أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ
ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُنِيَ
الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ
مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ،
وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ
முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக
நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ்
செய்தல், ரமாழான் (மாதத்தில்) நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து
காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’
என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்
கூறினார்கள்: என இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.
இஸ்திரப்படுத்தப்பட்ட ஒன்றாகும். அவற்றில் ஒன்றையேனும் நிராகரிப்பதானது
“குப்ரிய்யத்” தை “ரித்தத்தை” மதமாற்றத்தை ஏற்படுத்தும். என்பதில் கருத்து
வேறுபாடுகள் இல்லை.
திருக்கலிமா மொழிந்த பின்னர் அதனை
நிராகரித்தாராயின் அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றப்பட்டவராகவே கருதப்படுவார். ஏனெனில் திருக்கலிமா என்பது ஒவ்வொரு வஸ்துவிலும்
இருக்கும் ‘உயிர்” போன்றதாகும். றூஹை
கொண்டு சம்பந்தப்பட்ட விடயமே திருக்கலிமா.
நோன்பு, ஹஜ் ஆகியன “அப்ஆலே
அஜ்ஸாமிய்யா” சடம் சம்பந்தப்பட்ட செயற்பாடுகள்-
உள்ளடக்கப்பட்டவையாகவும், “நப்ஸ்” உடைய தீக்குணங்களைக் களைந்தெறிந்து,
“றப்” அல்லாஹ் அளவில் பரிசுத்தமடைந்த நிலையில் முடுகுதல் பெறுவதுமே அவற்றின் நோக்கமாகும்.
ஒருவர் நிராகரிக்காமல், மறுக்காமலும், அவற்றை தன் வாழ்வில் கொண்டுவர முயற்சி
எடுக்காமலும் இருப்பாராயின் அவர் ஒரு போதும் தூய்மை பெறமாட்டார். அல்லாஹ்வின்
கட்டளையை செவி சாய்த்துச் செயற்படாத
பாவியாகவும் ஆகிவிடுவார்.
அஜ்ஸாமிய்யா” அல்லது
“அஃமாலுல் ஜவாரிஹி” எனப்படும் இன்னான்கு அம்சங்களில் (தொழுகை, ஸகாத்,
நோன்பு, ஹஜ்) மனிதனைப் புனிதனாக்கி, அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தையும், அன்பையும், அவனது திருக்காட்சியையும் அதிகம்
பெற்றுத்தருவதில் அதிக தொண்டாற்றுவது புனித மிக்க
நோன்பேயாகும்.
ملكوت السموات وواسطة الخروج عن رحم مضايق الجسمانيات المعبر عنه بالنشأة الثانية
நோன்பாகிறது வானங்களின் அரசாட்சிகளை
(கண்டு கொள்ள) நுழைவதற்கும், சடம் சார்ந்தவற்றின் , நெருக்கமான (رحم مضايق الجسمانيات) – இடங்களின் அல்லது விடயங்களின்- கருவறையை
விட்டும் வெளிப் புறப்படுவதற்கு உதவியாகவும் இருக்கின்றது.
துவக்கம்” ஆரம்பம் என்றும் ஆரிபீன்களால் வலிந்துரை தரப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டதாகவும்
அந்நோன்பு இருக்கின்றது.
عيسى عليه السلام لن يلج ملكوت السموات من لم يولد مرتين
அலை அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்,
முறை அவதரிக்காதவர், (பிறக்காதவர்) வானங்களின் அரசாட்ஷிகளுக்குள் நுழையமாட்டார் .
கொள்வதிலும், அவனைக்கண்டு கொள்வதிலும் சிறப்பிற்குரியதாக அமைந்து விடுகின்றது.
அதனால்தான் அல்லாஹ் ஹதீத் குத்ஸியில் “அஸ்ஸவ்மு லீ வஅன உஜ்ஸா” நோன்பு எனக்குரியது
அதற்கு நானே கூலியாவேன் என்று வள்ள அல்லாஹ் கூறிக்காட்டுகின்றான்.
நோன்பில் பிரதான தொலிற்பாடாக செயற்படுவதானது “பசி”
ஆகும். மனிதனின் ஏழு (“நப்ஸ்”) மன
இச்சைகளுள் ஆரம்ப படித்தரத்தில் உள்ள “அன்னப்ஸுல் அம்மாரது பிஸ்ஸூஇ” தீமையை
கொண்டு மனிதனை ஏவும்படியான நப்ஸ் என்று இறைவனால் வருணிக்கப்பட்ட மிகக் கொடிய நப்ஸ் “அன்னப்ஸுல் அம்மாரா” வை அதிக பசியைக் கொண்டு மாத்திரமே கொலை செய்யமுடியும்.
பல படித்தரங்களை அதிகப்படுத்தும். சுவனத்து வாயலை திறக்கும். காட்சிக்கு ஓர் வழி
யாகவும் அது அமையும். ஈஸா நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுடன் உரையாடும்
சந்தர்ப்பத்தில்,
سعادة الرؤية بالجوع حيث قال في مخاطبة عيسى عليه السلام (تجوع ترانى)
!) பசித்திருப்பீராக! என்னைக் கண்டு
கொள்வீர் என அல்லாஹ் கூறினான். என்று தப்ஸீர் றூஹுல் பயானில் வந்துள்ளது.
الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
நோன்பு கஷ்டமான, அல்லது சிரமமான விடயம் என்பதனை பாரமாக எடுத்துக்காட்டாமல் ஆசையூட்டும் விதத்தில் “ஈமான்
கொண்ட விசுவாசிகளே!” என விழித்து கூறுகின்றான்.
இமாம் ஹஸன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்
சொல்கின்றார்கள்…
الله يقول يا ايها الذين آمنوا فارفع لها سمعك فانه لامر تؤمر به او لنهى تنهى عنه
கொண்டு ( இறைவனால் நன்மையை புரிவது கொண்டு)
நீ ஏவப்படலாம், அல்லது தவிர்ந்து நடக்கும் படியான விடயத்தை தொட்டும் தடுக்கப்படலாம்.
என்றும்,
في النداء أزال بها تعب العبادة والعناء يشير الى ان المحب يبادر الى امتثال امر
محبوبه حتى لوامره بإلقاء نفسه في النار
இவ்வழைப்பில் ஒரு இன்பம் இருக்கின்றது. ( இன்பமான அச்சொல் கொண்டு) வணக்கத்தின் கஷ்டத்தையும், (என்மீது
பாரமாகும் விடயத்தின்) கஷ்டத்தையும் நான் நீக்கிக் கொள்கிறேன். ஒரு அன்பன் தன்னால்
விரும்பப்பட்ட அன்பிற்குரியவனின் (மஹ்பூபின்) விடயத்தை எடுத்து செயற்பட வேண்டும்.
அது தன்னை தீக்கிடங்கில் தூக்கி அவன் போட
ஏவி இருந்தாலும் சரியே எனவும் இதனூடாக அல்லாஹ்
சுட்டிக்காட்டுகின்றான்.
இமாம் ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு
அவர்கள் விளக்கம் கூறிக்காட்டுகின்றார்கள்.
على كل عضو في الظاهر وعلى كل صفة في الباطن. فصوم اللسان عن الكذب والفحش
والغيبة. وصوم العين عن النظر في الغفلة والريبة. وصوم السمع عن استماع المناهي
والملاهي وعلى هذا فقس الباقي. وصوم النفس عن التمني والحرص والشهوات. وصوم القلب
عن حب الدنيا وزخارفها. وصوم الروح عن نعيم الآخرة ولذاتها. وصوم السر عن رؤية
وجود غير الله وإثباته
ஆசிரியர் பின்வரும் கருத்துக்களை சொல்லிக்காட்டுகின்றார்கள்.
வெளிரங்க ஒவ்வொரு உறுப்புக்கள் மீதும், உள்ரங்க ஒவ்வொரு தன்மையின் மீதும், விதிக்கப்பட்டுள்ளது. – நாவு,
கண், கேள்வி, நப்ஸ், கல்ப், றூஹ், சிர்ரு ஆகியன நோன்பு நோற்கின்றன. அவற்றில்
ஏற்படும் தீய சொற்கள்) போன்றவற்றை விட்டும் தற்காத்துக் கொள்வதாகும்.
பிறர் வெறுக்கும் படியான விடயத்தை உறுதியின்றி கெட்ட எண்ணம் கொள்ளல் (அல்லது
தப்பாக உற்று நோக்குதல்.) போன்றவற்றை விட்டும் தடுத்திருத்தல்.
நோன்பாகிறது: தடுக்கப்பட்ட
வீணான விடயங்களை கேட்பதை விட்டும் தடுத்திருத்தல்.
உடைய நோன்பாகிறது: பேரெண்ணம், பேராசை, மனோ இச்சைகள் போன்றவற்றை விட்டும் தன்மனதைத்
தடுத்தல்.
ஆசை அதன் சுகபோக அழகிய அலங்கார வாழ்க்கை போன்றவற்றை தன் உள்ளம் விரும்பாமல்
தடுத்திருத்தல்.
நோன்பாகிறது: மறுமையில் கிடைக்கப் பெறும் நிஃமத்தை விட்டும், அதன் ஏனைய இன்பங்களை
விட்டும் தடுத்திருத்தல்.
எனப்படும் றூஹுடைய சூக்குமத்தின் உள்ளே இருக்கும்) “சிர்ரு” என்பது
நோற்கும் நோன்பாகிறது: அல்லாஹ் அல்லாத உள்ளமையை (வேறு எவருக்கும்,
எதற்கும்) தரிபடுத்தல், அல்லாஹ் அல்லாத உள்ளமையை காணுதல். ஆகியவற்றை விட்டும் தடுத்திருத்தல்.
உள்றங்க நோன்பு நோற்க முடியாமல் போனாலும் ஆரம்பமான படித்தரத்தில் உள்ள வெளிரங்க
நோன்புகளை சரிவர நோற்கப் பழகிக் கொள்ள வேண்டும். சடங்காக அல்லது அவர் என்னை நோக்கி
“இவன் ஒரு நல்ல நோன்பாளி” என்று சொல்ல வேண்டும்
என்பதற்காக நோன்பு நோற்க கூடாது. அது அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்பட்ட நோன்பாக
இருக்கமுடியாது. மாறாக அப்படியான நோன்பை
எம் “முகங்கள்” மீது நாளை கியாமத்தில் திருப்பியடித்து
வீசப்படும். காரணம் அதில் “முகஸ்துதி”
கலந்திருக்கின்றது என்று.
நோன்பு பற்றி குறிப்பிடும் போது அதன் வகைகளை மூன்று பிரிவுகளாக ஆக்கி அதன்
விளக்கங்களையும் கீழ் குறிப்பிடப்படும் விதத்தில் தெளிவூட்டுகின்றார்கள்.
دَرَجَاتٍ صَوْمُ الْعُمُومِ وصوم الخصوص وصوم خصوص الخصوص وأما صَوْمُ الْعُمُومِ
فَهُوَ كَفُّ الْبَطْنِ وَالْفَرْجِ عَنْ قضاء الشهوة كما سبق تفصيله وَأَمَّا صَوْمُ
الْخُصُوصِ فَهُوَ كَفُّ السَّمْعِ وَالْبَصَرِ وَاللِّسَانِ وَالْيَدِ
وَالرِّجْلِ وَسَائِرِ الْجَوَارِحِ عَنِ الْآثَامِ واما صوم خصوص الخصوص فصوم
القلب عن الهضم الدَّنِيَّةِ وَالْأَفْكَارِ الدُّنْيَوِيَّةِ وَكَفُّهُ عَمَّا
سِوَى اللَّهِ عز وجل بالكلية ويحصل الفطر في هذا الصوم بالفكر فيما سوى الله عز
وجل واليوم الآخر وبالفكر في الدنيا إلا دنيا تراد للدين فإن ذلك من زاد الآخرة
وليس من الدنيا
நோன்பு மூன்று படித்தரங்கள் உடையதாக இருக்கின்றது. “சௌமுல் உமூம், சௌமுல்
குஸூஸ், சௌமு குஸூஸில் குஸூஸ்” “சௌமுல் உமூம், (பாமரர்கள் நோன்பு) என்றால்
மானத்தையும் வயிற்றையும், இச்சையை தீர்ப்பதை விட்டும் தடுப்பதாகும்.
குஸூஸ்,
(விஷேடமானவர்களின் நோன்பு) என்றால் கேள்வி, பார்வை, நாவு, கை, கால், ஏனைய
உறுப்புக்கள் போன்றவற்றை குற்றங்களை விட்டும் தடுத்திருத்தல்.
குஸூஸில் குஸூஸ்” (விஷேடமானவர்களிலும்
விஷேடமானவர்கள் நோன்பு) கீழ்த்தரமான
மோசமான விடயங்கள், துன்யாவுடன் சம்பந்தப்பட்ட சிந்தனைகள் போன்றவற்றை விட்டும்
தடுத்தல், மேலும் அல்லாஹ் தவிரவுள்ளவற்றை விட்டும் ஒட்டு மொத்தமாக தடுத்திருத்தல். இவ்வகை
நோன்பானது அல்லாஹ் தவிரவுள்ள சிந்தனை
தவிர்த்து வேறு சிந்தனை வருவதுகொண்டும், மறுமையின் சிந்தனை, இம்மையை
(ஞாபகமூட்டும்) சிந்தனை ஏற்படுவது கொண்டும் நோன்பு “திறத்தல்” முறிதல்
உண்டாகிவிடும். மார்க்கத்திற்காக நாடப்பட்ட இம்மையைத் தவிர. ஏனெனில் அது
மறுமையின் கட்டிச்சாதத்தில் நின்றுமுள்ளதாகும். மேலும் அது இம்மையில் நின்றும்
உள்ளது அல்ல. என்று விதி விளக்களித்து
அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.
உங்களுக்கு முன் வாழ்ந்த சமூகத்தின் மீது “கடமையாக்கப்பட்டது போல்” உங்கள்
மீதும் விதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒப்பீடு
செய்து, கருத்துக் கூறியும் அல்லாஹ்
மேற்கண்ட வசனத்தில் அறிவுரை பகர் கின்றான்.
مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي
سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَامَ رَمَضَانَ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ
مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
நன்மையை எதிர்பார்த்து ரமழான் மாதம் நோன்பு
நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்’
என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’
றமழான் மாதம் அடியார்கள் செய்த பாவங்களை சுட்டெரிக்கக்கூடியதாக இறைவனின் வல்லமை கொண்டு ஆக்கப்பட்டிருக்கின்றது. அடியார்களின் பாவங்களை, தான் விரும்பினால் தன் “குத்றத்” பேராற்றல் கொண்டு மன்னிப்பவனாகவோ அல்லது தண்டிப்பவனாகவோ அல்லாஹ் இருக்கின்றான். அவன் தண்டிப்பதிலும் ஏதாவது நுட்பமான காரணம் ஒன்று கையாளப்பட்டிருக்கும். மன்னிப்பதிலும் மகத்தான பிண்ணனி ஒன்று சேர்ந்ததாக இருக்கும்.
றமழான் மாதத்தின் ஆரம்பம் (ஆரம்ப பத்து தினங்களும்) “றஹ்மத்தாகும்”. அதன் நடுப்பகுதி (நடுப்பத்து தினங்களும்) “பாவமன்னிப்பாகும்”,. அதன் இறுதி (இறுதிப்பத்து தினங்களும்) “நரக விடுதலையாகும்”. என நவின்றார்கள்.
இன்னுமோர் ஹதீத்
லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் சொல்லப்பட்ட ஹதீதும், கீழ் கண்ட இந் நபீ மொழியும் முன்பு செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதாக சுட்டிக்காட்டுவதுடன், நம்பிக்கைகொள்ளல், நன்மையை எதிர்பார்த்தல் எனும் இரண்டு அம்சமும் அவ்விரண்டு பொன் மொழிகளிலும் கண்டிப்பான நிபந்தனையாக விளக்கப்பட்டுள்ளது.
2:54. மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.
2:59. ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது – (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.
மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ்வுக்கு “காளை” மாட்டை இணையாக்கிய கூட்டத்தைப் பற்றியும், அக்கிரமக்காரர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து அவர்களின் பாவங்களின் காரணமாக தண்டணை இறக்கப்பட்டது எனவும் அல்லாஹ் கூறிக்காட்டுகின்றான்.
பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”
2:268. (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
(ஆரம்பமாக வந்த) இரு வசனங்களைத் தொடர்ந்து வந்த மற்றய (இரு) வசனங்களில் முதலாவது வசனத்தில் ‘தெளபா” செய்பவர்கள ( பாவத்தை விட்டும் மீளுபவர்களை), அல்லாஹ் விரும்புவதாகவும், பரிசுத்தமுடையவர்களை விரும்புவதாகவும் கூறிக்காட்டுகின்றான். அல்லாஹ்வின் நேசம் , கருணை அவனளவில் அடியார் தன் பாவம் போக்க மனம் அழுது, சளித்து, கண்ணீர் மல்க “தௌபா” கேட்பது கொண்டும், மனச்சுத்தம், மனக்கறை அகற்றுவது கொண்டுமே நிகழ்கின்றது. என்பதை தெளிவாக அய்யமற படம்பிடித்துக்காட்டுகின்றது.
2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.
2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
3:89. எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
பாவமன்னிப்புக் கோரி பாவமீட்சி பெறுவதால் பாவங்கள் அகன்றுவிடுகின்றன.
சான்று -01
அபூஸிர்மா மாலிக் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
சான்று 02
5304. நபி பெருமானார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
இந்த ஹதீத் பாவம் எனும் செயலை வலியுறுத்துகின்றது. என்று தப்பாக நினைக்க வேண்டாம். சஹாபாக்களின் செயல் முறைகளை அவதானித்த அண்ணல் நபீ ஸல் அவர்கள் சஹாபா தோளர்கள் உலகில் பற்றற்று வாழ்வது ஒட்டு மொத்தமா உலக ஆசா, பாசங்களை ஒதுக்கி விடக்கூடும். அப்படியவர்கள் வாழ்ந்தால் நன்மையைத்தவிர தீமைகளைச் செய்யமாட்டார்கள். தீமை அவர்களில் இருந்து வெளியாகாமல் இருந்தால் அல்லாஹ்விடம் அழுது, புலம்பி தன் தவறுகளை முன்வைத்து சுட்டிக்காட்டி முடுகுதல் (நெருக்கம்) பெறமாட்டார்கள். அல்லாஹ் அளவில் நெருக்கம் பெறுவதானது அவன் அளவில் பிழை பொறுக்கத் தேடுவது கொண்டே அல்லாமல் நிகழ்ந்து விடாது.மேலும் தன் பாவத்தை வருந்தி முனாஜாத் செய்து பிழை பொறுக்கத்தேடி தௌபாசெய்வது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமுடையதாகவும் இருக்கும் என்பதற்காகவே அல்லாமல் அப்படி அவர்கள் சொல்லவில்லை.
(நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான்) என்ற இந்த ஹதீதை கொண்டு நோக்கம் அடியானிடத்திலிருந்து ஏற்படக்கூடிய (பாவத்தை வருந்திய) சடைதலாகும். நிச்சயமாக பாவியாகிறவன் தனது பாவத்தின் காரணமாக மனம் உடைந்துபோய் இருக்கின்றான். தன்னில் நின்றும் உண்டான குற்றத்திற்காக தலையை தொங்கப் போட்டவனாகவும் இருக்கின்றான். இந்நிலையில் அடிமையை சார்ந்த சடைதல் தெளிவாக வெளியாகின்றது. மேலும் றப்பைச் சார்ந்த வலுப்பமும் வெளிப்புறப்படுகின்றது. மேலும் அதில் மன்னிப்பளவில் பாவியின் ஆதரவுக்கான பலமும் தங்கியிருக்கின்றது.
அப்துல்லாஹ் இப்னு அம்று றழி அவர்கள் அறிவிக்கின்றார்கள். “இதா சுல்சிலா” சூறா இறக்கப்பட்டது. அந்நேரம் ஹஸ்றத் அபூபக்ர் சித்தீக் றழி அவர்கள் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்கள். அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அபூபக்ரே ! உங்களை அழவைத்தது எது? என கேட்டார்கள். அதற்கவர்கள் (நாயகமே) ! இந்த சூறத் என்னை அழச் செய்தது. என்றார்கள். உடனே நபிகள் நாயகம் ஸல் அவர்கள் (அல்லாஹ்) உங்களுக்கு மன்னிப்பான் “என்பதற்காக” தவறு செய்யாதவர்களாகவும், பாவம் செய்யாதவர்களாகவும் நீங்கள் இருந்தால் உங்களுக்குப் பின்னால் பாவம், தவறு செய்யக்கூடிய (அதன் பிறகு மன்னிப்புக் கேட்கக்கூடிய) ஒரு சமூகத்தை அல்லாஹ் படைத்து அவர்களுக்கு அவர்களின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான். என அபூபக் சித்தீக் நாயகத்திற்கு அண்ணலார் விளக்கிக் கூறினார்கள்.
6307. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
கூறப்பட்ட ஹதீதை இவ்விடத்தில் எங்களுக்கு படிப்பினையாக எடுத்து மாத்திரம் செயற்படுவது சிறந்ததாகும். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பாவம் இளைத்தார்கள் அதனால் பாவமன்னிப்புத் தேடினார்கள் என்று ஒரு மண்ணளவும் எண்ணிவிட வேண்டாம். அவர்களின் அந்தஸ்த்திற்கு அநுவளவும் நாம் செல்லவில்லை இனி ஒருபோதும் எவரும் செல்லப் போவதுமில்லை என்பதே திண்ணம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
2:48. இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
றமழான் காலங்களில் மட்டும் பாவமன்னிப்புத் தேடி மீட்சி பெற வேண்டுமென விரும்பாமல், ஒவ்வொரு நாளும் எங்களின் ஒவ்வொரு செயலுக்காகவும், தீய சில எண்ணங்களுக்காகவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடப் பலகிக்கொள்ள வேண்டும். இது புனிதம் நிறைந்த றமழானின் ‘மக்பிறத்” பற்றிய சில சுருக்கமான விளக்கமாகும்.