Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்"சுப்ஹான மன் அழ்ஹறல் அஷ்யாஅ வஹுவ ஐனுஹா"

“சுப்ஹான மன் அழ்ஹறல் அஷ்யாஅ வஹுவ ஐனுஹா”

ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹுஅன்ஹு அன்னவர்கள் கூறினார்கள்,

‎”سبحان من اظهر الأشياء وهو عينها”

”சுப்ஹான மன் அழ்ஹறல் அஷ்யாஅ வஹுவ ஐனுஹா ”

“படைப்புக்களை அவன்தானாக இருக்கும் நிலையில் அவற்றை வெளிப்படுத்தியவன் துய்யவன்.”

இவ்வசனமாகிறது மிகவும் கருத்தாழம் உள்ளதாகும். அதிலே வஹ்ததுல் வுஜூத் சத்தியக்கொள்கையின் அடிப்படையே உள்ளது.

-இத்திரு வாக்கியத்தில் ”மன்” என்பதைக்கொண்டு நாட்டம் அல்லாஹுதஆலா ஆகும்.

-மேலும் ”வஹுவ” என்பதும் அந்த ”மன்” ஐகொண்டு நாடப்பட்ட அல்லாஹ்வையே குறிக்கும்.

-ஐனுஹா என்பது அந்தப்படைப்புக்கள் தானாக இருத்தல் என்பதைக் குறிக்கும்.

சுருக்கமான கருத்து என்னவெனில்,
படைப்புக்களாகிறது அல்லாஹ் தானானதாகும். அவனுக்கு வேறானதல்ல.

படைப்புக்கும், படைத்தவனுக்கும் இடையில் உள்ள தொடர்பாகிறது, ”ஐநிய்யத்” (ஓர்மை) அத்துவிதமாகும். துவிதம்(இருமை) இல்லை.

இந்த வசனம் இப்னு அறபீ நாயகத்தைப் பொறுத்து “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவைப் போன்றதாகும். இவ்வசனத்தை அநேக இடங்களில் அதை தன்னுடைய ”திக்ர்” போன்று கூறியுள்ளார்கள்.

”வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை மறுக்கக்கூடிய உலமாக்களே!

உங்கள் கண்களை திறந்து இப்னு அறபீ நாயகத்தின் இத்திரு வசனத்தை சிந்தித்துப் பாருங்கள். இத்தத்துவத்தை உங்களின் புத்தி ஏற்கவில்லையானால் உங்களின் புத்தியை வீட்டுத் தூணில் கட்டி வைத்து விட்டு அல்லாஹ்வை முன்னோக்கி அவன் பக்கம் விரண்டோடுங்கள்.

”பபிர்றூ இலல்லாஹ்” என்று அவன் கூறியது போன்று.

قال الشيخ الأكبر إبن عربي قُدس سره
‎”سبحان من اظهر الأشياء وهو عينها”
عبارة غامضة عميقة. فيها أصل وحدة الوجود وعرقها. والمراد بمن في العبارة الله تعالى، والضمير الغائب في قوله اظهر يعود الى من ، والضمير مِن وهو في العبارة يعود الى من، والضمير من قوله عينها يعود الى قوله الأشياء،

والمعنى الملخّص من هذه العبارة أنّ الأشياء – المخلوقات – عين الله سبحانه، لا غير الله، والعلاقة بين المُظهر وبين المظهَر عينية، لا غيرية، وهذه العبارة با لنسبة الى إبن عربي مثل الكلمة الطيّبة ” لا اله الا الله” فكان بقولها في أكثر الأوقات ، كأنّها ذكره،

أيها الفقيه المنكر لوحدة الوجود إفتح عينيك، وتفكر في عبارته هذه، فان لم يقبل عقلك هذه الحكمة، فاربط عقلك بعمود دارك، وتوجه إلى الله وفِر اليه، كما قال الله ” فَفِرُّوا الى الله”.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments