இஸ்லாமியப் புதுவருடமான முஹர்றம் மாதத்தை சங்கை செய்யும் முகமாகவும், இஸ்லாத்திற்காக உயிர் நீத்த நபீமணி பேரர் ஷஹீதே கர்பலா இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், பாசிப்பட்டணத்தில் கொழுவீற்றிருந்து அற்புதங்கள் நிகழ்த்தும் அஸ்ஸெய்யித் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாகவும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் கடந்த 21.10.2015ம் திகதியன்று இரு மகான்களின் பேரிலான திருக்கொடியேற்ற வைபவம் நடைபெற்றது.
தொடர்ச்சியாக மூன்று தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கத்முல் குர்ஆன், மௌலிது ஹஸனைன், நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் மௌலித் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று இறுதித் தினமான 23.10.2015ம் திகதி அன்று இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் உரையினைத் தொடர்ந்து தபர்றுக் விநியோகம், ஸலவாத்துடன் கந்தூரி நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.
– அல்ஹம்துலில்லாஹ் –