அம்பாரை மாவட்டத்தில் அமைந்துள்ள இவர்களின் “தர்ஹா” காட்டு யானைகள் நடமாடும் பகுதியில் உள்ளது.
சில சமயம் யானைகள் வந்தாலும் தர்ஹாவின் விசாலமான காணிக்குள் பிரவேசிக்கமாட்டா. நீண்டகால வரலாறுள்ள இந்த வலீமாரின் முழு விபரங்களையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. எனினும் நூற்றுக்கும் மேற்பட்ட வயோதிபர்கள் தந்த தகவல்களின் படியும், காத்தான்குடியில் பெருமகானாக வாழ்ந்து மறைந்த மா்ஹூம் அல்ஹாஜ் மௌலவீ அஹ்மத் லெப்பை ஆலிம் “பறழீ”அவா்கள் குறித்த இரு வலீமார் பெயரால் அறபியில் எழுதிய மௌலிதில் கூறப்பட்டுள்ள தகவல்களின் படியும் சில உண்மைகளை இங்கு தருகின்றோம்.
இவா்கள் இருவரும் அடக்கம் பெற்றுள்ள ”மல்கம்பிட்டி”என்ற இடம் சுமார் 100வருடங்களுக்கு முன் பயங்கர வன விலங்குகள் வாழ்ந்த காடாக இருந்தது. அங்கு மனிதர்கள் எவரும் வசிக்கவில்லை. அந்த இடத்தில் இருந்து சுமார் 3கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள “சம்மாந்துறை” என்ற ஊரிலேயே மக்கள் வாழ்ந்து வந்தனா்.
இவ்வூர் மக்களில் வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்ட சிலா் ஒரு
வாரத்தில் இரு முறை தற்போது “தா்ஹா” அமைந்துள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று மான்,மறை,முயல் முதலானவற்றை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை விற்று வருவது வழக்கமாக இருந்தது.
ஒரு நாள் வேட்டைக்குச் சென்றவா்கள் காட்டின் மத்தியில் சிறிய குடிசை ஒன்றில் இரு வயோதிபா்கள் வணக்க வழிபாட்டில் இருந்ததைக் கண்டு வியந்து வியா்த்துப் போனார்கள். அவ்விருவரும் தோற்றத்தில் அறபிகள் போல் இருந்ததால் முஸ்லிம்களாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவா்களை அணுகி “ஸலாம்” கூறினார்கள். அவா்கள் இருவரும் அழகாக பதில் கூறினார்கள். அங்கு சென்ற சம்மாந்துறை வாசிகள் தமிழ் மொழி மட்டுமே தெரிந்தவர்களாக இருந்தனா். அவ்விருவரும் பேசிய மொழி இவா்களுக்கு புரியவில்லை.
அவா்கள் ஜாடை மூலம் அவா்கள் இருவரையும் தம்மோடு வருமாறு
அழைத்தார்கள். அவா்கள் அதற்கு உடன்படாத காரணத்தால் வேட்டையாடாமல் சம்மாந்துறைக்கு வந்து பள்ளிவாயல் நிர்வாகிகளிடம் நடந்த விடயத்தை கூறினார்கள். நிர்வாகிகள் அறபு மொழி தெரிந்த ஆலிம்கள் இருவரை அழைத்துக் கொண்டு குறித்த காட்டிற்குச் சென்றார்கள்.
தொடரும்….