Wednesday, October 9, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பித்அத்எல்லாம் வழிகேடாகுமா ?

பித்அத்எல்லாம் வழிகேடாகுமா ?

தொடர் – 02

நபி (ஸல்) அவர்கள் செய்யாமல் விட்ட விடயங்களைச் செய்வது வழிகேடாகுமா ? 

நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்வில் செய்யாமல் விட்ட விடயங்களைச் செய்வது கூடாது அது வழிகேடு என்ற கருத்து இன்று மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. 

நபி (ஸல்) அவர்கள் தடைசெய்த விடயங்களைச் செய்வது வழிகேடாகுமே தவிர அவர்கள் செய்யாமல் விட்ட விடயங்களைச் செய்வது வழிகேடாகாது. 

அல்லாஹ்தஆலா அல்குர்ஆனில் 

وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ﴾ [27] ) 

“றஸூல் (ஸல்) அவர்கள் கொண்டு வந்​ததை எடுத்து நடங்கள் அவர்கள் தடுத்ததை விட்டும் தவிர்ந்து நடங்கள்” என்றுகூறியுள்ளான். 
(அல்ஹஷர்-27) 

இந்த வசனத்தில் நபி (ஸல்) அவர்கள் செய்யாமல் விட்டதை தவிர்ந்து நடங்கள் என்று கூறப்படவில்லை என்பதை நாம் அவதானிக்க வேண்டும். எனவே நபி (ஸல்) அவர்கள் செய்யாமல் விட்டதை செய்வது கூடாது என்ற கருத்து தவறானதாகும். 

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் 

قال النبي صلى الله عليه وآله وسلم : «ما أمرتكم به فائتوا منه ما استطعتم وما نهيتكم عنه فاجتنبوه»([2][28]). 

“நான் ஏவியதை முடியுமான அளவு எடுத்து நடங்கள் நான் விலக்கியதை தவிர்ந்து நடங்கள்” 
(புஹாரீ-6068,முஸ்லிம்-7288,அஹ்மத்-18) 

இங்கு நபி (ஸல்) அவர்கள் “நான் செய்யாமல் விட்டதை தவிர்ந்து நடங்கள்” என்று கூறவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். எனவே நபி (ஸல்) அவர்கள் செய்யாமல் விட்டதை செய்வது கூடாது என்ற கருத்து தவறானதாகும். 

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, செய்யாத, முன்னர் அங்கீகரிக்காத பல விடயங்களை செய்தமைக்கான சில சான்றுகளை இங்கு நான் குறிப்பிடுகின்றேன். 

الطبراني271 – حدثنا أبو زرعة الدمشقي عبد الرحمن بن عمرو ثنا يحيى بن صالح الوحاطيثنا فليح بن سليمان عن زيد بن أبي أنيسة عن عمرو بن مرة الجملي عن عبد الرحمن بن أبي ليلى عن معاذ بن جبل قال : كنا نأتي الصلاة فاذا جاء رجل وقد سبق بشيء من الصلاة فأشار اليه الذي يليه وقد سبقت بكذا وكذا فيقضي قال : فكنا بين راكع وساجد وقائم وقاعد فجئت يوما وقد سبقت ببعض الصلاة وأشير الي بالذي سبقت به فقلت : لا أجده على حال الا كنت عليها فكنت بحالهم الذي وجدتهم عليها فلما فرغ رسول الله صلى الله عليه وسلم قمت فصليت واستقبل رسول الله صلى الله عليه وسلم الناس فقال : من القائل كذا وكذا ؟ قالوا : معاذ بن جبل فقال : قد سن لكم معاذ فاقتدوا به اذا جاء أحدكم وقد سبق بشيء من الصلاة فليصل مع الامام صلاته فاذا فرغ الامام فليقض ما سبقه به 

  1. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (ஜமாஅத்) தொழுகையில் சிலது தப்பிய பின்னர் ஒருவர் வந்தால் அவருக்கு பக்கத்திலுள்ளவர் தப்பிய விபரத்தை சுட்டிக்காட்டுவார். அவர் அதை தொழுதபின் (ஜமாஅத்) தொழுகையில் சேந்து கொள்வார். ஒரு நாள் நான் (முஆத்இப்னுஜபல் (றழி) அவர்கள்) தொழுகையில் சிலது தப்பியபின்னர் வந்தேன். எனக்கு தப்பிய விபரத்தை சுட்டிக்காட்டப்பட்டது. நான் எந்த நிலையில் வந்து சேர்ந்தேனோ அந்த நிலையிலிருந்தே தொழுவேன் என்று கூறிவிட்டு தொழுதேன். நபி( ஸல்) அவர்கள் தொழுது முடிந்தபின் நான் எழுந்து தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் யார் இவ்வாறு சொன்னது என்று கேட்டபோது முஆத் இப்னுஜபல் என்று ஸஹாபாக்கள் சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உங்களுக்கு முஆத் ஆரம்பித்து வைத்துள்ளார் அவரைபின் பற்றுங்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்) தொழுகையில் சிலது தப்பிய பின்னர் வந்தால் இமாமுடன் அவர் தொழட்டும். இமாம் தொழுது முடிந்தபின் தப்பியதை தொழட்டும்” என்று சொன்னார்கள்.
    (தப்றானீ-271) அறிவிப்பு -( முஆத்இப்னுஜபல் (றழி) 

وفي رواية سيدنا معاذ بن جبل: (إنه قد سن لكم معاذ فهكذا فاصنعوا)([3][38]). 

மற்றொரு அறிவிப்பில் “உங்களுக்கு முஆத் ஆரம்பித்து வைத்துள்ளார் அவ்வாறே செய்யுங்கள்” என்று சொன்னார்கள். 
(அஹ்மத்-22778, அபூதாவூத்-506, பைஹகீ-5352) 

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முன்னர் செய்து காட்டாத ஒரு செயலை முஆத் இப்னு ஜபல் (றழி) அவர்கள் செய்து காட்டுகின்றார்கள். இந்த செயல் தொழுகையின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அதை சரி கண்டார்கள். நான் செய்துகாட்டாத இந்த செயலை நீங்கள் செய்யக்கூடாது என்று முஆத் இப்னு ஜபல் (றழி) அவர்களையோ மற்ற ஸஹாபாக்களையோ நபி (ஸல்) அவர்கள் தடுக்கவுமில்லை எச்சரிக்கவுமில்லை. 

عن أبي هريرة رضي الله عنه أن نبي الله صلى الله عليه وآله وسلم قال لبلال عند صلاة الفجر: « يا بلال حدثني بأرجى عمل عملته في الإسلام فإني سمعت دُف نعليك في الجنة» قال: ما عملت عملا أرجى عندي من أني لم أتطهر طهورا في ساعة من ليل أو نهار إلا صليت بذلك الطهور ما كتب لي([4][40]). 

(ஒருநாள்) அதிகாலைத் தொழுகையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (றழி) அவர்களிடம், “பிலாலே!இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச்செய்து வரும் நற்செயல் ஒன்றைப்பற்றிக் கூறுவீராக. ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்” என்று சொன்னார்கள்.

அதற்கு பிலால் (றழி) அவர்கள், “நான் இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக கருதி அப்படி (பிரமாதமாக) எந்த நற்செயலையும் செய்யவில்லை. ஆயினும், நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக அங்கத்தூய்மை (வுளூ) செய்தாலும், அந்த அங்கத் தூய்மை மூலம் நான் தொழவேண்டும் என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல்தொழுகையை)த் தொழாமல் இருந்ததில்லை. (இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)” என்று கூறினார்கள் 

(புஹாரீ-1149, முஸ்லிம்-6274, அஹ்மத்-9533) 
அறிவிப்பு- அபூஹுரைரா (றழி) . 

وفي رواية : قال لبلال: «بم سبقتني إلى الجنة؟ قال: ما أذنت قط إلا صليت ركعتين وما أصابني حدث قط إلا توضأت ورأيت أن لله علي ركعتين فقال النبي صلى الله عليه وآله وسلم «بهما» أي نلت تلك المنزلة»([5][41]). 

மற்றொரு அறிவிப்பில் 

நபி (ஸல்) அவர்கள், பிலால் (றழி) அவர்களிடம் என்னை விட சொர்க்கத்திற்கு எதனால் முந்திச் சென்றீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு பிலால் (றழி) அவர்கள் நான் அதான் சொன்னால் இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருப்பதில்லை. எனக்கு (சிறு) தொடக்கு ஏற்பட்டால் வுழூச் செய்து இரண்டு ரக்அத்துகள் தொழுவதை அல்லாஹ்வுக்காக நான் என் மீது கடமையாக்கிக்கொண்டேன் என்று சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதைக் கொண்டுதான் இந்த படித்தரத்தை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள். என்று சொன்னார்கள். 

(அஹ்மத்-22658, இப்னுஹுஸைமா-1209, 
ஹாகிம்-1/313, துர்முதீ-3689, தப்றானீ-1/1012) 

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முன்னர் செய்து காட்டாத ஒரு செயலை பிலால் (றழி)அவர்கள் செய்துள்ளார்கள். இந்த செயல் ஒரு தொழுகையாக இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அதை சரி கண்டார்கள் நான் செய்துகாட்டாத இந்த தொழுகையை நீங்கள் தொழக்கூடாதுஎ ன்று பிலால்( றழி) அவர்களையோ மற்ற ஸஹாபாக்களையோ நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை. மாறாக சொர்க்கத்தில் இந்த படித்தரத்தை அதைக் கொண்டுதான் நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் என்று வாழ்த்தினார்கள். 

صحيح مسلم (6807) ـ حدّثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ. حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ عَنْ أَبِي نَعَامَةَ السَّعْدِيِّ. عَنْ أَبِي عُثْمَانَ. عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: خَرَجَ مُعَاوِيَةُ عَلَى حَلْقَةٍ فِي الْمَسْجِدِ. فَقَالَ: مَا أَجْلَسَكُمْ؟ قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللّهَ. قَالَ: آللّهِ مَا أَجْلَسَكُمْ إِلاَّ ذَاكَ؟ قَالُوا: وَاللّهِ مَا أَجْلَسَنَا إِلاَّ ذَاكَ. قَالَ: أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ. وَمَا كَانَ أَحَدٌ بِمَنْزِلَتِي مِنْ رَسُولِ اللّهِ أَقَلَّ عَنْهُ حَدِيثاً مِنِّي. وَإِنَّ رَسُولَ اللّهِ خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ. فَقَالَ: «مَا أَجْلَسَكُمْ؟» قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللّهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِلإِسْلاَمِ، وَمَنَّ بِهِ عَلَيْنَا. قَالَ: «آللّهِ مَا أَجْلَسَكُمْ إِلاَّ ذَاكَ؟» قَالُوا: وَاللّهِ مَا أَجْلَسَنَا إِلاَّ ذَاكَ. قَالَ: «أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ. وَلكِنَّهُ أَتَانِي جِبْرِيلُ فَأَخْبَرَنِي أَنَّ اللّهَ عَزَّ وَجَلَّ يُبَاهِي بِكُمُ الْمَلاَئِكَةَ». 

அபூசயீத் அல்குத்ரீ (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

பள்ளிவாசலில் வட்டமாக அமர்ந்திருந்த ஒரு குழுவினரிடம் முஆவியா (றழி) அவர்கள் புறப்பட்டு வந்து, “நீங்கள் இங்கு அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், “அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவதற்காக அமர்ந்துள்ளோம்” என்று கூறினர். அதற்கு முஆவியா (றழி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நீங்கள் அமர்ந்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதற்காகத்தான் நாங்கள் அமர்ந்துள்ளோம்” என்றுகூறினர்.

முஆவியா (றழி) அவர்கள் கூறினார்கள்: உங்கள் மீது சந்தேகப்பட்டு நான் உங்களைச் சத்தியமிட்டுக் கூறச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்களில் எவரும் என்னைவிடக் குறைவான ஹதீஸ்களை அவர்களிடமிருந்து அறிவிக்கவில்லை. (நானே மிகக் குறைவான ஹதீஸ்களை அறிவித்தவன்.) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) வட்டமாக அமர்ந்திருந்த தம்தோழர்களில் சிலரிடம் வந்து, “நீங்கள் (இங்கு) அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், “அல்லாஹ் எங்களுக்கு இஸ்லாத்திற்கு நேர்வழிகாட்டிய தற்காகவும், எங்களுக்கு அருட்கொடைகள் புரிந்ததற்காகவும் அவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்காக அமர்ந்திருக்கிறோம்” என்றுகூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதுசத்தியமாக! இதற்காகத்தான் நீங்கள் அமர்ந்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்குத் தோழர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நாங்கள் அமர்ந்துள்ளோம்” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீது சந்தேகம் கொண்டுச்சத்தியமிட்டு உங்களிடம் நான் கேட்கவில்லை. மாறாக, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்களைப் பற்றிவானவர்களிடம் பெருமையுடன் பேசிக்கொள்கிறான்” என்று தெரிவித்தார் என்றார்கள். 
(முஸ்லிம் -6807) 
அறிவிப்பு- அபூசயீத் அல்குத்ரீ (றழி) 

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களை வட்டமாக அமர்ந்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுமாறு கட்டளையிட்டிருக்கவுமில்லை அவ்வாறு செய்து காட்டவுமில்லை என்பது மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸில் இருந்து தெளிவாக விளங்குகின்றது. அவ்வாறு அவர்கள் கட்ளையிட்டிருந்தால் “நீங்கள் (இங்கு) அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?” என்று கேட்டிருக்கமாட்டார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடாத, முன்னர் செய்து காட்டாத ஒரு செயலை ஸஹாபாக்கள் செய்த போது நபி (ஸல்) அவர்கள் அதை தடுக்கவில்லை மாறாக “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்களைப் பற்றி வானவர்களிடம் பெருமையுடன் பேசிக்கொள்கிறான்” என்றுவாழ்த்தினார்கள் 

وعن سيدنا خالد بن الوليد رضي الله عنه قال: (اعتمرنا مع رسول الله صلى الله عليه وآله وسلم في عمرة اعتمرها فحلق شعره فاستبق الناس إلى شعره فاستبقت إلى الناصية فأخذتها فاتخذت منها قلنسوتي فجعلتها في مقدم القلنوسة فما وجهتها في وجه إلا فتح علي)([6][44]). 

“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் உம்றா செய்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் (தலை) முடியை சிரைத்தார்கள். ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களின் முடியை எடுப்பதற்கு முந்திக்கொண்டிருந்தனர். நான் முன்நெற்றிமுடியை எடுத்துக் கொண்டேன். அதை எனது தொப்பியின் முன்பகுதியில் வைத்துக் கொண்டேன். நான் அதை முன்வைத்துச் செல்லும் போதெல்லாம் எனக்கு வெற்றிகிடைத்தது. 
(தப்றானீ-3804,4044,ஹாகிம்-3/299) 
அறிவிப்பு-ஹாலித்இப்னுவலீத்(றழி) ​ 

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களை தனது (தலை) முடியை எடுத்துக்கொள்ளுமாறு கூறவில்லை ஆயினும் ஸஹாபாக்கள் அதை முந்திக் கொண்டு எடுத்துள்ளனர். அதை நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை, அத்துடன் ஹாலித் இப்னு வலீத் (றழி) அவர்களிடம் முன்நெற்றி முடியை எடுத்து அதை தொப்பியின் முன்பகுதியில் வைத்துக் கொள்ளுமாறு கூறவுமில்லை. நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, செய்து காட்டாத இந்த செயலை ஸஹாபாக்கள் செய்துள்ளனர் என்பதை இங்கு நாம் கவனிக்கவேண்டும். 

وعن سيدنا أنس رضي الله عنه قال: لقد رأيت رسول الله صلى الله عليه وآله وسلم والحلاق يحلقه وأطاف به أصحابه فما يريدون أن تقع شعرة إلا في يد رجل منهم([7][45]). 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலையை நாவிதர் ஒருவர் மழித்துக் கொண்டிருக்கும் போது நான் பார்த்துள்ளேன். அப்போது நபித் தோழர்கள், ஒரு முடியாயினும் (தங்களில்) ஒரு வரது கையில்தான் விழவேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். 
(முஸ்லிம்-5996,
அறிவிப்பு-அனஸ் (றழி) 

மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தலை முடியைகளையும் போது “எனது ஒரு முடியாயினும் (உங்களில்) ஒருவரது கையில்தான் விழவேண்டும்” என்று கூறவில்லை ஆயினும் தோழர்கள் அந்த நோக்கத்துடன் அவர்களைச் சுற்றிவந்து கொண்டிருந்தார்கள். இதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்யவில்லை. 

(6009) ـ وحدّثني مُحَمَّدُ بْنُ رَافِعٍ. حَدَّثَنَا حُجَيْنُ بْنُ الْمُثَنّى. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ (وَهُوَ ابْنُ أَبِي سَلَمَةَ) عَنْ إِسْحَـقَ بْنِ عَبْدِ اللّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، . قَالَ: كَانَ النَّبِيُّ يَدْخُلُ بَيْتَ أُمِّ سُلَيْمٍ فَيَنَامُ عَلَى فِرَاشِهَا وَلَيْسَتْ فِيهِ. قَالَ: فَجَاءَ ذَاتَ يَوْمٍ فَنَامَ علَى فِرَاشِهَا. فَأُتِيتْ فَقِيلَ لَهَا: هذَا النَّبِيُّ نَامَ فِي بَيْتِكِ، عَلَى فِرَاشِكِ. قَالَ: فَجَاءَتْ وَقَدْ عَرِقَ، وَاسْتَنْقَعَ عَرَقُهُ علَى قِطْعَةِ أَدِيمٍ، عَلَى الْفِرَاشِ. فَفَتَحَتْ عَتِيدَتَهَا فَجَعَلَتْ تُنَشِّفُ ذلِكَ الْعَرَقَ فَتَعْصِرُهُ فِي قَوَارِيرِهَا. فَفَزِعَ النَّبِيُّ فَقَالَ: «مَا تصْنَعِينَ؟ يَا أُمَّ سُلَيْمٍ» فَقَالَتْ: يَا رَسُولَ اللّهِ نَرْجُو بَرَكَتَهُ لِصِبْيَانِنَا. قَالَ: «أَصَبْتِ». 

அனஸ்பின் மாலிக் (றழி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் (என்தாயார்) உம்முசுலைம் (றழி அவர்களின் இல்லத்துக்கு வந்து, அங்கு உம்முசுலைம் (படுத்து) இராத போது அவர்களது விரிப்பில் படுத்து உறங்குவார்கள். ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வந்து உம்முசுலைமின் விரிப்பில் படுத்துறங்கினார்கள். அப்போது அங்கு வந்த உம்முசுலைம் (றழி) அவர்களிடம், “இதோ நபி (ஸல்) அவர்கள் உங்கள் வீட்டில் உங்கள் விரிப்பில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லப்பட்டது.

உடனே உம்முசுலைம் (றழி அவர்கள் வந்(துபார்த்)தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வியர்த்திருந்தது. அவர்களது வியர்வை, படுக்கையில் ஒரு துண்டுத் தோலில் திரண்டிருந்தது. உடனே உம்முசுலைம், தமது நறுமணப் பெட்டியைத் திறந்து, அந்த வியர்வைத் துளிகளைத் துடைத்து தமது கண்ணாடிக் குடுவையொன்றில் அதைப் பிழிந்து சேகரிக்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் திடுக்கிட்டு விழித்து, “உம்முசுலைமே! என்ன செய்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! அதன்( பறகத்தை) வளத்தை எங்கள் குழந்தைகளுக்காக எதிர்பார்க்கிறோம். (அதனால் தான் அதைச் சேகரிக்கிறோம்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் “நீ செய்தது சரிதான்” என்று சொன்னார்கள். 
முஸ்லிம்-6009 
அறிவிப்பு-அனஸ்இப்னுமாலிக் (றழி) 

இங்கு நபி (ஸல்) அவர்கள் தனது வியர்வைத் துளிகளை குழந்தைகளுக்கு சேகரிக்கு மாறும் அதன் அருளை( பறகத்தை) எதிர்பார்க்குமாறும் கூறவில்லை .ஆயினும் உம்முசுலைம் (றழி) அவர்கள் அவ்வாறு செய்தபோது அதை தடுக்கவில்லை. மாறாக “நீ செய்தது சரிதான்” என பாராட்டினார்கள். இங்கு நபி (ஸல்) அவர்கள் சொல்லாத,செய்துகாட்டாத ஒரு செயல் நடைபெற்றுள்ளது அதை நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை. 

وعن سيدنا أبي جحيفة رضي الله عنه قال : رأيت رسول الله صلى الله عليه وآله وسلم في قبة  حمراء ورأيت بلالا أخرج وضوءا فرأيت الناس يبتدرون ذلك الوضوء فمن أصاب منه شيء مسح به ومن لم يصب منه أخذ من بلل صاحبه. 

நான் (ஹஜ்ஜின்போது) தோலால் ஆன சிவப்பு நிறக்கூடார மொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். பிலால் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வுளூச்செய்து) மிச்சம் வைத்த தண்ணீரை வெளியே எடுத்து வருவதையும் பார்த்தேன். அந்த மிச்சத் தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக் கொள்வதையும் நான் பார்த்தேன். அந்தத் தண்ணீரில் சிறிதளவைப் பெற்றவர் அதைத் (தம்மேனியில்) தடவிக் கொண்டார். அதில் சிறிதும் கிடைக்காதவர் (தண்ணீர்கிடைத்த) தம்தோழரின் கையிலுள்ள ஈரத்தைத் தொட்டு (த்தடவி)க்கொண்டார். 
புஹாரீ-374, முஸ்லிம்-1072, அஹமத்-19273,
இப்னுஹிப்பான்-1300, பைஹகீ-5707 
அறிவிப்பு- அபூஜுஹைஃபா (றழி) 

இங்கு நபி (ஸல்) அவர்கள் தான் வுளூச்செய்த தண்ணீரை போட்டி போட்டுக் கொண்டு எடுத்து உடம்பில் தடவிக்கொள்ளுமாறும் தண்ணீரைப் பெறாதவர் தண்ணீர் பெற்ற தம் நண்பரின்கையில் உள்ள ஈரத்தைத் தொட்டுத்( தடவி)க் கொள்ளுமாறும் கட்டளையிட வில்லை. நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, செய்துகாட்டாத இந்த செயலைஸ ஹாபாக்கள் செய்தபோது அதை நபி (ஸல்) அவர்கள் தடுக்கவுமில்லை கண்டிக்கவுமில்லை 

وعن سيدنا أنس رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا صلى الغداة جاء خدم المدينة بآنيتهم فيها الماء فما يؤتى بإناء إلا وغمس يده فيها فربما جاؤوا في الغداة الباردة فيغمس يده فيها([8][50]). 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலைத் தொழுகையை தொழுது முடித்ததும் மதீனாவின் பணியாளர்கள் தண்ணீருள்ள பாத்திரங்களைக் கொண்டு வருவார்கள். கொண்டு வரப்படும் ஒவ்வொரு பாத்திரத்தினுள்ளும் அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை மூழ்கச் செய்வார்கள். சில வேளைகளில் குளிரான காலை நேரங்களிலும் அதைக் கொண்டு வருவார்கள். அப்போதும் அதனுள்ளே கையை மூழ்கச்செய்வார்கள். 
முஸ்லிம் -5996 
அறிவிப்பு – அனஸ்இப்னுமாலிக் (றழி) அவர்கள் 

இங்கு நபி (ஸல்) அவர்கள் தண்ணீருள்ள பாத்திரங்களைக் கொண்டுவருமாறு மதீனாவின் பணியாளர்களுக்கு கூறவில்லை ஆயினும் கொண்டு வரப்பட்ட பாத்திரங்களில் தமது கையை மூழ்கச் செய்தார்கள். அந்த மக்களுக்கு தனது அருள்(பறகத்) கிடைக்கவேண்டும் என்பதற்காக. இந்த செயலை நபியவர்கள் தான் கட்டளையிடவில்லை என்பதற்காக தடைசெய்யவில்லை. 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments