Tuesday, October 8, 2024
Homeநிகழ்வுகள்சிறப்பு காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும்,ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களின் 69வது பிறந்த தின நிகழ்வுகளும்

சிறப்பு காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும்,ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களின் 69வது பிறந்த தின நிகழ்வுகளும்

காதிரிய்யஹ், நக்‌ஷபந்திய்யஹ் தரீகஹ்களின் ஷெய்க் நாயகம் கலாநிதி ஷம்ஸுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (தால உம்றுஹு) அன்னவர்களின் 69வது பிறந்த தின நிகழ்வுகள் 05.20.2013 செவ்வாய் மாலை புதன் இரவு இஷாத் தொழுகையின்பின் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வகள் அனைத்தும் மிஸ்பாஹீ நாயகமர்களின் முரீதீன்களின் சபையான காதிரிய்யஹ் திருச்சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரவு 8.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வுகள் 11.00 மணியளவில் நிறைவுற்றன.

இவ்விழாவின் ஆரம்பத்தில் மிஸ்பாஹீ நாயகத்தின் விஷேட உரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸ் இடம்பெற்றது.
அதன்பின் மிஸ்பாஹீ நாயகத்தை கௌரவிக்குமுகமாக காதிரிய்யஹ் திருச்சபையின் தலைவரும், றப்பானிய்யஹ் அறபுக்கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளருமான மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ  அவர்களினால்  மிஸ்பாஹீ நாயகத்திற்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து காதிரிய்யஹ் திருச்சபை சார்பாக அதன் செயலாளர் HM. அமீர் ஆங்கில ஆசிரியர் அவர்களினால்  மிஸ்பாஹீ நாயகம் அவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.
அதன்பின்னர் அஷ்ஷுப்பான் சங்கம் சார்பாக அதன் பணிப்பாளர் சட்டத்தரணி MI. அஜ்மீர் ஹாஜா நவாஸ் அவர்களினால் மற்றுமொரு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.
மற்றும் இவ்விழாவில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பினால் அதன் கீழுள்ள 8 ஸ்தாபனங்களுக்கு அல்குர்ஆன் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
தொடர்ந்து தீன் நகர் பன்பஉல்ஹைறாத் பள்ளிவாயல் சார்பாக அதன் தலைவர் அல்ஹாஜ் ஹகீமினால் அன்பளிப்பும் வழங்கப்பட்டது.
மேலும் அஷ்ஷுப்பான் சங்கத்தினால் சகோதரர் மஷ்ஹுர் அவர்களின் சத்திர சிகிச்சைக்காக அதன் தவிசாளர் சங்கைக்குரிய மிஸ்பாஹீ நாயகத்தினால் காசோலை வழங்கப்பட்டது. இதில் றப்பானிய்யாஹ் அறபுக்கலாபீட மாணவன் MS. கரீப் நாஜீ அவர்களின் இஸ்லாமிய கீதமும் இடம்பெற்றது.
இறுதியாக ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகத்தின் நீண்ட ஆயுள்வேண்டி விஷேட துஆப்பிரார்தனை இடம்பெற்றது. இதனை றப்பானிய்யாஹ் அறபுக்கலாபீட அதிபரும் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் தலைவருமான கவித்திலகம் மௌலவீ HMM. இப்றாகீம் நத்வீ அவர்கள் நடாத்திவைத்தார்கள். தொடர்ந்து தபர்றுக் விநியோகம் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் உலமாக்கள், மிஸ்பாஹீ நாயகத்தின் முரீதீன்கள், முஹிப்பீன்கள், ஆதரவாளர்கள், சிறுவர்கள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர். இறுதியாக ஸலவாத்துடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.
யாஅல்லாஹ் மிஸ்பாஹீ நாயகத்தின் வாழ்நாளை 100 வயதுக்கு மேல் பூரண உடல் ஆரோக்கியத்துடன் வாழச் செய்வாயாக! 
ஆமீன் – யாறப்பல் ஆலமீன்
காதிரிய்யஹ் திருச்சபை
BJM. வீதி, காத்தான்குடி – 05.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments