ஸூபிஸத்தின் தளமாக இலங்கிக் கொண்டிருக்கும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய பள்ளிவாயல் கட்டிட நிர்மாணப் பணிகளில் ஓர் அங்கமாக இன்று 09.11.2014 ஞாயிற்றுக் கிழமை பி.ப 05:00 மணியளவில் பள்ளிவாயில் பிரதான குப்பாவின் ஆரம்பப் பணிகள் அதிசங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் துஆப் பிரார்த்தனையுடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமாஉகளும், புதிய பள்ளிவாயல் கட்டிட நிர்மாணப் பணிகளின் பொறுப்பாளரும் இந்நாள் காத்தான்குடி நகரசபையின் பிரதி தவிசாளருமான அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்களும், பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் நிர்வாகத்தினரும், ஸுபிஸ வழி செல்லும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
புதிய பள்ளிவாயலுக்கான குப்பாக்களில் இதுவே கடைசி குப்பாவாகும்.