
இந்நிகழ்வில் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களும், உலமாக்களும், அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பர்மான் பாஸ் அவர்களுக்காக குர்ஆன் தமாம் செய்து ஈஸால் தவாப் செய்யப்பட்டது. இன்னும் அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆப்பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டு, காலை உணவும் பரிமாரப்பட்டது.
யா அல்லாஹ்! எங்கள் நண்பன் அஸ்அத் பர்மான் பாஸ் அவர்களின் கப்றை சுவனச் சோலையாக ஆக்கி வைப்பாயாக! அன்னாரை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருகாமையில் இருப்பாட்டுவாயாக!
ஆமீன்! ஆமீன் யாறப்பல் ஆலமீன்!