ஆக்கம் – மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ
றமழான் மாதம் அடியார்கள் செய்த பாவங்களை சுட்டெரிக்கக்கூடியதாக இறைவனின் வல்லமை கொண்டு ஆக்கப்பட்டிருக்கின்றது. அடியார்களின் பாவங்களை, தான் விரும்பினால் தன் “குத்றத்” பேராற்றல் கொண்டு மன்னிப்பவனாகவோ அல்லது தண்டிப்பவனாகவோ அல்லாஹ் இருக்கின்றான். அவன் தண்டிப்பதிலும் ஏதாவது நுட்பமான காரணம் ஒன்று கையாளப்பட்டிருக்கும். மன்னிப்பதிலும் மகத்தான பிண்ணனி ஒன்று சேர்ந்ததாக
இருக்கும்.
றமழான் மாதத்தில் நோற்கப்படும் நோன்பின் “அருள்” கொண்டு அடியார்களுக்கு “றஹ்மத்” வழங்குதல் , பிழை பொறுத்தல், நரகத்தில் இருந்து விடுதலை அளித்து
சுவனத்தை பரிசாக வழங்குதல்
ஆகியவற்றை அல்லாஹ் செய்கின்றான்.
இங்கு ஒரு விடயத்தை நாம் கவனிக்கலாம். நோன்பு
எனும் வணக்கத்தை புனித மிக்க இந்த றமழான் மாதத்தில் உள்ளடக்கி
அடியார்களுக்கு மூன்று அன்பளிப்புக்களை வழங்குகின்றான். இம்மூன்றும் மனிதனை புனிதனாக்குவதில்
முக்கியமானவை ஆகும்.

பிறக்கும் போது அடியான் சுத்தமாகப் பிறந்தாலும், நாளடைவில் “நான்” எனும் உணர்வு
அனைத்துப்பாவங்களையும் செய்யத் தூண்டி விடுகின்றது. அப்படி தீய பண்புகளை
கொண்டு பிண்ணப்பட்ட இவனை முதலில் அருள் கொண்டு பார்க்கவேண்டும். பின்னர் அவனின்
பாவங்களை அகற்றவேண்டும்., அதன் பின்னர் நரகத்திலிருந்து
விடுதலை அளித்து சுவனத்திற்குள்
நுளைவிக்க வேண்டும். மேற் சொன்ன விடயங்களான “அருள் கொண்டு பார்த்தல் (அதாவது அருள் செய்தல்), “பாவத்தை மன்னித்தல்” போன்ற
இவ்விரண்டும் செய்யப்படாமல் சுவனத்தில் நுழைய முடியாது. காரணம் சுவனத்தில்
அனுப்பிரமாணம் அழுக்குடையவரும் (பாவம் சூழ்ந்தவரும்) உட் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

அருள் என்பதற்கு இரக்கம், அன்பு, கருணை என்று சொல்லப்படும். இறைவனின் கோபத்தை விட இரக்கம்
முந்தியதாகும். அவனின் அருள் இல்லையெனில்
நாம் நஷ்டவாளர்களில் ஆகிவிடுவோம். ஆகையால்தான் முதலில் அருள் அவசியத் தேவைப்பாடாக
ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் இருக்கின்றது. அதனால்தான் நபி பெருமானார் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்,

37 – حَدَّثَنَا الْحَسَنُ
بْنُ عَلِيٍّ، قثنا هِشَامُ بْنُ عَمَّارٍ،. قَالَ: ثنا سَلَامُ بْنُ سَوَّارٍ،
قثنا مَسْلَمَةُ بْنُ الصَّلْتِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ
أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَوَّلُ شَهْرِ رَمَضَانَ رَحْمَةٌ، وَأَوْسَطُهُ مَغْفِرَةٌ، وَآخِرُهُ عِتْقٌ
مِنَ النَّار ِ»

الكتاب: فضائل رمضان
المؤلف: أبو بكر عبد الله بن محمد ـ
றமழான் மாதத்தின் ஆரம்பம் (ஆரம்ப பத்து
தினங்களும்) “றஹ்மத்தாகும்”. அதன் நடுப்பகுதி (நடுப்பத்து தினங்களும்)
“பாவமன்னிப்பாகும்”,. அதன் இறுதி (இறுதிப்பத்து தினங்களும்) “நரக விடுதலையாகும்”.
என
நவின்றார்கள்.

நூல்: பழாயிலு றமழான்
நூலாசிரியர் அபூபக்ர் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத்
ஹதீத் இலக்கம் :37
இரண்டாவது விடயம் பாவமன்னிப்பாகும்.
ஆரம்பத்தில் பார்க்கப்பட்ட இந்த ஹதீத் (‘நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம்
நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ )
றமழான் மாதம் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து நோன்பு பிடித்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது எனவும்,

இன்னுமோர் ஹதீத்
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا
هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ
اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ
قَامَ لَيْلَةَ القَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ
ذَنْبِهِ

லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை
எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது.

நூல்: புகாரீ
ஆரம்பத்தில் சொல்லப்பட்ட ஹதீதும், கீழ் கண்ட இந் நபீ மொழியும் முன்பு செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதாக சுட்டிக்காட்டுவதுடன், நம்பிக்கைகொள்ளல், நன்மையை எதிர்பார்த்தல் எனும் இரண்டு அம்சமும் அவ்விரண்டு பொன் மொழிகளிலும் கண்டிப்பான நிபந்தனையாக விளக்கப்பட்டுள்ளது.
பாவங்களைப் பொறுத்த மட்டில் சிறிய பாவம், பெரிய பாவம் என இரண்டு பாவம் உள்ளது.
பெரிய பாவங்களில் (உதாரணமாக) :-
அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், மற்றும் தண்டணைக்குரிய, மார்க்க சட்டங்கள் நிறைவேற்றப்படக்கூடிய களவு, விபச்சாரம், மது அருந்துதல், பத்தினித்தனமான கற்புள்ள பெண்னைவேண்டுமென கோபம், பொறாமையின் காரணமாக அவதூறு கூறுதல் போன்றன உள்ளடங்கும். மற்றும் பெரிய பாவங்களுல் அண்ணல் நபி நாயகத்தால் அழிவுப்பாதையின் பால் அழைத்துச் செல்லும் என அச்சமூட்டப்பட்ட பாவங்களும் சேரும்.

இவ்விரு வகையான பெரிய பாவங்களுல் இணைவைத்தல் என்ற “ஷிர்க்” ஆன பாவத்தை நான் மன்னிக்கவே மாட்டேன் என வள்ள “ஹக்” தஆலா நாயன் அருள் மறையில் வலியுறுத்திக்கூறுகின்றான். ஆயினும் மற்ற பெரிய பாவங்களை தான் நாடியோருக்கு மட்டும் மன்னிப்பதாக சலுகை வழங்கி கருணையுடன் வாக்களித்துமிருக்கின்றான். மேலும் பெரிய பாவங்கள் என சுட்டிக்காட்டப்படாத பாவங்கள் தொழுகையைக் கொண்டும், இஸ்திக்பார், (பாவமன்னிப்புக் கேட்டல்), தௌபா (பாவத்தைவிட்டும் நீங்கி அப்பாவத்தை இனிமேல் செய்யாமல் அல்லாஹ்வின் பால் மீளுதல்) துஆ கேட்டல் என்பன வற்றால் அல்லாஹ்வின் “அப்வ்’ எனப்படும் மன்னிப்பு கொண்டு மன்னிக்கப்படுகின்றன.
பாவ மன்னிப்பின் அவசியம்.
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ يَا قَوْمِ
إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُم بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَىٰ
بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ عِندَ بَارِئِكُمْ
فَتَابَ عَلَيْكُمْ ۚ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ

2:54. மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை (வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம்
உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.

அல் குர்ஆன்.
فَبَدَّلَ
الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى
الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ

2:59. ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை
அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது – (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.

அல் குர்ஆன்
மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ்வுக்கு “காளை” மாட்டை இணையாக்கிய கூட்டத்தைப் பற்றியும், அக்கிரமக்காரர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து அவர்களின் பாவங்களின் காரணமாக தண்டணை
இறக்கப்பட்டது எனவும் அல்லாஹ் கூறிக்காட்டுகின்றான்.

ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ
وَيُحِبُّ الْمُتَطَهِّرِين-َ2:222
وَيُحِبُّ الْمُتَطَهِّرِين-َ2:222
பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ்
நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும்
நேசிக்கின்றான்.”
நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும்
நேசிக்கின்றான்.”
அல் குர்ஆன்
الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ
وَيَأْمُرُكُم بِالْفَحْشَاءِ ۖ وَاللَّهُ
يَعِدُكُم مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

2:268. (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்)
கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச்
செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால்
அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்)
தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும்
என்று) வாக்களிக்கின்றான்;
நிச்சயமாக அல்லாஹ் விசாலமான
(கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.

(ஆரம்பமாக
வந்த) இரு வசனங்களைத் தொடர்ந்து வந்த மற்றய (இரு) வசனங்களில் முதலாவது வசனத்தில் ‘தெளபா” செய்பவர்கள ( பாவத்தை விட்டும் மீளுபவர்களை), அல்லாஹ் விரும்புவதாகவும், பரிசுத்தமுடையவர்களை விரும்புவதாகவும் கூறிக்காட்டுகின்றான்.
அல்லாஹ்வின் நேசம் , கருணை அவனளவில் அடியார் தன் பாவம் போக்க மனம் அழுது, சளித்து, கண்ணீர் மல்க “தௌபா” கேட்பது கொண்டும், மனச்சுத்தம், மனக்கறை அகற்றுவது கொண்டுமே
நிகழ்கின்றது. என்பதை தெளிவாக அய்யமற படம்பிடித்துக்காட்டுகின்றது.

இரண்டாவது வசனம் அடியாருக்கு “பாவன்னிப்பு”
எனும் நற்பேற்றை வழங்குவது கொண்டும், செல்வத்தை நல்குவதுகொண்டும் ஷைதானுக்கு
சாட்டையடி விழுவதை போதிக்கின்றது. இரு வசனங்களும் பாவன்னிப்பை
உணர்த்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ
مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ
وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا
سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ
رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

2:285. (இறை) தூதர்,
தம் இறைவனிடமிருந்து தமக்கு
அருளப்பெற்றதை நம்புகிறார்;
(அவ்வாறே)
முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்)
யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும்
பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்)
இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன்
கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள்
இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்)
மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا
إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا
كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا
مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ
عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى
الْقَوْمِ الْكَافِرِينَ

2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு
கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே!
(முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள்
இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது
நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள்
இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!
எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள்
மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை
மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள்
வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”

மேற்கண்ட இறுதி இரு வசனங்களும் “அர்ஷுக்கு கீழ் உள்ள பொக்கிஷம்” என
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் சொல்லப்பட்டவையாகும்.
அதை இரவில் ஓதுவதால் அதிக நன்மைகள் இருப்பதாகவும் வருகின்றது. இவ்விரு வசனங்களும்
பாவமன்னிப்பை அடியார்கள் அல்லாஹ்விடம் முறையீடாக ஒப்பிப்பதை
எடுத்துக்காட்டுகின்றது.

தௌபா செய்பவர்களுக்கு பாவ மன்னிப்பு இருக்கின்றது.
إِلَّا الَّذِينَ
تَابُوا مِن بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

3:89. எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம்
பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும்
மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும்
இருக்கின்றான்.

பாவமன்னிப்புக் கோரி பாவமீட்சி
பெறுவதால் பாவங்கள் அகன்றுவிடுகின்றன.
சான்று -01
அபூஸிர்மா மாலிக் பின் கைஸ் (ரலி) அவர்கள்
கூறுகின்றார்கள்.
கூறுகின்றார்கள்.
அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களுக்கு
இறப்பு நெருங்கியபோது,
“நான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியை உங்களிடம்
கூறாமல் மறைத்துவைத்திருந்தேன். (அதை இப்போது உங்களிடம் கூறுகிறேன்:)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் பாவம் செய்யாதவர்க ளாக இருந்து
விட்டால், நிச்சயமாகப் பாவம் செய்கின்ற ஒரு
படைப்பை அல்லாஹ் உருவாக்கி அவர்களுடைய பாவங்களை அவன் மன்னிக்கவே செய்வான் என்று
கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

மேற்கண்ட ஹதீத் அபூ ஹுறைறா றழி
அவர்களைத்தொட்டும் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாகிறது…

11 – (2749) حَدَّثَنِي
مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ،
عَنْ جَعْفَرٍ الْجَزَرِيِّ، عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ، عَنْ أَبِي
هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ لَمْ تُذْنِبُوا لَذَهَبَ اللهُ بِكُمْ،
وَلَجَاءَ بِقَوْمٍ يُذْنِبُونَ، فَيَسْتَغْفِرُونَ اللهَ فَيَغْفِرُ لَهُمْ»

சான்று 02
5304. நபி பெருமானார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது
சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம்
செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம்
பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்.

ஸஹீஹ் முஸ்லிம்.
இந்த ஹதீத் பாவம் எனும் செயலை
வலியுறுத்துகின்றது. என்று தப்பாக நினைக்க
வேண்டாம். சஹாபாக்களின் செயல் முறைகளை அவதானித்த அண்ணல் நபீ ஸல் அவர்கள்
சஹாபா தோளர்கள் உலகில் பற்றற்று வாழ்வது ஒட்டு மொத்தமா உலக ஆசா, பாசங்களை ஒதுக்கி விடக்கூடும்.
அப்படியவர்கள் வாழ்ந்தால் நன்மையைத்தவிர தீமைகளைச் செய்யமாட்டார்கள். தீமை
அவர்களில் இருந்து வெளியாகாமல் இருந்தால்
அல்லாஹ்விடம் அழுது, புலம்பி தன் தவறுகளை முன்வைத்து
சுட்டிக்காட்டி முடுகுதல் (நெருக்கம்) பெறமாட்டார்கள். அல்லாஹ் அளவில் நெருக்கம்
பெறுவதானது அவன் அளவில் பிழை பொறுக்கத் தேடுவது கொண்டே அல்லாமல் நிகழ்ந்து
விடாது.மேலும் தன் பாவத்தை வருந்தி முனாஜாத்
செய்து பிழை பொறுக்கத்தேடி தௌபாசெய்வது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமுடையதாகவும்
இருக்கும் என்பதற்காகவே அல்லாமல் அப்படி அவர்கள் சொல்லவில்லை.
2186 – / 2752 – وَفِي الحَدِيث
السَّابِع وَالسِّتِّينَ: ((لَو لم تذنبوا لذهب الله بكم ولجاء بِقوم يذنبون
فيستغفرون فَيغْفر لَهُم)) .

هَذَا دَلِيل على أَن
المُرَاد من العَبْد الذل؛ فَإِن المذنب منكسر لذنبه، منكس الرَّأْس لجرمه،
وَبِهَذَا يبين ذل الْعُبُودِيَّة وَيظْهر عز الربوبية، وَفِيه تَقْوِيَة لرجاء
المذنب فِي الْعَفو

الكتاب: كشف
المشكل من حديث الصحيحين
المشكل من حديث الصحيحين
المؤلف: جمال الدين
أبو الفرج عبد الرحمن بن علي بن محمد الجوزي (المتوفى: 597هـ)

(நீங்கள் பாவம் செய்யாதவர்களாக
இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக்
கொண்டுவருவான்) என்ற இந்த ஹதீதை கொண்டு நோக்கம்
அடியானிடத்திலிருந்து ஏற்படக்கூடிய (பாவத்தை வருந்திய) சடைதலாகும்.
நிச்சயமாக பாவியாகிறவன் தனது பாவத்தின் காரணமாக
மனம் உடைந்துபோய் இருக்கின்றான். தன்னில் நின்றும் உண்டான குற்றத்திற்காக
தலையை தொங்கப் போட்டவனாகவும் இருக்கின்றான். இந்நிலையில் அடிமையை சார்ந்த சடைதல்
தெளிவாக வெளியாகின்றது. மேலும் றப்பைச் சார்ந்த வலுப்பமும் வெளிப்புறப்படுகின்றது.
மேலும் அதில் மன்னிப்பளவில் பாவியின் ஆதரவுக்கான பலமும் தங்கியிருக்கின்றது.

என “கஷ்புல் முஷ்கில் மின் ஹதீதிஸ்ஸஹீஹைன்” எனும் நூலில் அல் இமாம் ஜமாலுத்தீன் அபுல் பறஜ் அப்துர்றஹ்மான் இப்னி
அலிய்யிப்னி முஹம்மத் அல்ஜவ்ஸீ என்ற பெரியார் விரிவுரை செய்கின்றார்கள்.

கீழ்வரும் சம்பவமும் ஏற்கனவே நான் சொன்ன
கூற்றுக்களுக்கு ஆதரவு அளிக்கின்றது. இந்த சம்பவம் பைஹகீ இமாம் அவர்கள் தங்களின் கிரந்தமான ஷுஅபுல்
ஈமான் எனும் ஹதீத் நூலில் எழுதிக்காட்டுகின்றார்கள்.

وأخرج البيهقي في شعب الايمان عن عبد الله
بن عمرو قال: أنزلت (إذا زلزلت الأرض زلزالها) [سورة الزلزلة: 1] وأبو بكر قاعد
فبكى أبو بكر، فقال له رسول الله صلى الله عليه وسلم: ” ما يبكيك يا أبا بكر
” قال: أبكاني هذه السورة.

فقال له رسول الله صلى الله عليه وسلم:
” لو أنكم لا تخطئون، ولا تذنبون فيغفر لكم، لخلق الله أمة من بعدكم يخطئون
ويذنبون فيغفر لهم “.

அப்துல்லாஹ் இப்னு அம்று றழி அவர்கள்
அறிவிக்கின்றார்கள். “இதா சுல்சிலா” சூறா இறக்கப்பட்டது. அந்நேரம் ஹஸ்றத் அபூபக்ர் சித்தீக் றழி அவர்கள்
உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்கள். அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அபூபக்ரே
! உங்களை அழவைத்தது எது? என கேட்டார்கள். அதற்கவர்கள் (நாயகமே)
! இந்த சூறத் என்னை அழச் செய்தது. என்றார்கள். உடனே நபிகள் நாயகம் ஸல்
அவர்கள் (அல்லாஹ்) உங்களுக்கு மன்னிப்பான்
“என்பதற்காக” தவறு செய்யாதவர்களாகவும், பாவம் செய்யாதவர்களாகவும் நீங்கள்
இருந்தால் உங்களுக்குப் பின்னால் பாவம், தவறு
செய்யக்கூடிய (அதன் பிறகு மன்னிப்புக் கேட்கக்கூடிய) ஒரு சமூகத்தை அல்லாஹ் படைத்து
அவர்களுக்கு அவர்களின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான். என அபூபக் சித்தீக் நாயகத்திற்கு அண்ணலார்
விளக்கிக் கூறினார்கள்.

சான்று – 03
حَدَّثَنَا أَبُو اليَمَانِ،
أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ
عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «وَاللَّهِ إِنِّي لَأَسْتَغْفِرُ
اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي اليَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً»

6307. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்,
அறிவிக்கின்றார்கள்,
‘அல்லாஹ்வின்
மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் ‘அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி‘ என்று கூறுகிறேன் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.

(பொருள்:
நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு நாளைக்கு எழுபது
முறை பாவமன்னிப்புத் தேடியதாக மேற் கண்ட ஹதீதில் அவதானிக்க முடிகின்றது. மேலும்
இன்னும் சில ஹதீதுகளில் நூறு முறை பாவமன்னிப்புத் தேடியதாகவும் இடம்
பெற்றிருக்கின்றது. அவ்விரு எண்ணிக்கையைக் கொண்ட ஹதீதுகளும் சமூகத்திற்கு
படிப்பிணையூட்டுவதற்காகவும், தன் பணிவை வெளிக் காட்டுவதற்காகவுமே நபிகள் நாயகம் செய்தார்கள். அவர்கள் பாவம்
செய்து பாவமன்னிப்புக் கோருமளவிற்கு பாவியல்லர். அவர்கள் முன் பின் பாவம்
மன்னிக்கப்பட்டவர்கள். என இமாம்கள் கூறுகின்றார்கள். இன்னும் சில இமாம்கள் அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமிடையில் நூறு ஒளித்திரையும், இருட் திரையும் இருக்கின்றன. ஆயிரம்
மகாம் (அந்தஸ்த், படித்தரம்) களும் இருக்கின்றன. ஒவ்வொரு
படித்தரங்களையும் கடந்து செல்லும் போதும் பாவமன்னிப்புத் தேடுகின்றார்கள். அப்போது
சகல திரைகளையும், ஆயிரம் அந்தஸ்த்துக்களையும் கடந்து பூரணத்துவம் பெறுகின்றார்கள்.
எனவும், ஒரு அடியார் ஒரு நிலையிலிருந்து மற்ற
நிலைக்கு உயர்ந்து செல்கின்றார் அப்போது ஆரம்ப படித்தரத்தில் தரிபட்டு அதை கடந்த
பின் இரண்டாம் படித்தரத்தில் நின்று அந்த படித்தரத்தை முந்தியதைக் காண உயர்வாக
(சிறப்பாக) கருதுகின்றார். அப்போது அதற்காக பாவமன்னிப்புத் தேடுகின்றார் என
ஜுனைதுல் பக்தாதீ இமாம் அவர்கள் கூறிய கருத்தை ஆரிபீன்கள் எடுத்துக் கூறுகின்றார்கள்.

ஆதாரம் : றூஹுல் பயான்.
கூறப்பட்ட ஹதீதை இவ்விடத்தில் எங்களுக்கு
படிப்பினையாக எடுத்து மாத்திரம் செயற்படுவது சிறந்ததாகும். நபிகள் நாயகம் ஸல்
அவர்கள் பாவம் இளைத்தார்கள் அதனால் பாவமன்னிப்புத் தேடினார்கள் என்று ஒரு
மண்ணளவும் எண்ணிவிட வேண்டாம். அவர்களின் அந்தஸ்த்திற்கு அநுவளவும் நாம்
செல்லவில்லை இனி ஒருபோதும் எவரும் செல்லப் போவதுமில்லை என்பதே திண்ணம்.

சான்று- 04
7 – (2747) حَدَّثَنَا مُحَمَّدُ
بْنُ الصَّبَّاحِ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالَا: حَدَّثَنَا عُمَرُ بْنُ
يُونُسَ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ
اللهِ بْنِ أَبِي طَلْحَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ وَهُوَ عَمُّهُ،
قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَلَّهُ
أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ حِينَ يَتُوبُ إِلَيْهِ، مِنْ أَحَدِكُمْ
كَانَ عَلَى رَاحِلَتِهِ بِأَرْضِ فَلَاةٍ، فَانْفَلَتَتْ مِنْهُ وَعَلَيْهَا
طَعَامُهُ وَشَرَابُهُ، فَأَيِسَ مِنْهَا، فَأَتَى شَجَرَةً، فَاضْطَجَعَ فِي
ظِلِّهَا، قَدْ أَيِسَ مِنْ رَاحِلَتِهِ، فَبَيْنَا هُوَ كَذَلِكَ إِذَا هُوَ
بِهَا، قَائِمَةً عِنْدَهُ، فَأَخَذَ بِخِطَامِهَا، ثُمَّ قَالَ مِنْ شِدَّةِ
الْفَرَحِ: اللهُمَّ أَنْتَ عَبْدِي وَأَنَا رَبُّكَ، أَخْطَأَ مِنْ شِدَّةِ
الْفَرَحِ “

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள்:
அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வறண்ட பாலைவனத்தில்
ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டார். (அவர் ஓரிடத்தில் இறங்கி ஓய்வெடுத்துக்
கொண்டிருந்தபோது) அவரது ஒட்டகம் தப்பியோடி விட்டது. அதன் மீதே அவரது உணவும்
பானமும் இருந்தன. அவர் (தமது ஒட்டகத்தைத் தேடியலைந்து அதைக் கண்டுபிடிக்க
முடியாமல்) நம்பிக்கையிழந்து, ஒரு
மரத்திற்கு அருகில் வந்து,
அதன் நிழலில் படுத்திருந்தார்.

தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அதே
நிலையில் அவர் நிராசையுடன் இருந்தபோது, அந்த
ஒட்டகம் (வந்து) தமக்கு அருகில் நிற்பதை அவர் கண்டார். உடனே அதன் கடிவாளத்தைப்
பிடித்துக்கொண்டார். பிறகு மகிழ்ச்சிப் பெருக்கால் அவர், (“இறைவா! நீ என் இறைவன்; நான் உன் அடிமை” என்று
சொல்வதற்குப் பதிலாக) “இறைவா! நீ என் அடிமை; நான் உன் இறைவன்” என்று தவறுதலாகச் சொல்லிவிட்டார். இந்த
மனிதரைவிடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம்
மகிழ்ச்சி அடைகிறான்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில்
வந்துள்ளது.
வந்துள்ளது.
மேற்கண்ட நபி மொழியில். “இறைவா! நீ என் இறைவன்; நான் உன் அடிமை” என்று
சொல்வதற்குப் பதிலாக)
சொல்வதற்குப் பதிலாக)
“இறைவா! நீ என் அடிமை; நான்
உன் இறைவன்” என்று தவறுதலாக அந்த மனிதன் சொன்னான். இது உண்மையில் தவறிச்
சொன்ன சொல்லாகும். குற்றம் பிடிக்க அல்லாஹ் நாடினால் காரணம் ஒன்றை ஏற்படுத்தி
குற்றம் பிடித்திருக்கலாம். அப்படி றப்புல் ஆலமீன் செய்யவில்லை. மனிதன்
மகிழ்ச்சியில் ஒன்றை தவறாகச் செய்வதை குற்றமாக எடுக்கமாட்டான் என்பதற்கு இது
தகுந்த சான்றாகும்.மேலும் தவறாக “நான்
உனது இறைவன்” எனச்சொன்ன இந்த மனிதரைவிட தன் அடியான்
பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்
என்பதும், தெளிவாகின்றது.

சான்று 05
1 – (2675) حَدَّثَنِي سُوَيْدُ
بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنِي زَيْدُ بْنُ
أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: ” قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: أَنَا
عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ حَيْثُ يَذْكُرُنِي، وَاللهِ لَلَّهُ أَفْرَحُ
بِتَوْبَةِ عَبْدِهِ مِنْ أَحَدِكُمْ يَجِدُ ضَالَّتَهُ بِالْفَلَاةِ، وَمَنْ
تَقَرَّبَ إِلَيَّ شِبْرًا، تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَمَنْ تَقَرَّبَ
إِلَيَّ ذِرَاعًا، تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِذَا أَقْبَلَ إِلَيَّ
يَمْشِي، أَقْبَلْتُ إِلَيْهِ أُهَرْوِلُ “

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “என்னைக் குறித்து என் அடியான் எப்படி
நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்கிறேன். அவன் என்னை நினைவு
கூரும்போது அவனுடன் நான் இருப்பேன்” என்று கூறினான்.

அல்லாஹ்வின் மீதாணையாக! பாலைவனத்தில்
தொலைத்துவிட்ட தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்கும்போது, உங்களில் ஒருவருக்கு ஏற்படும்
மகிழ்ச்சியைவிட, தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி
மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறான்.

யார் என்னிடம் ஒரு சாண் அளவு நெருங்குகிறாரோ, நான் அவரிடம் ஒரு முழம் அளவு
நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் நெருங்குகிறாரோ, நான் அவரிடம் (வலம் இடமாக விரிந்த) இரு
கை நீட்டளவு நெருங்குகிறேன். அவர் என்னை நோக்கி நடந்து வந்தால், நான் அவரை நோக்கி ஓடிச்செல்கிறேன்
(என்று அல்லாஹ் கூறினான்).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாவம் செய்தவர்கள் அல்லாஹ்வை பயந்து
நடக்கவேண்டும்.
நடக்கவேண்டும்.
وَاتَّقُوا يَوْمًا
لَّا تَجْزِي نَفْسٌ عَن نَّفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا
يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ

2:48. இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு
சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த
நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக்
கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி
செய்யப்படவும் மாட்டார்கள்.

அல்குர்ஆன்
செய்யிதுல் இஸ்திஃபார்
6306 – حَدَّثَنَا أَبُو
مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا الحُسَيْنُ، حَدَّثَنَا عَبْدُ
اللَّهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ: حَدَّثَنِي بُشَيْرُ بْنُ كَعْبٍ العَدَوِيُّ، قَالَ:
حَدَّثَنِي شَدَّادُ بْنُ أَوْسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: عَنِ النَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

” سَيِّدُ
الِاسْتِغْفَارِ
الِاسْتِغْفَارِ
أَنْ تَقُولَ : اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ
إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ
وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ
بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لاَ
يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ “

قَالَ: «وَمَنْ
قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا، فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ
يُمْسِيَ، فَهُوَ مِنْ أَهْلِ الجَنَّةِ، وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهُوَ
مُوقِنٌ بِهَا، فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ، فَهُوَ مِنْ أَهْلِ الجَنَّةِ»

6306. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்’
‘அல்லாஹும்ம!
அன்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த. கலக்தனீ. வ அன அப்துக. வ அன அலா அஹ்திக, வ வஃதிக்க மஸ்த தஃத்து. அஊது பிக மின்
ஷர்றி மா ஸனஅஃத்து. அபூ உ லக்க பி நிஃமத்திக அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப
இல்லா அன்த’ என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த
பாவமன்னிப்புக் கோரலாகும்.

(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி.
உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான்
உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை
நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக்
கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான்
ஒப்புக்கொள்கிறேன். மேலும்,
நான் பாவங்கள் புரிந்துள்ளதையும்
உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை
மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)

இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும்
தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக
இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான
எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகிறவரும்
சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்கள்
ஆதாரம் : ஸஹீஹுல் புஹாரீ.
றமழான் காலங்களில் மட்டும் பாவமன்னிப்புத்
தேடி மீட்சி பெற வேண்டுமென விரும்பாமல், ஒவ்வொரு நாளும் எங்களின் ஒவ்வொரு
செயலுக்காகவும், தீய சில எண்ணங்களுக்காகவும்
அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடப்
பலகிக்கொள்ள வேண்டும். இது புனிதம்
நிறைந்த றமழானின் ‘மக்பிறத்” பற்றிய சில சுருக்கமான விளக்கமாகும்.

தொடரும்…………………………..