
மூன்று நாள் நிகழ்வுகளி்ல் ஆரம்பமாக முப்பெரு வலீமார்கள் பெயரிலான திருக்கொடியேற்றமும், கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸும், மீரான் ஸாஹிப் மௌலித், முறாதிய்யஹ் பைத், அம்பா நாயகம் மௌலித், கஸீததுல் புர்தஹ் மஜ்லிஸ் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற்றன. மூன்று தினங்களும் இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய உலமாஉகளால் சன்மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்றது.
இறுதித்தினமான கந்தூரி தினமன்று இஷா தொழுகையின் பின் விஷேட நிகழ்வாக, இந்தியா வடநாட்டில் முபாறக்பூரில் அமைந்திருக்கும் அல் ஜாமிஅதுல் அஷ்றபிய்யஹ் மிஸ்பாஹுல் உலூம் கலாபீடத்தில் ஹதீஸ் துறையில் மிஸ்பாஹீ பட்டம் பெற்று ஆலிமாக நாடு திரும்பிய சங்கைக்குரிய மௌலவீ MT.பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ, மிஸ்பாஹீ அன்னவர்களை கௌரவி்க்கும் நி்கழ்வு அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு அன்னாருக்கு பொன்னாடைகளும், கௌரவ விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இறுதியாக பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம் நிறைவினைத் தொடர்ந்து இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்