38வது வருடமாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 16.04.2015 அன்று திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 29நாட்கள் ஓதப்பட்டு வந்த ஸெய்யிதுனா முஹம்மத் இப்னு இஸ்மாயில் அல் புகாரீ றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட புனித ஸஹீஹுல் புகாரீ தமாம் மஜ்லிஸ் 15.05.2015 வெள்ளிக்கிழமை அன்று இரு அமர்வுகளாக நடைபெற்றது.
முதலாம் அமர்வு – காலை 10.00 மணிதொடக்கம் 11.30 வரையும்
இரண்டாம் அமர்வு – அஸர் தொழுகையின் பின் ஆரம்பமாகி இரவு 09.00 மணிவரை நடைபெற்றது.
இவ்விரு அமர்வுகளிலும் கத்முல் குர்ஆன், புகாரீ இமாம் மௌலித், மிஃறாஜ் மௌலித், இமாம் ஷாபிஈ மௌலித், புஹாரீ ஷரீப் பாராயணம், ஆத்மீக சொற்பொழிவு போன்ற ஆன்மீக நிகழ்வுகள் நடந்தேரின.
இறுதியாக மக்காவின் முப்தியாக இருந்த இமாம் ஸெய்னீ தஹ்லான் அன்னவர்களால் யாக்கப்பட்ட பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகமும் நடைபெற்று இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!