Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஷஹீதே கர்பலா நபீ பேரர் இமாம் ஹூஸைன் றழில்லாஹு அன்ஹு அவர்களின் படுகொலை! அஹ்லு பைத்தினரை...

ஷஹீதே கர்பலா நபீ பேரர் இமாம் ஹூஸைன் றழில்லாஹு அன்ஹு அவர்களின் படுகொலை! அஹ்லு பைத்தினரை அழிக்கும் திட்டம் அன்றே உருவாகி விட்டது.

மெளலவீ HMM. இப்றாஹீம் நத்வீ
அல் ஆலிமுல் பாழில் வல் வலிய்யுல் வாஸில் அஷ்ஷெய்கு அப்துர் றஹ்மான் பின் அப்தில்லாஹ் அவர்களினால் ஹிஜ்ரி 1318இல் எழுதப்பட்டு ஹிஜ்ரி 1329இல் (1911 ஆகஸ்ட் 31) இல் அச்சிடப்பட்ட ‘’துஹ்பதுல் அப்றார் பீ அஷ்றாதிஸ்ஸாஅதி வஅஹ்வாலின்னார் ,வநயீமி தாரில் அக்யார் , வஉர்ஸி ஸெய்யிதினல் முக்தார், வலிகாஇ காலிகில்லைலி வன்னஹார்’’ என்ற அறபு நூலின் 13ம் 14ம் பக்கத்தில் இறுதி நாளின் 9வது அடையாளமான ஹழ்றத் ஹூஸைன் பின் அலீ (றழீ) அவர்களின் கொலை பற்றிக் குறிப்பிடுகையில்
ஹழ்றத் அனஸ் இப்னுல் ஹரித் (றழீ) அவர்களைத்தொட்டும் தனது முஸ்னதில் அல் முஹாபிழ் அபூ ஷூஐப் உத்மான் பின் ஸகன் (றஹ்) சொல்கிறார்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் ஹூஸைன் (றழீ) அவர்களைக் காட்டி எனது இந்த மகன் இறாக் நாட்டில் கொலை செய்யப்படுவார். யார் அவர்களை அடைகின்றாரோ அவர் அவருக்கு உதவிசெய்யவும் என்று !

ஸெய்யிதுனா ஹூஸைன் (றழீ) அவர்கள் கூபாவிலுல்ல கர்பலா என்னுமிடத்தில் வெள்ளியன்று கொலை செய்யப்பட்டார்கள். பிறிதொரு சொல்லின்படி சனிக்கிழமையென்றும் இன்னொருசொல்லின்படி ஞாயிறு தினம் என்றும் சொல்லப்படுகிறது .பெரும்பாலானோர் வெள்ளிக் கிழமையே ஷஹீதாக்கப்பட்டார்கள் என்றுசொல்கின்றனர் .
அவர்கள் மீது ஒரு போர்வை இருந்தது. அப்போது அவர்களுக்கு வயது 56 ஆகும்.
இது ஹிஜ்ரி 61ம் வருடம் புனித முஹர்றம் பிறை 10 ஆஷூறா தினம் நிகழ்ந்தது. இவ்வாண்டை ‘’ஆமுல் ஹுஸ்ன் ‘’ துக்க ஆண்டு என்று அழைக்கப்படுகிறது.
அதன் பின் அவர்களின் மகன் அலீ என்றழைக்கப்படும் ஸைனுல் ஆபிதீன் (றழீ) அவர்களைத் தவிர எல்லா மக்களும் கொலை செய்யப்பட்டனர். அப்போது அலீ (ஸைனுல் ஆபிதீன்) நோயாளியாக இருந்தார்கள். தந்தையின் கொலையின் பின் அவர்கள் சிறைக்கைதியாக்கப்பட்டார்கள் .
மேலும் அஹ்லுபைத்தினரின் பெரும்பாலானோர் இவர்களுடன் கொலை செய்யப்பட்டனர். நபீ பேரர் ஹூஸைன் (றழீ) அவர்களின் உடலில் 33 குத்துக்களும் 34 வாள்வெட்டுக்களும் காணப்பட்டன அனைத்தும் அவர்களின் முன்பகுதியிலேயே குறிப்பாக நெஞ்சிலேயே காணப்பட்டன . இது அவர்களது வீர தீரச்செயலையே காட்டுகிறது. பதவிமோகம் பேராசைகொண்ட சிலரே நபீ பேரரின் உயிரைப் பறிக்கக் காரணமானர்.
அவர்களது புனித தலை துண்டிக்கப்பட்டது .அ.தை பிஷ்ர் பின் மாலிக் என்பவர் கொணர்ந்து அலீ பின் ஸியாத் என்பவரிடம் சென்று பின்வரும் அறபுப் பாடலைப் பாடினார்.
قَالَ بِشْرُبْنُ مَالِكْ :-
اَوْ فِرْ رِكَابِيْ فِضَّةً وَذَهَبًا – اَنِّيْ قَتَلْتُ مَلِكًا مُحَجَّبًا
قَتَلْتُ خَيْرَا لنَّاسِ اُمًّا وَاَبًا – فَخَيْرُهُمْ اَنْ يَنْسِبُوْهُ نَسَبًا
(எனது வாகனங்களில் தங்கத்தையும் வெள்ளியையும் நிரப்புங்கள் நான் ஒரு அரசனைக் கொன்று விட்டேன் . பெற்றோரால் மனிதரிற் சிறந்தவரைக் கொன்று விட்டேன் . அவர் வம்சத்தாலும் சிறந்தவர் ) என்று !
இதைக் கேட்ட இப்னு ஸியாத் கோபம் கொண்டு பிஷ்றை விளித்து. இவர் சிறந்தவர் என்றால் ஏன் கொலை செய்தாய்? என்று கேட்டான். பின் உன்னையும் அவருடன் அனுப்புகிறேன் என்று கூறி அவனையும் கொலை செய்தான்.
பின் ஹூஸைன் (றழீ) அவர்களுடைய தலையை சிரியாவுக்கு எடுத்துச் சென்று சிலுவையிலிடுமாறு யஸீத் என்பவனால் பணிக்கப்பட்டது.
தலை ஈட்டியில் குத்தப்பட்டு பகிரங்க வீதியில் எடுத்துச் செல்லும் போது காலித் பின் உபைதுல்லாஹ் அதைக் கண்டு பின்வரும் பாடலை பாடினார்.
قَالَ خَالِدُبْنُ عُبَيْدِ اللهِ عِنْدَ صَلْبِ رَأْسِهِ فِيْ الشَّامِ
جَاءُوْا بِرَأْسِكَ يَا بْنَ بِنْتِ مُحَمَّدٍ – مُتَزَمِّلًا بِدِمَائِهِ تَزْمِيْلًا
وَكَاَنَّمَا بِكَ يَابْنَ بِنْتِ مُحَمَّدٍ – قَتَلُوْا جِهَارًا عَامِدِيْنَ رَسُوْلًا
قَتَلُوْكَ عَطْشَانًا وَلَمْ يَتَرَقَّبُوْا – فِيْ قَتْلِكَ التَّنْزِيْلَ وَالتَّأْوِيْلَا
وَيُكَبِّرُوْنَ بِأَنْ قُتِلْتَ وَاِنَّمَا – قَتَلُوْا بِكَ التَّكْبِيْرَ وَالتَّهْلِيْلَا
(முஹம்மத் (ஸல்) அவர்களின் புதல்வியின் புதல்வரே, உங்களின் திருத்தலையைக் திருகி வந்துள்ளார்கள் . அது இரத்தத்தினால் துவட்டப்பட்டிருந்தது.
முஹம்மதின் புத்திரியின் புதல்வரே, உங்களை கொன்றதின் மூலம் மன முரண்டாகவும் பகிரங்கமாகவும் றஸூலையே கொன்றுவிட்டனர். உங்களைக் கொல்லும் போது அவர்கள் அல்லாஹூ அக்பர் என்று சொன்னார்கள். ஆனால் உங்களைக் கொன்றதினால் அவர்கள் தக்பீரையும் தஹ்லீலையும் கொலை செய்துவிட்டனர்.) என்று இவ்வாறு பாடிய கவிஞர் காலித் அவர்கள் தாபியீன்களில் பிரசித்தம் பெற்ற இறை பக்தர். ஒருமாதம் மறைந்திருந்தார். அவரைக் கொல்வதற்காக எதிர்த்தரப்பினர். தேடிக் கொண்டிருந்தனர் அவரைக் கொல்ல அவர்களால் முடியவில்லை.
பின்னொரு காலத்தில் அவர் பிறிதொரு காரணத்தால் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.
ஸெய்யிதுனா ஹூஸைன் (றழீ) அவர்களின் கொலை காரணமாக 700000பேர் கொலை செய்யப்பட்டனர்.
اَتَرْجُوْ اُمَّةٌ قَتَلَتْ حُسَيْنًا – شَفَاعَةَ جَدِّهِ يَوْمَ الْحِسَابِ
فَلَا وَاللهِ لَيْسَ لَهُمْ شَفِيْعٌ – وَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فى الْعَدَابِ
ஹூஸைன்(றழீ) அவர்களைக் கொலை செய்த சமூகம் நாளை மறுமையில் அவர்களின் பாட்டனார் அண்ணல் நபிய்யின் ஷபாஅத்தை ஆதரவு வைக்குமா? இல்லை. இறை மீது ஆணையாக அவர்களுக்கு மன்றாடுபவர் யாருமேயில்லை. அவர்கள் கியாம நாளையில் வேதனையில் இருப்பார்கள்.
கொலைஞர்கள் ;-
ஹூஸைன் (றழீ) அவர்களைக் கொலை செய்தவன் சினான் பின் அனஸ் அந்நகயீ என்றும் பிறிதொரு சொல்லின்படி சிம்றிப்னு தில் ஜவ்ஸன்.
வேதனை ;-
ஹூஸைன் (றழீ) அவர்களைக் கொலை செய்தோன் நெருப்பாலான பெட்டியில் இருப்பான். உலகத்தோரில் பாதிப்பேரின் வேதனை அவனுக்குச் செய்யப்படும்.
சூரிய கிரகணம் ;-
ஹூஸைன் (றழீ) அவர்கள் ஷஹீதான தினத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. வானம் சிவந்து அழுதது.
குருடர்;-
ஹூஸைன்(றழீ) அவர்களை கொலை செய்தவர்ளில் 1500பேர் குருடர்களாயினர் . இதைஇமாம் ஜலால்தீன் சுயூதீ (றஹ்) சொன்னார்கள்.
தலை பேசியது ;-
அஃமஷ் (றஹ்) சொல்கிறார் ;- கொலைஞர்கள் ஹூஸைன் (றழீ) தலையை ஊர்வலமாகக் கொன்டு செல்லும் போது நான் திமஷ்கிலிருந்தேன். அப்போது ஒருவர் தலையைப் பார்த்து
اَمْ حَسِبْتَ أَنْ اَصْحَابَ الْكَهْفِ وَ الرَّقِيْمِ كَانُوْ مِنْ آيَاتِنَا عَجَبَا
என்ற குகைவாசிகளின் இறைவசனத்தை ஓதினார். அப்போது பகிரங்கமாக ஹூஸைன் (றழீ) அவர்களின் தலை
قَتْلِيْ اَعْجَبُ مِنْ ذَالِكَ
எனது கொலை அதைவிட மிக ஆச்சரியமானது என்று சொன்னது. அதை நான் கேட்டேன் என்றார்.
நபி மொழி ;-
எனது குடும்பத்திற்கு அநீதி செய்தவனுக்கும் எனது குடும்பத்திற்கு நோவினை செய்தவனுக்கும் சொர்க்கம் ஹறாமாக்கப்பட்டது என்று நபீகள் நவின்றார்கள்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments