
இந்நிகழ்வில் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் விஷேட உரையும் இடம் பெற்றது.
அருள் நபீ முஹம்மதுன் முர்தழா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அளவில்லா அன்பு கொண்ட காத்தான்குடி, அதனை அண்டிய பிரதேசங்கங்கள் இன்னும் வெளியூர்களிலும் இருந்து வருகை தந்த அண்ணலாரின் பக்தர்களின் ஸலவாத் முழக்கத்துடன் மஜ்லிஸ் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இம் மஜ்லிஸில் 5000ற்கும் அதிகமாக முஹிப்பீன்கள் கலந்து கொண்டதும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரணம் வழங்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.