
அன்னாருடன் ஜாமிஅஹ் மின்ஹாஜிய்யஹ்வின் உஸ்தாத்மார்களும், மாணவர்களும், ஜாமிஅஹ்வின் நிர்வாகிகளும் சமுகம் தந்தனர்.
தங்களது வருகையில் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களை சந்தித்தும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் திருமுடிகளின் தரிசனத்தையும், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் கட்டிட நிர்மாணப் பணிகளை பார்வையிட்டும், பள்ளிவாயலில் அடக்கம் பெற்றுள்ள அல் ஆலிமுல் பாழில் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களையும் ஸியாறத் செய்து, 38வது வருடமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் புஹாரீ மஜ்லிஸின் நிகழ்விலும் கலந்து கொண்டார்கள்.
ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களும், அன்னவர்களோடு குழுமியிருந்த முஹிப்பீன்களும் அன்னாரை சிறப்புர வரவேற்று கைகளை முத்தமும் இட்டுக் கொண்டார்கள்.