Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இஸ்லாத்தின் பார்வையில் கத்தம் ஓதுதல்

இஸ்லாத்தின் பார்வையில் கத்தம் ஓதுதல்

-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons) 
(Justice of The Peace Whole Island)
“கத்தம்” என்ற சொல் “கத்ம்”
அல்லது “கத்முன்” என்ற சொல்லிருந்து மருவி வந்த சொல்லாகும்.
இச்சொல்லுக்கு முடித்தல் என்று பொருள்வரும்.என்றாலும் இஸ்லாமிய பாரம்பரிய
நடைமுறையில் “கத்முல்குர்ஆன்” என்றால் குர்ஆனை முடித்தல் என்று பொருள்
கொள்ள வேண்டும்.  இதைச்சரியாக
மொழிவதாயினும், எழுதுவதாயின் “கத்ம்”  என்றே
மொழியவும், எழுதவும் வேண்டும். திருக்குர்ஆன் 30 பாகங்களைம் ஓதி முடித்த பின் அதன்
நன்மையை மரணித்தவர்களுக்குச் சேர்த்து வைப்பதை “கத்முல்குர்ஆன்” நிகழ்வு
என்றும், திருக்குர்ஆன் “தமாம்” நிகழ்வு என்றும்
சொல்லப்படுகிறது.
கத்ம்
ஓதுதல் பித்அத்த அல்ல
இறந்தவர்களுக்கு கத்ம்
ஓதும் வழக்கம் நபி(ஸல்) அவர்களின் காலத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட காரியம்
அல்ல. நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் ஸஹாபாக்கள்,தாபியீன்கள் காலத்திலும் நடைபெற்றுவந்த
ஸுன்னத்தான விடயமாகும்.இந்தவிடயம் தற்காலத்தில் “பித்அத்” என சிலரால் பிரச்சாரம் செய்யப்படுகிறது.இதற்கு எந்த
அடிப்படையும் இல்லை.ஆனால் இறந்தவர்களுக்கு கத்ம் ஓதுவதற்கு தெளிவான பல ஆதாரங்கள்
உள்ளன. அவற்றில் சிலதைமட்டும் இங்கு தருகின்றேன்.
إذا مات أحدكم فلا تحبسوه وأسرعوا به إلى قبره، وليقرأ عند رأسه
بفاتحة الكتاب وعند رجليه بخاتمة البقرة في قبره
والطبراني
(12/444 رقم 13613) والبيهقي في الشعب (7/16 رقم9294
)

“உங்களில்
ஒருவர் மரணித்தால் அவரை தாமதிக்காமல் கப்றுக்குகொண்டு செல்லுங்கள்.அவரது
தலைப்பக்கமாக சூறதுல் பாதிஹா ஓதுங்கள்.அவரது கால் பக்கமாக சூறதுல் பகராவின் கடைசிப்பகுதியை
ஓதுங்கள்” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்01– தப்றானீ,ஹதீஸ் இல – 13613
ஆதாரம்02–பைஹகீ, ஹதீஸ் இல – 9294
ـحدثنامُحَمَّدُبنُالْعَلاَءِوَمُحَمَّدُبنُمَكِّيِّالمَرْوَزِيُّالمَعْنِيقالاَأخبرناابنُالمُبَارَكِعنسُلَيْمَانَالتَّيْمِيِّعنأبيعُثْمَانَوَلَيْسَبالنَّهْدِيِّعنْأبِيهِعنمَعْقِلِبنيَسَارٍ،قالَقالَرَسُولُاللهصلىاللهعليهوسلّم:
«إِقْرَؤوايسعَلَىمَوْتَاكُمْ»وَهذَالَفْظُابنِالْعَلاَءِ
உங்களில் மரணித்தவர்கள்
மீது “யாஸீன்” ஓதுங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் – அபூதாவூத், ஹதீஸ் இல – 3123
ـحدّثناعبداللهحدَّثنيأبيثنابنالمباركحدثناسليمانالتيميعنأبيعثمانـوليسبالنهديـعنأبيهعنمعقلبنيسارقال:
قالرسولاللهصلىاللهعليهوسلّم: «اقرءوهاعلىموتاكم،يعنييس».
உங்களில் மரணித்தவர்கள்
மீது “யாஸீன்” ஓதுங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் –முஸ்னத் அஹ்மத், ஹதீஸ் இல – 19915
جزء 3
ص288و289
وبماأخرجأبومحمدالسمرقنديفيفضائل {قلهواللهأحد}
عنعليمرفوعاً: منمرعلىالمقابروقرأ {قلهواللهأحد} إحدىعشرةمرةثموهبأجرهللأمواتأعطىمنالأجربعددالأموات.
யார்
கப்றுகளுக்குச்சென்று “குல் ஹுவல்லாஹு அஹத்” சூராவை 11 தடவை ஓதி அதன் நன்மை​யை
மரணித்தவர்களுக்கு வழங்கினாரோ அவருக்கு அந்த மரணித்தவர்களின் எண்ணிக்கைக்கு நன்மை
கிடைக்கும். என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் 01–(துஹ்பதுல்
அஹ்வதீ ஷறஹ் ஸுன்ன் திர்மிதீ,பக்கம்288,289) 
ஆதாரம் 02 -உம்ததுல் காரீ,
பாகம்-02,பக்கம்598
அறிவிப்பு – அலீ(றழி)

وبماأخرجأبوالقاسمسعدبنعليالزنجانيفيفوائدهعنأبيهريرةقال:
قالرسولاللهصلىاللهعليهوسلّم: «مندخلالمقابرثمقرأفاتحةالكتابوقلهواللهأحدوألهاكمالتكاثرثمقالإنيجعلتثوابماقرأتمنكلامكلأهلالمقابرمنالمؤمنينوالمؤمناتكانواشفعاءلهإلىاللهتعالى»،
யாராவது
கப்றுகளுக்குச்சென்று சூறதுல் பாதிஹாவையும் “குல் ஹுவல்லாஹு அஹத்” சூறாவையும்
அல்ஹாகுமுத்தகாதுர் சூறாவையும் ஓதி அதன் பிறகு இறைவா உனது கலாமிலிருந்து நான்
இப்போது ஓதிய சூறாக்களின் நன்மையை முஃமினான கப்றுவாசிகளுக்கு சேர்த்துவிட்டேன்
என்று கூறினால் அவர்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யக்கூடியவர்களாக ஆகிவிடுவார்கள்.
என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் – துஹ்பதுல்
அஹ்வதீ ஷறஹ் ஸுனன் திர்மிதீ,பக்கம்288,289
وبماأخرجصاحبالخلالبسندهعنأنسأنرسولاللهصلىاللهعليهوسلّمقال:
«مندخلالمقابرفقرأسورةيسخففاللهعنهموكانلهبعددمنفيهاحسنات» . ،
யாராயினும்
கப்றுகளுக்குச்சென்று “யாஸீன் சூராவை ஓதினால்
அந்நாளில் அல்லாஹ் அந்த கப்றுடையவர்களின் ​வேதனையை இலேசாக்குவான்,அத்துடன்
அவருக்கு அந்த மரணித்தவர்களின் எண்ணிக்கைக்கு நன்மை கிடைக்கும்.  என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்01 – துஹ்பதுல்
அஹ்வதீ ஷறஹ் ஸுனன் திர்மிதீ,பக்கம்288,289
ஆதாரம்02 -உம்ததுல் காரீ
பாகம்-02,பக்கம்598
ஆதாரம் 03-
அல்பஹ்றுர்றாயிக் பாகம்-02,பக்கம்343

عن ابي بكر الصدّيق رضي الله عنه قال رسولاللهصلىاللهعليهوسلّم من زار قبر
والديه او احدهما فقرأ عنده أو عندهما يس غفر له
யார் தனது தாய் தந்தையரில்
ஒருவரையோ அல்லது இருவரையுமோ கப்றுக்குச்சென்று தரிசித்து அங்கு  யாஸீன் ஓதுவாராயின் அவரின் பாவங்கள்
மன்னிக்கப்படுகிறது. என
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

 ஆதாரம்01- உம்ததுல் காரீ பாகம்-02,பக்கம்598,
அறிவிப்பு- அபூபக்ர்
ஸித்தீக்(றழி)
ஆதாரம்02-தபகாதுல்
முஹத்திதீன்,பாகம்-03,பக்கம்332
ஆதாரம்03-அத்துர்றுல்
மன்தூர்,பாகம்05,பக்கம்257
ஆதாரம்04-ஜாமிஉஸ்ஸகீர்,பாகம்02,பக்கம்605
القراءة عند القبور لأبي بكر بن الخلال
رقم الحديث: 7
أَخْبَرَنِي أَبُو يَحْيَى النَّاقِدُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ
بْنُ وَكِيعٍ، قَالَ: حَدَّثَنَا حَفْصٌ، عَنْ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ،
قَالَ: «كَانَتِ الْأَنْصَارُ إِذَا مَاتَ لَهُمُ الْمَيِّتُ اخْتَلَفُوا إِلَى
قَبْرِهِ يَقْرَءُونَ عِنْدَهُ الْقُرْآنَ
அன்ஸாரிஸஹாபாக்களில் ஒருவர் மரணித்தால்
அவரின் கப்றுக்கு சென்று அவர்கள் எல்லோரும் பலவாறாகப்பிரிந்து அவ்விடத்தில்
குர்ஆன் ஓதுவார்கள்

 ஆதாரம் 01-அல்கிறாஅது
இன்தல் குபூர், பாகம் 1,பக்கம் 89
ஆதாரம் 02-மிர்காத், பாகம் 4,பக்கம் 198
وأورد ابن حجر في تلخيص الحبير عن الشعبي قال:
“كانت الأنصار يستحبُّون أن يقرأوا عند الميت سورة البقرة”(
11).
(- تلخيص الحبير- ابن حجر- لابن حجر ج5 ص113، حاشية رد المحتار- ابن
عابدين- ج2 ص207.)
அன்ஸாரிஸஹாபாக்கள் மையித்திடத்தில் சூறதுல் பகறாவை ஓதுவதை முஸ்தஹப்பாக
கருதினார்கள்.

ஆதாரம்1 – தல்கீஸுல் கபீர், பாகம்-05,பக்கம்-113
ஆதாரம்2 – றத்துல் முக்தார்,பாகம்-2,பக்கம்-207
وقال الخرائطي في كتاب القبور: {سُنة في الأنصار إذا
حملوا الميت أن يقرءوا معه سورة البقرة
 
அன்ஸாரிஸஹாபாக்களின் வழமை மையித்தை அடக்கம்செய்வதற்காக சுமந்துசெல்லும்​ போதே சூரதுல் பகறாவை
ஓதிக்காண்டுசெல்வதாகஇருந்தது. 

ஆதாரம்-கிதாபுல் குபூர்,
அத்தத்கிறா,பக்கம்-111
49للـطبراني1المعجم الكبير
حدثناأبوأسامةعبداللهبنمحمدبنأبيأسامةالحلبيثناأبي
( ح ) # وحدثناإبراهيمبندحيمالدمشقيثناأبي ( ح ) # وحدثناالحسينبنإسحاقالتستريثناعليبنبحرقالواثنامبشربنإسماعيلحدثنيعبدالرحمنبنالعلاءبناللجلاجعنأبيهقالقالليأبي
: يابنيإذاأنامتفألحدنيفإذاوضعتنيفيلحديفقلبسماللهوعلىملةرسولاللهصلىاللهعليهوسلمثمسنعلىالثرىسناثماقرأعندرأسيبفاتحةالبقرةوخاتمهافإنيسمعترسولاللهصلىاللهعليهوسلميقولذلكمناسمهلبيبة   – لبيبةالانصاري
என்தந்தை
எனக்குச்சொன்னார்கள் “நான் மரணித்து என்னை கப்றில் வைத்தால் 
بسماللهوعلىملةرسولاللهصلىاللهعليهوسلم என்றுசொல்லிமண்ணை
மூடிவிட்டு எனது தலைப்பக்கத்தில் சூரதுல் பகறாவின் ஆரம்பத்தையும் இறுதியையும் ஓதுங்கள் இதை நான் நபி(ஸல்)
அவர்கள்சொல்லக்கேட்டேன்” என்றுசொன்னார்கள்.

ஆதாரம்- தப்றானீ,ஹதீஸ் இல-491,அறிவிப்பு-அப்துர்றஹ்மான்
இப்னு அலா(றழி)
وأورد ابن قدامة في المغني قال: “وقد رُوي عن أحمد
أنّه قال: “إذا دخلتم المقابر اقرأوا آية الكرسيّ وثلاث مرَّات (قل هو الله
أحد) ثُمّ قل اللهمّ إنّ فضله لأهل المقابر”(
14).
– المغني- عبد الله بن قدامه- ج2 ص424، وفي الشرح الكبير
لعبد الرحمن بن قدامة قال: ولا تُكره القراءة على القبر في أصح الروايتين هذا هو
المشهور عن أحمد فإنه روي منه) ج2 ص424.
அஹ்மத் இப்னு ஹன்பல்(றழி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள் “நீங்கள் கப்றுகளுக்குச்சென்றால் ஆயதுல் குர்ஸீயும்
மூன்று தடவை “குல் ஹுவல்லாஹு அஹத்” சூராவும் ஓதி அதன் பின் இறைவா இதன் சிறப்பை (நன்மை​யை)
மரணித்தவர்களுக்கு சேர்த்துவைப்பாயாக என்று சொல்லுங்கள்”.

ஆதாரம் – முக்னீ,பாகம்-02,பக்கம்424

وأورد ابن قدامة في المغني عن محمد بن قدامة الجوهري
قال: “أخبره مبشِّر الحلبي عن أبيه أنه أوصى إذا دُفن يقرأ عنده بفاتحة
البقرة وخاتمتها، وقال: سمعت ابن عمر يوصي بذلك”(
15).
– المغني- عبد الله بن قدامه- ج2 ص425، الشرح الكبير
لابن قدامة ج2 ص425، وفي تلخيص الحبير- ابن حجر- لابن حجر أورد رواية عن ابن
اللجاج عن الرسول (ص) بنفس المفاد ج5 ص210.
முபஷ்ஷிர் அல் ஹலபீ அவர்களின்
தந்தை பின்வருமாறு வஸிய்யத்சொன்னார்கள்.”கப்றில் அடக்கம் செய்யப்பட்டபின் அங்கு சூறதுல் பகறாவின்
ஆரம்பத்தையும் இறுதியையும் ஓதுங்கள். இப்னு உமர்(றழி) அவர்கள் இவ்வாறு வஸிய்யத்
செய்வதை நான் கேட்டேன்”
ஆதாரம் – முக்னீ,பாகம்-02,பக்கம்425
மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களை
நாம் ஆராய்ந்து பார்க்கும்போது நபி(ஸல்)அவர்கள் மரணித்தவருக்காக அல்குர்ஆனை
ஓதுமாறு பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அத்துடன் ஸஹாபாக்கள் மரணித்தவருக்காக
அல்குர்ஆன் ஓதுவதை நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கு அமைவாக தமது வழக்கமாகக்கொண்டிருந்தார்கள்
என்பதை நாம் தெளிவாக புரியக்கூடியதாகவுள்ளது. வஹாபிகள் சொல்வதுபோல்
மரணித்தவர்களுக்காக அல்குர்ஆன் ஓதுவது பித்அத்தான விடயம் அல்ல.நபி(ஸல்) அவர்கள்
மரணித்தவருக்காக அல்குர்ஆன் ஓதுமாறு கட்டளையிட்டார்களே தவிர எந்த
சந்தர்ப்பத்திலும் அதை தடைசெய்யவில்லை.இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் தடைசெய்யாத
விடயத்தை நிறுத்துவதற்கு இவர்கள் மேற்கொள்ளும் முயற்ச்சி பெருவியப்பை எமக்கு
ஏற்படுத்துகிறது. அத்துடன் நபி(ஸல்) அவர்களின் ஸுன்னத்தான இந்த விடயத்தை
நடைமுறைப்படுத்தும் ஸுன்னத்வல்ஜமாஅத் கொள்கைவாதிகளை பித்அத்வாதிகள் என குறிப்பிடுவது
இஸ்லாமிய அடிப்படைகளை அழித்தொழிக்கும் கூற்றாகும். என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
மரணித்தவருக்காக செய்யப்படும் நல்லமல்கள் அவரைச்சென்றடைகின்றது.அதிலும் குறிப்பாக
அல்குர்ஆன் ஒதுமபோது அதன் நன்மைகள் அவரைச்சென்றடைகின்றது. இதுவே இஸ்லாத்தின்
தீர்ப்பாகும்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments