Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நன்றி செலுத்துவோம்

நன்றி செலுத்துவோம்

من لم يشكر الله النّاس لم يشكرالله

மனிதனுக்கு நன்றியுள்ளவனாக இருக்காதவன் (மனிதனுக்கு நன்றி சொல்லாதவனும், செய்யாதவனும்) அல்லாஹ்வுக்கு நன்றியுள்ளவனாக இருக்க மாட்டான். (அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னவனாகவும், செய்தவனாகவும் ஆகான்)
“அல்லாஹ்” மனிதனுக்கு செய்கின்ற அருள்கள், உதவி உபகாரங்களுக்கு அவனுக்கு மனிதன் நன்றியுள்ளவனாக இருப்பது அவனின் தலையாய கடமையாகும்.
“ஷாகிர்” நன்றியுள்ளவனாயிருப்பதை
விட “ஷகூர்” அதிகம் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும்.
நன்றியுள்ளவனாக இருப்பதென்றால் இறைவா! உனக்கு எனது
நன்றிகள் என்று சொல்லிக் கொண்டிருப்பதை மட்டும் குறிக்காது. “அல்ஹம்துலில்லாஹ்” என்றும், “லகல்ஹம்து
வலகஷ் ஷுக்ர்” என்றும் சொல்வதுடன் அல்லாஹ் செய்த, செய்து கொண்டிருக்கின்ற உதவி உபகாரங்களை எண்ணி நினைத்து – அவன்மீது அன்பு கொள்ளவும் வேண்டும். அதோடு மட்டும் நின்று
விடாமல் அவன் ஏவியதை எடுத்தும், விலக்கியதை விட்டும் நடக்க வேண்டும்.
“மனிதனுக்கு நன்றி செய்யாதவன் “அல்லாஹ்”வுக்கு நன்றி செய்யாதவனாவான்” என்ற மேற்கண்ட தத்துவம் “மனிதனாய் தோற்றுபவனும் அவன்தான்”
என்ற தத்துவத்தை மறைமுகமாக உணர்த்துவது “அக்ல்”
உள்ளவர்களுக்கு – மனிதர்களுக்கு – மறைவானதல்ல.
மனிதர்களில் ஒருவன் இன்னொருவனுக்கு எவ்வாறான
உதவி செய்தாலும் அவனுக்குجزاك الله خيرا  அல்லாஹ் உனக்கு நற்கூலி
வழங்குவானாக என்று சொல்வது – பிராத்தனை செய்வது – அவனுக்கு நன்றியுள்ளவனாக இருப்பதாக ஆகும்.
ஓர் ஆலிம் – வஹ்ஹாபியாக
இருக்கலாம் என்று நான் கருதுகின்றேன். – ஒரு பாமரனுக்கு உதவி
செய்தவனுக்கு நன்றி சொல்வது இவ்வாறுதான் என்று ஒரு “துஆ”வை கற்றுக் கொடுத்தான்.
جزاك الله خير
الجزاء وطوّل الله ما بين فخذيك

அந்தப் பாமரனும் இதை மனனம் செய்து சொல்லி
வந்தான். சில நாட்கள் கழிந்து விட்டன. ஒரு நாள் அவனைக்
கண்ட தரமான, வயது முதிர்ந்த “ஹஸ்றத்”
அவனுக்கு ஐந்து ரூபாய் பணத்தை அவன் கைக்குள் வைத்தார். அவருக்கும் அவன் அவ்வாறே சொன்னான். ஆலிமுக்கு ஆத்திரம்
பொங்கியது. அவன் கன்னத்தில் அடித்து விட்டார். அவன் காவல் துறையில் முறைப்பட்டான். காவல்துறை அதிகாரி
வினவிய பிறகுதான் மொழி தெரியாததால் ஏற்பட்ட குழப்பம் என்பது தெரிய வந்தது. அதிகாரி இருவருக்கும் அறிவுறை கூறி அனுப்பி வைத்தார்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments