அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 04ம் நாள் மஜ்லிஸ் நிகழ்வுகள் 28.05.2016 (சனிக்கிழமை) அன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு ஹாஜாஜீ மஜ்லிஸ் நிகழ்வாக மௌலிது அதாஇர் றஸூல் மஜ்லிஸுவும்,05.30 மணிக்கு அல் மத்றஸது முஹ்ஸின் மௌலானா, அல் மத்றஸதுல் ஐனிய்யஹ் மத்றஸாக்களில் ஆரம்ப கல்வியை கற்று வெளியேறும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மஃரிப் தொழுகையின் பின் அஸ்மாஉ ஹாஜா ஓதும் மஜ்லிஸும், இஷாத் தொழுகையின் பின் ஹாழிறூ பாச்சரம், பயான், ஞானப் பாடல், துஆ, ஸலவாதுடன் மஜ்லிஸ் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. விஷேட நிகழ்வாக அன்றிரவு 10.30-12.30 மணிவரை பள்ளிவாயலின் முன்றலில் ஹாஜா நாயகம் அன்னவர்களை விழித்துப் பாடிய கவ்வாலி மஜ்லிஸும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து இம்மஜ்லிஸை கண்டு கழித்தனர். அதனைத் தொடர்ந்து அல் ஆலிமுல் பாழில், அல் வலிய்யுல் வாஸில் அபுல் இர்பான் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் தர்கா ஷரீபிற்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற்று ஹஜாஜீ மாகந்தூரி தினத்தில் தொண்டாற்றும் தெண்டர்களுக்கான தொண்டர் அட்டை வழங்கும் நிகழ்வு நிறைவு பெற்று மாகந்தூரிக்கான வேலைகள் ஆரம்பாகின…. 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 04ம் நிகழ்வுகளின் தொகுப்பு…