சங்கைக்குரிய
அல் ஆலிமுல் பாழில் அபுல் இர்ஃபான் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களது
37வது வருட மா கந்தூரி கடந்த 11.08.2014 திங்கட்கிழமை அன்று சரியாக மாலை 05.00 மணிக்கு
புனித திருக்கொடி ஏற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகியது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து அன்னவர்களது புனித அடக்கஸ்தலத்துக்கு சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ (அதாலல்லாஹு பகாஅஹ்) அன்னவர்களாலும் ஏனைய உலமாஉகளாலும் போர்வை போர்த்தப்பட்டு; இறை நேசர் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களது பறக்கத்தைக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரினதும் சமாதானம், சுபீட்சம், நிம்மதியான வாழ்வு வேண்டி துஆ ஓதப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் சங்கைக்குரிய மாதிஹுர் றஸூல் மௌலவீ HMM. இப்றாஹீம் (நத்வீ) அவர்களால் மகான் அவர்களது வாழ்க்கை வரலாறுகளை எடுத்தியம்பும் பயான் நிகத்தப்பட்டது. அதனை அடுத்து நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கு அருளன்னதானம் வழங்கப்பட்டது.
கந்தூரி நிகழ்வுகளுக்கான முதல்கட்டப் பணிகளுக்காக கடந்த 09.08.2014 சனிக்கிழமை அன்று அன்னவர்கள் பெயரிலான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதும். இங்கு குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு தொடர்பான காணொளியும் புகைப்படங்களும்.