
ஆரம்ப நிகழ்வாக அன்னார் பேரிலான திருக்கொடியேற்ற நிகழ்வு பெரும் திரளான மக்கள் ஒன்று கூடலுடன் முறாதிய்யஹ் முழக்கத்துடன் ஏற்றி வைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து மஜ்லிஸ் மண்டபத்தில் கத்முல் குர்ஆன் நிகழ்வு நடைபெற்று மஃரிப் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது.
மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து அன்னார் பேரிலான மௌலித் மஜ்லிஸ் மஜ்லிஸ் மண்டபத்தை அலங்கரித்தது.
இஷாத் தொழுகையின் பின் சங்கைக்ககுரிய மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அன்னவர்களால் சன்மார்க்க உபந்நியாசம் நடைபெற்று இறுதியாக துஆப்பிராத்தனையும், தபர்றுக் விநியோகத்துடன் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் கந்தூரி நிகழ்வுகள் இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றன.
அல்ஹம்துலில்லாஹ்