மலேஸியா – பினாங் நகரைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் பேசி வருகின்ற இறைஞான தத்துவங்ளை அறிந்து அன்னவர்ளைச் சந்திப்பதற்காகவும், தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலுக்கு நிதி அன்பளிப்பு செய்வதற்காகவும் கடந்த 02.02.2017ம் திகதி அன்று இலங்கைத் திருநாட்டிற்கு வருகை தந்து ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களிடம் பைஅத் செய்து முரீதுகளாகிக் கொண்டார்கள். அது மட்டுமல்லாது புதிய பள்ளிவாயலின் கட்டிட நிதிக்காக அவர்கள் சேகரித்த நிதியையும் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களிடத்தில் ஒப்படைத்தார்கள்.