அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் மௌலவீ
மாணவர் MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ
1. பெருமானார் (ஸல்) அவர்கள் மற்ற ஆடைகளை விட ”கமீஸ்” எனப்படும் கால் வரையுள்ள நீண்ட ஜுப்பாவை மிக விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.
ஆனால் ”கமீஸ்” என்பது எந்த ஆடை என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது.
2. பெருமானார் (ஸல்) அவர்களின் சட்டைக் கைகள் மணிக்கட்டு வரை இருக்கும்.
சட்டக்கைகள்மிக இறுக்கமாகவோ விசாலமாகவோ இல்லாமல் நடுத்தரமாக இருக்கும்.
3. பெருமானார் (ஸல்) அவர்கள் பயணங்களில் அணியும் ஆடைகள் உயரம் சற்று குறைவாகவும், கைகள் சற்று சிறியதாகவும் இருக்கும்.
4. பெருமானார் (ஸல்) சட்டையின் பிளவு கழுத்திலிருந்து நெஞ்சு வரையிருக்கும்.
5. ஒரு சில நேரங்களில் பட்டனை திறந்து வைத்திருப்பார்கள்.
இதன் காரணமாக பெருமானார் (ஸல்) அவர்களின் புனித நெஞ்சுப் பகுதிகள் வெளியே தெரியும்.
இதே நிலையில் நபியவர்கள் தொழுதும் இருக்கிறார்கள்.
6. சட்டை அணியும் போது முதலில் வலது கையையும், பின்னர் இடது கையையும் அணிவார்கள்.
7. சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு ஆடைகளை வெறுக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
8. பெருமானார் (ஸல்) அவர்கள் காற்சட்டை ஒரு தடவை கூட அணிந்ததில்லை. சாரன்தான் அணிவார்கள். ஆனால் ஒரு காற்சட்டையை வாங்கி வைத்திருந்த போதும் அதை அணியவில்லை.
பெருமானார் முன்னிலையில் தோழர்கள் காற்சட்டை அணிந்து வந்துள்ளார்கள். அதை நபியவர்கள் பார்த்திருக்கிறார்கள்.
9. பெருமானார் (ஸல்) அவர்கள் தொப்புழுக்கு கீழேதான் சாரன் கட்டுவார்கள்.
அரைக்கெண்டை வரை சாரன் இருக்கும்.
10. சாரன் அணிந்திருக்கும் போது பின் பகுதியை விட முன் பகுதி தாழ்ந்திருக்கும்.
11. பெருமானார் (ஸல்) அவர்கள் சில நேரங்களில் தங்கள் அணியும் துண்டு வலது கையின் கீழ் இருக்குமாறும் அதன் இரு முனைகளும் இடது கையின் தோள் புறத்தின் மேல் இருக்குமாறும் அணிவார்கள்.
12. வெண்ணிற ஆடைகள் பெருமானாருக்கு மிகவும் விருப்பமாகவும் இருந்தது.
வர்ண உடைகளில் பச்சை நிறத்தை மிகவும் விரும்புவார்கள்.
நபியவர்கள் கறுப்பு நிற தலைப்பாகை அணிபவர்களாக இருந்தார்கள்.
13. நபியவர்கள் புதிய ஆடை அணியும் போது
اَلْحَمْدُ لِلهِ الَّذِيْ كَسَانِيْ هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّيْ وَلَا قُوَّةَ
என்ற துஆவை ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.
14. நபியவர்கள் புதிய ஆடை அணிந்தால் பழைய ஆடையை ஏழைக்கு கொடுத்து விடுவார்கள்.
நபியவர்களின் தலைப்பாகை.
2. தலைப்பாகை இல்லையெனில் நெற்றியிலே ஒரு துணியைக் கட்டிக் கொள்வார்கள்.
3. தலைப்பாகை கட்டினால் அதில் அவசியம் துணியின் ஒரு முனையை கூஞ்சமாகத் தொங்கவிடுவார்கள். கூஞ்சம் ஏறத்தாழ ஒரு முழமிருக்கும்.
4. நபியவர்களின் தலைப்பாகையின் கூஞ்சம் முதுகுப்புறத்தில் இரண்டு தோள்களுக்குமிடையில் இருக்கும்.
5. நபியவர்களின் தலைப்பாகையைத் தலையில் சுற்றி அதன் கடைசிப்பகுதியை பின் பக்கத்தில் செருகுவார்கள். முன் பக்கத்தில் செருகுவதில்லை.
7. வெயில் கடுமையாக இருந்தால் தலைப்பாகையின் கூஞ்சத்தை முகத்தில் போட்டுக் கொள்வார்கள்.
8. நபியவர்கள் எப்போதும் தொப்பி அணிந்து அதன் மேல்தான் தலைப்பாகை அணியக்கூடியவர்களாக இருந்தார்கள்.
நபியவர்களின் மோதிரம்
2. சில சமயம் வலது கையிலும் சில சமயம் இடது கையிலும் அணிந்துள்ளார்கள்.
3. வெள்ளியிலாலான மோதிரமும், சில சமயம் அபீசீனிய நாட்டு கற்கள் பதித்த மோதிரமும் அணிந்துள்ளார்கள்.
4. மோதிரத்தின் கற்களை கையின் உள் பக்கம்- அதாவது உள்ளங்கைப் பக்கம் இருக்குமாறும் அணிவார்கள்.
5. நபியவர்கள் மோதிரத்தை சுண்டு விரலில் அணிவார்கள்.
6. நபியவர்களின் மோதிரத்திலே முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் என்று எழுதப்பட்டிருக்கும். அதற்கு மேல் ரஸுல் என்றும் அதற்கு மேல் அல்லாஹ் என்றும் எழுதப்பட்டிருக்கும்.
7. நபியவர்கள் மல சலம் தேவைகளை நிறைவேற்றச் செல்லும் போது அந்த மோதிரத்தை கழற்றி விட்டுச் செல்வார்கள்.
நபியவர்களின் தொப்பி
1. பெருமானார் (ஸல்) அவர்கள் வெள்ளைத் தொப்பி அணியக்கூடியவர்களாக இருந்தார்கள்.
2. நபியவர்கள் ஊரில் இருக்கும் போது தலையோடு ஒட்டிய தொப்பியை அணிவார்கள்.
3. பிரயாணத்தில் உயரமான தொப்பி அணிவார்கள். சில நேரங்களில் தொழும் போது மறைப்புக்காக அந்தத் தொப்பியை மறைப்புக்காக முன்னால் வைத்துக்கொள்வார்கள்.
4. நபியவர்கள் பூ வேலைப்பாடு செய்யப்பட்ட மொத்தமான தொப்பியும் அணிந்துள்ளார்கள்.
நபியவர்களின் காலணிகள்
1. நபியவர்கள் காலணிகளை அணியும் போது முதலில் வலது காலிலும் பின்பு இடது காலிலும் அணிவார்கள்.
கழற்றும் போது முதலில் இடது காலையும் பின்பு வலது காலையும் கழற்றுவார்கள்.
2. காலணி (shoe) அணிந்தால் அணிய முன் ஏதும் புச்சிகள், விஷ ஜன்துக்கள் வெளியே வந்துவிடுவதற்காக அந்த காலணி (shoe) தட்டிக் கொள்வார்கள்.
3. நபியவர்கள் காலணி (shoe) அணியும் போது சில நேரங்களில் நின்று கொண்டும் சில நேரங்களில் உட்கார்ந்து கொண்டும் அணிவார்கள்.
4. நபியவர்களின் காலணியில் இரண்டு குமிழ்களிருக்கும். (பெரு விரல் அதற்கு அடுத்த விரலுக்கு மத்தியில் ஒன்றும், சுண்டு விரல் அதற்கு அடுத்த விரலுக்கு மத்தியில் ஒன்றும் இருக்கும்)
5. நபியவர்கள் காலணியை எடுப்பதாக இருந்தால் இடது கையின் சுட்டு விரலைக் கொண்டு எடுப்பார்கள்.
6. நபியவர்களின் காலணி ஒரு ஜான் இரண்டு அங்குல நீளமுடையதாக இருந்தது.