அஷ்ஷுப்பான் நலன்புரி அமைப்பானது இலங்கை நாட்டில் கடந்த 05 வருடங்களுக்கும் மேலாக அறப் பணிகளிலும், கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் முனைப்போடு செயற்பட்டுவரும் தன்னார்வ தொண்டு நிறுவனமாகும்.
இவ் அமைப்பானது DSK/SS/42 இலக்கத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனமாக இலங்கை அரசில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இவ்வமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒர் அங்கமாக எமது அங்கத்தவர்களால் எமது நாட்டு படைவீரர்களுக்காகவும் அரச வைத்தியசாலைகளுக்காகவும் இரத்ததான நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தவகையில் கடந்த 05/07/2012 அன்று கத்தார் நாட்டின் HAMAD MEDICAL CORPORATION அரச வைத்தியசாலைக்கான இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.

நன்றி
அஷ்ஷுப்பான் நலன்புரி அமைப்பு
கத்தார்