وما الوجه إلّا واحد غير أنّه – إذا انت
أعددت المرايا تعدّدا
أعددت المرايا تعدّدا
முகம் ஒன்றே ஒன்றுதான். ஆயினும் நீ முகத்துக்கு எதிராக கண்ணாடிகளை அதிகமாக்கினால் அவற்றின் எண்ணிக்கைப்படி முகம் அதிகமாகி விடும்.
ஸூபிஸ ஞானிகள் மேற்கண்ட இப்பாடலை தமது ஞான நூல்களில் குறிப்பிடத் தவறுவதில்லை.
இதன் சுருக்கம் என்ன வெனில் ஒரு பொருளுக்கு எதிராக பல கண்ணாடிகளை வைத்தால் அந்த ஒரே பொருள் கண்ணாடிகளின் எண்ணிக்கையின் படி பலதாகத் தெரியும் என்பதாகும்.
இந்த விடயம் அனைவரும் அறிந்த ஒன்றாயிருக்கும் போது இதை ஏன் சொல்ல வேண்டுமென்று ஒருவர் கேட்கலாம்.
இக்கவிதை இறையியலைச் சுட்டிக்காட்டும் கவிதையே தவிர – இறை தத்துவத்தை உணர்த்தும் பாடலே தவிர தத்துவமற்ற சாதாரண பாடல் அல்ல.
“முகம்” என்பது அல்லாஹ்வின் “உள்ளமையை” குறிக்கும் ஒரு சொல்லாகும். திருக்குர்ஆனிலும் இச் சொல் இதே பொருளுக்கு பயன் படுத்தப்பட்டுள்ளதை இறையியல் கற்றவர்கள் நன்கறிவர்.
ولله المشرق والمغرب فأينما تولّو فثمّ وجه
الله
الله
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குரியவை. (ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை) நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு – உள்ளமை உண்டு -. (அல்லாஹ் உள்ளான்)
திருக்குர்ஆன்
மேற்கண்ட திருவசனத்தில் வந்துள்ள “வஜ்ஹ்” என்ற சொல்லுக்கு “முகம்” என்று பொருள் கொள்ளாமல் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவரான இப்னு அப்பாஸ் “றழியல்லாஹு அன்ஹு” அவர்கள் தங்களின் திருக்குர்ஆன் விரிவுரை நூலில் கூறியுள்ள “தாத்” அல்லது “வுஜூத்” என்ற பொருள் கொண்டு விளங்க வேண்டும்.
அதாவது “வஜ்ஹ்”
என்ற சொல்லுக்கு “முகம்” என்று பொருள் கொள்ளாமல் அவனின் “தாத்” அல்லது “வுஜூத்” என்று பொருள் கொண்டு நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்தான் உள்ளான் என்று விளங்க வேண்டும். இவ்வாறுதான் “ஈமான்” விசுவாசம் கொள்ளவும் வேண்டும்.
என்ற சொல்லுக்கு “முகம்” என்று பொருள் கொள்ளாமல் அவனின் “தாத்” அல்லது “வுஜூத்” என்று பொருள் கொண்டு நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்தான் உள்ளான் என்று விளங்க வேண்டும். இவ்வாறுதான் “ஈமான்” விசுவாசம் கொள்ளவும் வேண்டும்.
எங்கும் நிறைந்த ஏகன் என்று விளங்கிக் கொள்ளாமல் எங்குமாயுமுள்ள ஏகன் என்று விளங்கி விசுவாசம் கொள்ள வேண்டும்.