ஒரு சமயம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களிடம் மனித உருவில் வந்த ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவா்கள் “ஈமான்” என்றால் என்ன? “இஸ்லாம்” என்றால் என்ன? “இஹ்ஸான்” என்றால் என்ன? என்று கேட்டார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொன்னார்கள்.
“இஹ்ஸான்” என்றால் என்ன என்ற கேள்விக்கு
أَنْ
تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ، فَإِنَّهُ يَرَاكَ
تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ، فَإِنَّهُ يَرَاكَ
என்று பதில் கூறினார்கள் – விளக்கம் சொன்னார்கள்.
இதன் பொருள் : “நீ
அல்லாஹ்வை தலைக் கண்ணால் காண்பவன் போல் அவனை வணங்குவதாகும். நீ அவனைக் காணாது போனாலும் உன்னைக் காண்கிறான்”
அல்லாஹ்வை தலைக் கண்ணால் காண்பவன் போல் அவனை வணங்குவதாகும். நீ அவனைக் காணாது போனாலும் உன்னைக் காண்கிறான்”
“இஹ்ஸான்”
என்பதும் “இக்லாஸ்” என்பதும் சாராம்சத்தில் இரண்டும் ஒன்றுதான்.
என்பதும் “இக்லாஸ்” என்பதும் சாராம்சத்தில் இரண்டும் ஒன்றுதான்.
“இக்லாஸ்” என்பதற்கு யார் என்ன விளக்கம் சொன்னாலும் பெருமானார் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவா்கள் கூறியுள்ள விளக்கத்திற்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.
அவர்களை விட ஆழமான பொருத்தமான விளக்கம் சொல்வதற்கு யாருமில்லை. யாராவது விளக்கம் சொன்னால் கூட அது பெருமானின் விளக்கத்தை ஒத்ததாக இருந்தால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள் கூறியுள்ள இவ்வரைவிலக்கணம் மிக ஆழமான ஓா் அம்சத்தை உள்ளடக்கியிருப்பது தெளிவு பெற்ற இறை ஞானிகளுக்கு மறைவானதல்ல.
ஆயினும் மற்றவா்களுக்கு அது மறைவானதேயாகும்.
ஆயினும் மற்றவா்களுக்கு அது மறைவானதேயாகும்.
அந்த அம்சம் எதுவென்று விளக்கி வைக்க எம்மால் முடியாது போனாலும் அப்படி ஒரு அம்சம் உண்டு என்பதை பிறருக்கு உணர்த்தி தகுதியானவர்களிடம் அதற்கான விடையை பெற்றுக்கொள்ளத் தூண்டும் நோக்கத்தில் ஓா் உதாரணம் எழுதுகிறேன்.
முசம்மில் என்பவன் முனாஸ் என்பவனிடம் முக்தார் என்பவனை குறித்து “நீ முக்தார் என்பனைக் காண்பவன் போல் இவ்விடத்தில் அமா்ந்து கொள்” என்று சொல்வது போன்று.
இந்த வசனத்தை அறபு மொழியில் اجلس هنا كأنك ترى مختارا என்று கூறலாம்.
இவ்வுதாரணத்தில் கூறப்பட்டபடி முனாஸ் என்பவன் செயல்படுவதற்கு அவன் முக்தார் என்பவனை ஏற்கனவே கண்டவனாக இருக்க வேண்டும்.
ஏற்கனவே காணாத ஒருவனை குறித்து
“அவனைக் காண்பவன் போல்” என்று கூறுவது பொருத்தமற்ற, உருவகப் படுத்த முடியாத ஒன்றுமாகும். சுருங்கச் சொன்னால் அது அசாத்தியமான ஒன்றுமாகும்.
ஏற்கனவே காணாத ஒருவனை குறித்து
“அவனைக் காண்பவன் போல்” என்று கூறுவது பொருத்தமற்ற, உருவகப் படுத்த முடியாத ஒன்றுமாகும். சுருங்கச் சொன்னால் அது அசாத்தியமான ஒன்றுமாகும்.
அல்லாஹ் உருவமற்றவன், கற்பனைக்கு எட்டாதவன், இவ்வுலகில் தலைக் கண்ணால் காண முடியாதவன்,
எடை, நிறம், கட்டை, நெட்டை போன்ற சிருஷ்டிகளின் தன்மைகளை விட்டும் துய்யவன் என்ற கருத்தின்படி அவனைக் காண்பவன் போல் வணங்குவது எவ்வாறு சாத்தியமாகும்? அது அசாத்தியமென்றால் அசாத்தியமான ஒன்றைச் செய்யுமாறு நபீ ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவா்கள் யாரையும் பணிப்பார்களா?

كَأَنَّكَ تَرَاهُ “நீ அவனை காண்பது போல்” என்ற வசனத்திலுள்ள “காப்“ என்ற எழுத்துக்கு “போல்” என்று பொருள் கொள்ளப்படுகிறது. இது அறபு மொழியில் “தஷ்பீஹ்”
எனப்படும். இந்த எழுத்து தேவையற்றதாயின் – வீணானதாயின் பெருமானாரின் திருவாயிலிருந்து வெளியாகி இருக்காது. மேலும் குறித்த வசனத்தில் “தறா”என்ற சொல் தலைக்கண்ணால் காண்பதைக் குறிக்கும் ஒரு சொல் என்பதும் இங்கு கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

இறை ஞானிகளிடமிருந்தும், குறிப்பாக “வஹ்ததுல் வுஜுத்” ஞானத்தை மறுப்பவர்களிடமிருந்தும் சரியான விளக்கத்தை எதிர்ப்பார்க்கின்றோம்.
(ஷாஹே ஸறன்தீப்)