ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அபூஹாமித் முஹம்மத் கஸாலீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்கள் “ஈரான்”நாட்டின் “குறாஸான்” மாநிலத்தில் (ஹிஜ்ரி 505 – ஈஸவீ 1111)
“தூஸ்” எனும் நகரில் பிறந்தார்கள். “ஸூபிஸம்” பேசிய தத்துவஞானி.
இவா்களின் அறிவுத்திறமையால் “ஹுஜ்ஜதுல் இஸ்லாம்”
இஸ்லாமின் ஆதாரம் என்ற சிறப்புப் பெயரால் பிரசித்தி பெற்றார்கள். இமாமுல் ஹறமைன் அபுல் மஆலி அல் ஜுவைனீ றஹ் றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்களிடம் கல்வி கற்றார்கள். பக்தாத் நகரில் பிரசித்தி பெற்ற “நிளாமிய்யா”வில் படித்துக் கொடுத்தார்கள். அறபு மொழியில் பல
நூல்கள் எழுதியுள்ளார்கள்.

ஆரம்ப காலத்தில் விஞ்ஞானம், தர்க்கவியல் கலைகளில் அதிக நேரத்தை கழித்து வந்துள்ளார்கள். பின்பு “தஸவ்வுப்” என்ற ஸூபிஸக் கலையில் அவா்களுக்கு விருப்பம் ஏற்பட்டு படிப்பித்தலை விட்டு ஸூபிஸக் கலையில் முழுமையாக இறங்கினார்கள்.
டமஸ்கஸ்,கெய்ரோ,மக்கா முதலான நாடுகளுக்குச் சென்று இறுதியில்
“நைஸாப்பூா்”என்ற நகருக்கு திரும்பி தங்களின் சொந்த ஊரான “தூஸ்” நகரில் காலமானார்கள். இவா்களின் “மசார்” அடக்கவிடம் “தூஸ்” நகரில் இருப்பதாகவும், “பக்தாத்” நகரில் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. “பக்தாத்” நகரில் உள்ள அவா்களின் அடக்கவிடம் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இவா்கள் ஒரு சிந்தனையாளராகவும் விஞ்ஞானியாகவும், இறுதியில் ஸூபிஸ தத்துவ ஞானியாகவும் விளங்கினார்கள்.
இவா்கள் எழுதிய நூல்களில் இஹ்யா உலூமித்தீன், அல்முன்கிது மினழ் ழலால், அல் இக்திஸாத் பில் இஃதிகாத், அல் அஸ்மாஉல் ஹுஸ்னா, மிஷ்காதுல் அன்வார் என்பன மிகப் பிரசித்தி பெற்றவைகளாகும்.
இவா்கள் எழுதிய “இஹ்யா உலூமித்தீன்” என்ற நூலில் இறை ஞானத்தின் ஆழமான தத்துவங்களைச் சொல்லாவிட்டாலும் “மிஷ்காதுல் அன்வார்”என்ற நூலில் இறை ஞானத்தை “வஹ்ததுல் வுஜூத்” பாணியில் கூறியுள்ளார்கள்.
வஹ்ஹாபிஸம் இந்நாட்டில் தலைகாட்டுவதற்கு முன் இலங்கையில் இருந்த எல்லா அரச பாடசாலைகளிலும் வகுப்பு ஆரம்பிக்கு முன் ஆசிரியா், மாணவா்கள் அனைவரும் உரே குரலில் பின் வருமாறு பாடி வந்தார்கள். எப்போது வஹ்ஹாபிஸம் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதோ அப்போது முதல் குறித்த பக்தி பாடல் நிறுத்தப்பட்டு விட்டது.
அது பின்வருமாறு ;
அது பின்வருமாறு ;
نَوِّرْ
اِلَهَ السَّمَا قَلْبَ الْغَرِيْبِ كَمَا نَوَّرْتَ قَلْبَ اِمَامِ النَّاسِ غَزَالِيْ
اِلَهَ السَّمَا قَلْبَ الْغَرِيْبِ كَمَا نَوَّرْتَ قَلْبَ اِمَامِ النَّاسِ غَزَالِيْ
يَارَبِّ
اَعْطِ لَنَا عِلْمًا وَفَهْمًا
كَمَا اَعْـطَيْتَ يَارَبَّنَا لِلشَّيْخِ غَزَالِيْ
اَعْطِ لَنَا عِلْمًا وَفَهْمًا
كَمَا اَعْـطَيْتَ يَارَبَّنَا لِلشَّيْخِ غَزَالِيْ
வானத்தின்–உயா்வுடைய–நாயனே! இமாம்
கஸ்ஸாலி றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்களின் உள்ளத்தை
பிரகாசமாக்கி வைத்தது போல் இவ் ஏழையின் உள்ளத்தையும்
பிரகாசமாக்கி வைப்பாயாக!
யாஅல்லாஹ்! ஷெய்கு கஸ்ஸாலி றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்களுக்கு அறிவையும் ,விளக்கத்தையும் கொடுத்தது
போல் எங்களுக்கும் கொடுப்பாயாக!
பாடசாலைகளில் இப்பாடல் நிறுத்தப்பட்டதற்கு வஹ்ஹாபிகளே பிரதான காரணிகளாவா். இவா்களின் கருத்துப்படி இமாம் கஸ்ஸாலி றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்கள் வழிகேடா்கள் ஆவார்கள். வஹ்ஹாபிகளில் அவா்களைக் “காபிர்” என்று சொல்பவா்களும் உள்ளனர்.
வஹ்ஹாபிகள் இந்த அளவு அவா்களை எதிர்ப்பதற்கு அவா்கள் ஸூபிஸம் பேசியதே பிரதான காரணமாகும். ஸூபிகளையோ, ஸூபிஸ ஞானத்தையோ வஹ்ஹாபிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவா்கள் வெளி நீச்சல் காரா்கள் மட்டும்தான். உள் நீச்சல் அவா்களுக்கு சுத்தமான சூனியமாகும். இதனால்தான் வஹ்ஹாபிஸ கொள்கையுள்ள எவரும் “விலாயத்” என்ற நற்பாக்கியம் பெறமாட்டார்கள் என்று ஸுன்னீகள் கூறுகின்றனா். அவா்களின் இக்கூற்றை நாம் வரவேற்கின்றோம்.
மேற்கண்ட சிறப்புகள் பெற்ற மாமேதை கஸ்ஸாலி றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்கள் ஒரு நாள் மாணவா்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார்கள். எதிர்பாராமல் அங்கு ஒரு குறவன் வந்தான். (குறவன் என்பவன் பாம்பு, நாய் தொடா்பான அறிவுள்ளவனாக இருப்பான்) அவனைக் கண்ட இமாம் கஸ்ஸாலி எழுந்து நின்று அவனுக்கு மரியாதை செய்தார்கள். இது கண்ட மாணவா்கள், அவன் குறவனல்லவா?
எதற்காக அவனுக்கு மரியாதை செய்தீா்கள்? என்று கேட்டார்கள்.
எதற்காக அவனுக்கு மரியாதை செய்தீா்கள்? என்று கேட்டார்கள்.
நாய் பருவமடைந்து விட்டதா? இல்லையா? என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது என்று விரும்பி நாய் வளர்ப்போடு தொடா்புள்ள இவனிடம் கேட்டேன். எப்போது நாய் பின்கால் ஒன்றை உயா்த்திய வண்ணம் சலம் கழிக்கின்றதோ அப்போது அறிந்து கொள்ளளலாம் என்று கூறினான். ஆகையால் நான் அறியாமலிருந்த ஒன்றை எனக்கு கற்றுத் தந்தவன் என்ற வகையில் அவனுக்கு மரியாதை செய்தேன் என்று விளக்கம் சொன்னார்கள்.
இமாம் கஸ்ஸாலி மாபெரும் அறிவுக் கடலாகவும், தத்துவ மேதையாகவும் இருந்தும் கூட தாங்கள் அறிந்திராத ஓா் அறிவை மட்டும் கற்றுக் கொடுத்த ஒரு குறவனுக்கு எழுந்து நின்று மரியாதை செய்தது அவா்களின் பணிவை எடுத்து காட்டுவதுடன் கல்வி கற்று கொடுத்தவனுக்கு கற்றுக் கொண்டவன் எந்தளவு கடமைப்பாடுள்ளவன் என்பதையும் உணா்த்துகின்றது.
اَنَا
عَبْدٌ مَنْ عَلَّمَنِيْ حَرْفًا وَاحِدًا اِنْ شَاءَ بَاعَ وَاِنْ شَاعَ اَعْتَقَ
وَاِنْ شَاءَ اِسْتَرَقَّ
நான் ஒரு அடிமை. எனக்கு ஒரு எழுத்தை கற்றுத் தந்தவராயினும்
அவா் விரும்பினால் என்னை விற்றுக் கொள்ளட்டும். என்னை உரிமை இடட்டும். என்னை அடிமையாக்கிக் கொள்ளட்டும்.
என்று இமாம் அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு
வஜ்ஹஹு
கூறியிருப்பது, கற்றுக் கொண்ட ஒருவன் கற்றுக்கொடுத்தவனுக்கு தன்னை அடிமையாக்க வேண்டும் என்ற கருத்தை உணா்த்துகின்றது.
வஜ்ஹஹு
கூறியிருப்பது, கற்றுக் கொண்ட ஒருவன் கற்றுக்கொடுத்தவனுக்கு தன்னை அடிமையாக்க வேண்டும் என்ற கருத்தை உணா்த்துகின்றது.
உண்மையும்,எதார்த்தமும் இவ்வாறிருக்கும் நிலையில் ஒருவருக்கு எழுந்து மரியாதை செய்வது “ஷிர்க்”என்று கூறும் வஹ்ஹாபிகள் எங்கு இருக்க வேண்டியவா்கள்?
(ஷாஹே ஸறன்தீப்)