Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மாநபீ புகழ் மாலை

மாநபீ புகழ் மாலை

காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற 17வது வருட புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வின் போது வெளியிடப்பட்ட கவிதைப் பிரசுரம்

பாருக்கு வந்த ராஜாவே!
பாலைவனத்து ரோஜாவே!
பார்ப்பவர் லயித்த நிற்கும் பேரொளியே!
பார் போற்றும் தீன் சுடரே!
பாரை ஆளும் கோமானே!
முதலோனின் முதலொளியே!
முக்கனியே முழுமதியே!
முக்காலம் போற்றும் மாதவரே!
முழு நிலாவான பெருமானே!
அகிலத்தின் அருட்கொடையே!
அல்லாஹ்வின் தூதரே!
அப்துல்லாஹ்வின் அருமை மைந்தரே!
அவனிக்கு வந்த நாயகமே!
அவனல்லாதொன்றுமில்லை என்றவரே!
ஈருலகின் அரசரே!
ஈமானை எமக்களித்தவரே!
ஈடிணையில்லா இறையொளியே!
ஈடேற்றம் தந்தவரே!

மறுமையின் மாதவமே!
மக்கத்து மரகதமே!
மஹ்ஸரின் ஒளி விளக்கே!
மன்னர் முஹம்மதுவே!
மதீனத்து மண்ணில் மறைந்து வாழும்
மாநபியே எங்கள் நாயகமே!
ஸபாஅத்தின் களஞ்சியமே!
ஸர்தாரே நாயகமே!
ஸபாஅத்தை எமக்களித்து
ஸலாமத்து செய்பவரே!
சாந்தி நபியே!
சங்கை நபியே!

மஹ்ஸரின் ஒளி விளக்கே!
மன்னர் முஹம்மதுவே!
மதீனத்து மண்ணில் மறைந்து வாழும்
மாநபியே எங்கள் நாயகமே!
ஸபாஅத்தின் களஞ்சியமே!
ஸர்தாரே நாயகமே!
ஸபாஅத்தை எமக்களித்து
ஸலாமத்து செய்பவரே!
சாந்தி நபியே!
சங்கை நபியே!

ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
யாறப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்

வஸ்ஸலாம்

-வரிகள் –
அல்ஹாஜ் TLK. கலீலுர் றஹ்மான்
(TLK Food City)
இல. 51, AJA. மாவத்தை
காத்தான்குடி-06
21.11.2018

RELATED ARTICLES

Most Popular

Recent Comments