Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்

ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்

ஜும்ஆ

மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ

ஜும்ஆ என்ற அரபு வார்த்தைக்கு ஒன்று கூடுதல் என்றுபொருள். ஜும்ஆ தொழுகை உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டும் உரிய வணக்கமாகம். அடிமைகள், நோயாளிகள், குழந்தைகள் பெண்கள் ஆகியோர் தவிர பருவம் அடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜும்ஆ கடமையாகும்.
ஐங்காலத் தொழுகையின் ஷர்த்துக்களுடன் விஷேடமான ஆறு ஷர்த்துக்கள் ஜும்ஆத்தொழுகைக்கு உள்ளன.
1. குறைந்தபட்சம் ஜும்ஆவின் முத ல்ரக்அத்தாவது ஜமாஅத்துடன் சேர்ந்து நிறைவு செய்யப்படவேண்டும். அனைவரும் முதல் றக்அத்தை ஜமாஅத்தாக நிறைவுசெய்தபின் இமாமுக்கு சிறுதொடக்கு ஏற்பட்டால் அல்லது வேறுகாரணத்தால் இம்மைவிட்டு பிரிந்து, தனியாக இரண்டாம் ரக்அத்தை நிறைவேற்றினாலும் ஜும்ஆ நிறைவேறிவிடும். பிந்தி வருபவர்கள் இமாமின் இரண்டாவது ரக்அத்தில் அவர் ருகூவிலிருந்து எழும் முன்பாக அவருடன் சேர்ந்துஒரு ரக்அத்தை நிறைவேற்றிய பின்பு மறு ரக்அத்தை தனியாக தொழுதாலும் ஜும்ஆ நிறைவேறும். ஆனால் இரண்டாவது ரக்அத்தின் ருகூவிலிருந்து இமாம் எழுந்த பின்பு அவரை வந்துதொடரும் மஃமூம் ஜும்ஆதொழுவதாக நிய்யத்செய்து கொண்டு இமாமைப்பின் தொடர்ந்து இமாம் ஸலாம் கொடுத்த பின் ளுஹராக (நான்கு ரக்அத்கள்) தொழவேண்டியது அவசியமாகும்.
2. ளுஹர் தொழுகையின் வக்துக்குள் ஜும்ஆவும் அதன் குத்பாவும் நிறைவு செய்யப்படவேண்டும்.
3. ‘ஜும்ஆ’ தொழும் அதேஊரைச் சேர்ந்த உள்ளுர்வாசிகளான பருவம் அடைந்த, நாற்பது ஆண்கள் தொழுகையிலும் குத்பாவிலும் கலந்துகொள்ள வேண்டும். அவர்கள் அனைவருக்கும் தவறின்றி பாத்திஹாசூரா ஓதத்தெரிந்திருக்க வேண்டும்.
4. ஜும்ஆ கடமையான ஊரினுள் ஜும்ஆ தொழவேண்டும். ஊரின் புறப்பகுதியில் தொழுதால் ஜும்ஆ நிறைவேறாது.
5. ஊரிலுள்ள அனைவரும் ஒரே இடத்தில் எவ்விதச்சிரமும் இன்றி’ ஜும்ஆ’ தொழவசதியிருப்பின், ஒரே ஜும்ஆதான் நிறைவேற்றப்பட வேண்டும்.
குத்பா:
ஜும்ஆ நாளன்று நிறைவேற்றப்படும் இரு குத்பாக்களையும் தொழுகைக்கு முன்பு ஓதுவது அவசியமாகும். ஜும்ஆ நாள் குத்பா ஓதுவது பர்ழாகும்.
குத்பாவின்பர்ழுகள்:
இரண்டு குத்பாக்களும் ஹம்து ஸலவாத்து கொண்டு தொடங்கப்பட வேண்டும். ‘அல்ஹம்துலில்லாஹ், அஹ்மதுல்லாஹ், அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் ஸல்லல்லாஹுஅலா முஹம்மதின்’ என இவைகளுக்குரிய வாசகங்களை ஓதுவது அவசியமாகும்.
இரு குத்பாக்களிலும் இறையச்சம் பற்றி போதிக்கப்படவேண்டும்.
குர்ஆன்ஷரீபிலுள்ள பொருள் பொதிந்த முழுமையான ஒரு ஆயத்தினை இரு குத்பாக்களில் ஒன்றில் ஓதுவது அவசியமாகும் எனினும் ஆயத்தை முதல் குத்பாவில் ஓதுவது சிறப்புடையதாகும்.
இரண்டாவது குத்பாவில் மு.ஃமின்களின் மறுமைப்பேறுக்காக துஆ செய்வது அவசியமாகும்.
குத்பாவின்ஷர்த்துக்கள்:
1. குத்பாவின் பர்ளான பகுதிகளை நாற்பது நபர்கள் கேட்கக்கூடிய அளவிற்கு சப்தமிட்டு ஓதுவது.
2. அரபு வாக்கியங்களினால் ஓதுவது.
3. நின்று ஓத சக்தியுள்ளோர் நின்று ஓதுவது.
4. இருகுத்பாக்களுக்கும்இடையில்சிறிதுநேரம்அமர்வது.
5. அவ்ரத்தை (மானஉறுப்புகளை) மறைப்பது.
6. உடல், ஆடை,இடம் ஆகிவை பெரிய சிறிய தொடக்குகளை விட்டும் நஜீஸ்களை விட்டும் சுத்தமாக இருப்பது.
7. இரு குத்பாக்களின் பர்ழுகள் தொழுகை ஆகியவற்றை முறையே தொடர்ந்து செய்வது.
8. கதீப் ஆணாக இருப்பது.
9. ளுஹ்ரின் வக்தில் குத்பா ஓதுவது.
10. குத்பாக்களை தொழுகைக்கு முன் ஓதுவது.
இமாம் குத்பா ஓதும்போது குத்பாவை காதுதாழ்த்தி கேட்பதைப் போன்று மௌனமாக இருப்பது சுன்னத்தாகும். குத்பாவில் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெயரைக் கேட்டால் ஸலவாத்து சொல்வதும் ஸஹாபாக்கள் பெயரைக்கேட்டால் ரலியல்லாஹுஅன்ஹு சொல்வதும் குத்பாவில் துஆ ஓதினால் அதற்கு ஆமீன் சொல்வதும் சுன்னத்துகளாகும். இமாம் குத்பா ஓதும் போது பேசுவது மக்ரூஹ் ஆகும்.
பள்ளிவாசலில் மக்களைத் தாண்டிச் செல்வது மக்ரூஹ் ஆகும்.
ஜும்ஆவின் முதல் அதானிற்குப்பிறகு வியாபாரம் போன்ற கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது மக்ரூஹும் அதன் இரண்டாம் பாங்கு அதானிற்குப்பிறகு ஈடுபடுவது ஹராமும் ஆகும்.
போகும் வழியில் அல்லது போய்ச்சேரும் ஊரில் ஜும்ஆதொழ முடியாத போது ஜும்ஆ தொழுகையை விட்டுவிட்டு வெள்ளிக்கிழமை பஜ்ருக்குப்பின் பயணம்புறப்படுவது ஹராமாகும்.
ஜும்ஆவின்சுன்னத்துகள்:
ஜும்ஆவிற்காக குளிப்பது, குளிக்க இயலாதோர் தயம்மும் செய்வது, நகம் வெட்டுவது, கக்கம் மற்றும் மறைவிட முடிகளைக் களைவது, மீசை கத்தரிப்பது, உடல் மற்றும் ஆடையின் அழுக்குகளை அகற்றுவது ஆகியவை சுன்னத்துகளாகும்.
தன்னிடமுள்ள உயர்ந்த ஆடைகளை உடுத்துவது, நறுமணம் பூசிக்கொள்வது, ஜும்ஆவிற்கு ஒரு வழியாகச்சென்று வேறு வழியாகத்திரும்பிவருவது, அமைதியாகவும், கம்பீரமாகவும் நடந்தேசெல்வது ஆகியவை சுன்னத்துக்களாகும். ஜும்ஆவிற்காக நேரத்தோடு வருவது சுன்னத்தாகும். கதீப் குத்பா ஓதும் நேரத்தில் வருவதே சுன்னத்தாகும்.
சூரத்துல் கஃபை ஜும்ஆவின் பகலில் அல்லது அதன் இரவில் ஓதுவது அதிகமதிகம் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து ஓதுவது, அதிகமாகது ஆக்களை ஓதுவதும், தர்மங்களையும் நன்மைகளையும் அதிகமாகசெய்வதும் சுன்னத்தாகும்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments