
இந்நிகழ்வில் பி.ப 05:00 மணியளவில் திருக்கொடியேற்றப்பட்டு தொடர்ந்து கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும் இஷா தொழுகையின் பின் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பேரிலான மௌலித் மஜ்லிஸ், தொடர்ந்து அன்னாரின் சிறப்புக்களை எடுத்துரைத்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் உரையாற்றினார்கள். இறுதியில் துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம் செய்யப்பட்டு ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.
– அல்ஹம்துலில்லாஹ் –