர்ந்து பெருமானார் பெயரிலான மௌலித் ஷரீப்பும் ஓதப்பட்டது. இந்நிகழ்வுகள் தொடர்ந்து 12 தினங்கள் நடைபெறும்.