காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் 31வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 3ம் நாள் நிகழ்வுகளை கௌரவிக்கும் முகமாக வருகை தந்த கிழக்கு மாகாண விவசாய கிராமிய கைத்தொழில் அமைச்சரும், இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளருமான கௌரவ கிருஷ்ண பிள்ளை துரைராஜ சிங்கம் அவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான கௌரவ சிறிநேசன் அவர்களும் கலந்து கொண்டனர்.