பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்
புண்ணியமிக்க மாதத்தில் கண்ணியமிக்க நபீகளாரைப் புகழ்வோம்!
அகிலத்தில் அருட்கொடை, மதீனத்தின் முத்து, நபித்துவத்தின் மகுடம், ஈருலக வேந்தர், ஆருயிர் நாதர் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதத்தை சிறப்பிக்கும் முகமாக எமது ஷம்ஸ் மீடியா யுனிட் ஏற்பாடு செய்துள்ள…
மாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015
காலம் : 19.12.2015 (சனிக்கிழமை) 20.12.2015 (ஞாயிற்றுக்கிழமை)
இடம் : மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத், தீன் நகர், காத்தான்குடி.
அடுத்த தலைமுறைக்கான புதிய தேடல்…
கிறாஅதுல் குர்ஆன் :
*) இப்போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெறும்.
*) முதலாவது பிரிவு 10-15 வயதிற்குற்பட்டதாகவும்,
இரண்டாவது பிரிவு 15 வயதிற்கு மேற்பட்டதாகவும் இருக்கும்.
*) இப்போட்டியில் இருபாலாரும் கலந்து கொள்ள முடியும்.
*) நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
மணிமொழிகள் மனனம் :
*) இப்போட்டியில் இருபாலாரும் கலந்து கொள்ள முடியும்.
*) வயதெல்லை மட்டுப்படுத்தப்படாதது.
*) ஐந்து தலைப்புக்கள் வழங்கப்படும். ஏதேனும் ஒரு தலைப்பில்
ஐந்திற்கும் குறையாத ஹதீஸ்கள் கூறப்படல் வேண்டும்.
*) தலைப்புக்கள் : 1) நபீகளாரின் அன்பு
2) நபீகளாரின் அற்புதங்கள்
3) நபீகளாரைத் தரிசித்தல்
4) நபீகளாரைப் புகழ்தல்
5) குர்ஆனும் கல்வியும்
*) ஹதீஸ்களை மனனம் செய்து,தமிழ் மொழிபெயர்ப்புடன் சொல்லவேண்டும்.
இஸ்லாமிய கீதம் :
*) நீங்கள் தெரிவு செய்யும் பாடல்கள் பெருமானார் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பற்றியதாக இருத்தல் வேண்டும்.
*) இப்போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெறும்.
*) முதலாவது பிரிவு 15 வயதிற்குற்பட்டதாகவும்,
இரண்டாவது பிரிவு 15 வயதிற்கு மேற்பட்டதாகவும் இருக்கும்.
*) இப்போட்டியில் இருபாலாரும் கலந்து கொள்ள முடியும்.
*) நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
அதான் சொல்லல் :
*) இப்போட்டியில் ஆண்கள் மாத்திரம் கலந்து கொள்ள முடியும்.
*) வயதெல்லை மட்டுப்படுத்தப்படாதது.
*) நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
இஸ்லாமிய நாடகம் :
*) சுன்னத் வல் ஜமாஅத் கருப்பொருளைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
*) 08-10 நிமிடம் வரை நாடகம் நடித்துக் காட்ட வேண்டும்.
*) ஒரு குழுவில் 5இற்கும் மேற்படாத கதாபாத்திரங்கள் கலந்து கொள்ளலாம்.
*) வயதெல்லை மட்டுப்படுத்தப்படாதது.
*) இப்போட்டியில் ஆண்கள் மாத்திரம் கலந்து கொள்ள முடியும்.
*) நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
கவிதை :
*) நீங்கள் எழுதும் கவிதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வர்ணனையாக இருத்தல் வேண்டும்.
*) 24-28 வரிகளுக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
*) கண்டிப்பாக சொந்தப்படைப்பாக இருக்க வேண்டும்
*) வயதெல்லை மட்டுப்படுத்தப்படாதது.
*) 15.12.2015ம் திகதிக்கு முன்னர் எம்மிடத்தில் ஒப்படைக்க வேண்டும்
*) நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
அறபு எழுத்தணிக்கலை :
*) உங்கள் கற்பனையில் தோன்றும் அறபு வசனங்களை எழுத்தணிகளாக
வரைய முடியும்.
*) A3 அளவுடைய வெள்ளைக் கடதாசியில் விரும்பிய வர்ணங்களைப் பயன்படுத்தி வரையலாம்.
*) கண்டிப்பாக சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
*) வயதெல்லை மட்டுப்படுத்தப்படாதது.
*) இப்போட்டியில் இருபாலாரும் கலந்து கொள்ள முடியும்.
*) 15.12.2015ம் திகதிக்கு முன்னர் எம்மிடத்தில் ஒப்படைக்க வேண்டும்
*) நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
பேச்சுப் போட்டி :
*) உங்களின் பேச்சில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் சிறப்புக்களை எடுத்துக் கூற வேண்டும்.
*) 5-7 நிமிடங்களுக்குள் பேச்சு மனனம் செய்து பேச வேண்டும்.
*) விரும்பிய மூன்று மொழிகளில் ஏதாவது ஒரு மொழியில் பேசலாம்.
1) தமிழ்
2) ஆங்கிலம்
3) அறபு
*) இப்போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெறும்.
*) முதலாவது பிரிவு 15 வயதிற்குற்பட்டதாகவும்,
இரண்டாவது பிரிவு 15 வயதிற்கு மேற்பட்டதாகவும் இருக்கும்.
*) நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
பொதுவான விதிமுறைகளும், நிபந்தனைகளும்….
*) போட்டியாளர்கள் விரும்பின் எம்மால் நிர்ணயிக்கப்பட்ட எட்டு போட்டிகளிலும் பங்கு கொள்ளலாம்.
*) ஒரு போட்டியாளர் ஒரு போட்டியில் ஒரு முறை மாத்திரமே பங்குபற்ற முடியும்.
*) போட்டிகளுக்கு வரும் போது அப்போட்டிகளுக்கு பொறுத்தமான சீருடையுடன் வருகை தரவேண்டும்.
*) உரிய நேரத்தில் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகும். போட்டியாளர் உரிய நேரத்திற்கு வருகை தர தவரும் பட்சத்தில் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்.
*) ஒவ்வொரு போட்டிக்கான நேரமும், நாளும் ~ம்ஸ் நியூஸிலும், பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயல் விளம்பரப்பலகைகளிலும் 15.12.2015ம் திகதி அன்று அறிவிக்கப்படும்.
*) விண்ணப்ப முடிவுத்திகதியான 12.12.2015ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அதன்பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
*) போட்டிக்காக நியமிக்கப்பட்ட நடுவர்களின் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதோடு, அதுவே இறுதித் தீர்ப்பாகவும் கருத வேண்டும்.
*) போட்டிக்களின் விபரங்கள் தொடர்பாக 18.12.2015 (வெள்ளிக்கிழமை) பி.ப 04:00 மணிக்கு கா.குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் கூட்டம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு விண்ணப்பித்தாரிகள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பங்களுக்கும், விபரங்களுக்கும்…..
SHUMS Media Unit
BJM. Building, AJA. Mawatha, Kattankudy-06.
Tel : 065 22 48968 Mob: 077 4849786, 077 9233971
விண்ணப்ப முடிவுத் திகதி : 12.12.2015
++++++++++++++++++++++++++++++++++++++