றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட, மனித குல வழிகாட்டி மாண்புமிகு அருள் நபீ அண்ணலெம் பெருமானார் முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன்மொழிகளை பாராயணம் செய்யும் 40வது வருட புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் 26.03.2017 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமாகி 24.04.2017 திகதியன்று நிறைவடைந்தது.இந்நிகழ்வு காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி, கத்முல் குர்ஆன், புகாரீ இமாம் மௌலித், ஷாபியீ இமாம் மௌலித், மிஃறாஜ் மௌலித் ஆகிய நிகழ்வுகள் காலை 11.45 மணி வரை நடைபெற்றன. மீண்டும் அஸ்ர்,மஃரிப் தொழுகையின் பின் புகாரீ ஷரீப் ஓதப்பட்டு இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MM. ஜுமான் றவ்ழீ அன்னவர்களால் உரை நிகழ்த்தப்பட்டு இறுதி ஹதீத் வாசிக்கப்பட்டு துஆ, ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.