அருள் மணம் வீச அவனியில் அவதரித்த ஆருயிர் நாதர், நற்குணத்தின் வேந்தர், நபீகள் கோமான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளையும், வலீகட்கரசர் கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் திருமுடிகளையும் தரிசித்து அருள் பெற்று மனம் மகிழும் இனிய நிகழ்வு றபீஉனில் அவ்வல் பிறை 06 வியாழக்கிழமை இரவு (17.12.2015) அன்று காத்தான்குடி-06 தீன் நகரில் தௌஹீதின் கோட்டையாய் திகழும் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
– அல்ஹம்துலில்லாஹ் –
இந்நிகழ்வின் முழுமையான தொகுப்பு…
நபீகள் கோமானினதும், வலீகட்கரசரினதும் திருமுடிகளை கண்ணியமாக வரவேற்க இராப் பகலாக மக்கள் தொண்டர்களாக நின்று வீதிகளை கழுவியும், புற்களை அகற்றியும், வீதிகளில் வெள்ளை துணிகளை விரித்தும், தீன் நகரே மணக்கும் படி சாம்பிராணி வாசனைத் திரவியங்களை மணக்கச் செய்து தயாரான போது…
பெருமானார் பிறப்பை மிக நீண்ட காலமாக சிறப்பாக கொண்டாடி வரும் தீன் நகர் மக்களிடத்தில், திரு முடிகளை தரிசிக்கும் நிகழ்வு முதற்தடவையாக நடைபெற்றதால் கூடியிருந்த மக்களின் கண்களில் கண்ணீர் மழ்க மிகவும் கண்ணியமான முறையில் திருமுடிகளை வரவேற்றனர்.
ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் தலைமையில் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இருந்து பிரத்தியேகமாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிரதான வீதியைத் கடந்து தீன் நகர் ஊடாக ஹைறாத் பள்ளிவாயலுக்கு திரு முடிகளைக் கொண்டு வரப்பட்டது.
துப், தகறா முழக்கத்துடன் யா நபீ பைத் பாடப்பட்டு, இரு மருங்கிலும் கூடியிருந்த மக்கள் சப்தமி்ட்டு ஸலவாத் ஓத, திருமுடிகளை சுமப்பதற்காக நியமிக்கபட்டவர்கள் தங்களின் தலைகளின் மேல் சிரம் தாழ்த்தி திருமுடிகள் அடங்கிய பேழையை ஊர்வலமாய் பள்ளிவாயலுக்குள் கொண்டு செல்லும் காட்சி்…
ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் திருமுடிகளை தரிசித்து அருள் பெற்றபின் துஆப்பிரார்த்தனையுடன் திருமுடிகளை எடுத்தும் செல்லும் காட்சி.
இறையருளாலும், அருள் நபீகளாரின் பறகத்தாலும், வலீமார்களின் நல்லாசியுடனும் இனிதே நடைபெற்று முடிந்த இந்நிகழ்வுக்கு காலநிலையை சாதகமாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
அல்ஹம்துலில்லாஹ்.