காதிரிய்யஹ் திருச்சபை ஏற்பாட்டில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களிடத்தில் “பைஅத்” – ஞானதீட்சை ஒப்பந்தம் செய்து முரீதீன்கள், முரீதாத்கள் கலந்து கொண்ட
முரீதீன்கள் மாநாடு – 2016
நிகழ்வு 16.10.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காத்தான்குடி – 5 பத்ரி்ய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இம்மாநாடு மஃரிப் தொழுகையின் பின் ஆரம்பமாகி இரவு 11.00 மணியளவில் நிறைவு பெற்றது. இம்மாநாட்டிற்கு உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளிலிருந்தும் 1750க்கும் மேற்பட்ட முரீதீன்கள், முரீதாத்கள் கலந்து சிறப்பித்தமை ஓர் முக்கிய அம்சமாகும்.
மாநாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தொகுப்பை ஒவ்வொன்றாக கீழே பார்வையிடலாம்.
மாநாட்டு நடவடிக்கைகளுக்காக 02.10.2016 அன்று இரவு புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் நிறைவின் பின் முரீதீன்கள் மாநாடு – 2016 விஷேட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
15.10.2016 அன்று மாநாட்டில் தொண்டர்களாக கடமை புரிய இருக்கும் தொண்டர்களுக்கான கூட்டம் நடைபெற்ற போது…
மாநாட்டில் கலந்து கொண்ட முரீதீன்களுக்கு இராப்போஷனம் வழங்குவதற்காக உணவு தயார் செய்யும் சமையல் பகுதியிலும், தேநீர் விநியோகப் பகுதிகளில் நடைபெற்ற வேலைகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்காக செய்யப்பட்ட முன்னேற்பாடுகள்
ஞாயிறு தோறும் இஷா தொழுகையின் பின் பள்ளிவாயலில் நடைபெற்று வரும் புனித கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் மாநாட்டிற்காக அன்றைய தினம் பி.ப 04.30 மணிக்கு நடைபெற்றது.
மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னதாக ஆலிமுல் பாழில், அபுல் இர்பான் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் மஸார் ஷரீபிற்கு போர்வை போர்த்துவதற்காக இந்தியா – ராஜஸ்தான் அஜ்மீர் ஷரீபிலிருந்து கொண்டு வரப்பட்ட திருப் போர்வை தலையில் சுமந்து வரப்பட்டு பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் றவ்ழஹ் ஷரீபில் போர்த்தப்பட்ட காட்சிகள்.
மஃரிப் தொழுகையின் பின் ஆரம்பமாகும் மாநாட்டிற்கு வருகை தரவுள்ள ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களை வரவேற்பதற்காக வீதிகளின் இருமருங்கிலும் முரீதீன்கள் கூடி நின்று “துப்” தகறா அடித்து வரவேற்பு கீதத்துடன் வரவேற்கப்படும் காட்சிகள்.
ஆரம்ப நிகழ்வாக மஃரிப் தொழுகையின் பின் காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸ் ஆரம்பமானது.
இஷா தொழுகையின் பின் விஷேட உரை நிகழ்த்துவதற்காக சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அவர்கள் மஜ்லிஸ் மண்டபத்திற்கு வருகை தந்து சுமார் 2.00 மணி நேரம் விஷேட உரை நிகழ்த்தினார்கள்.
சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் விஷேட உரை நிறைவு பெற்ற பின் காதிரிய்யஹ் திருச்சபையின் தலைவர் சங்கைக்குரிய மௌலவீ அப்துல் மஜீத் றப்பானீ அன்னவர்களினால் மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களை கௌரவித்து அன்னாருக்கு போர்வை போர்த்தப்பட்டது.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து காதிரி்ய்யஹ் திருச்சபையின் தலைவரும், மாநாட்டின் தலைவருமான சங்கைக்குரிய மௌலவீ அப்துல் மஜீத் றப்பானீ அன்னவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களிடத்தில் 1988ம் ஆண்டு 10ம் மாதம் 22ம் திகதி முதன் முதலாக “பைஅத்” செய்து கொண்ட 8 முரீதீன்களை கௌரவப்படுத்தி அன்னவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்ட போது…
அதனைத் தொடர்ந்து மாநாட்டின் செயலாளர் சங்கைக்குரிய மௌலவீ அஹ்மத் ஸாஹ்ஜஹான் றப்பானீ அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.
இறுதி நிகழ்வாக இறைஞான கீதங்கள் “துப்” தகறாவுடன் இசைக்கப்பட்டு, இறுதியாக துஆ பிரார்த்தனையுடன் இராப்போஷனம் விநியோகிக்கப்பட்டு இனிதே ஸலவாத்துடன் மாநாட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே ஸலாவாத்துடன் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.