Monday, October 7, 2024
Homeநிகழ்வுகள்ஏகத்துவ வரலாற்றின் மீளாய்வு மாநாடு - 2019 நிகழ்வின் தொகுப்பு

ஏகத்துவ வரலாற்றின் மீளாய்வு மாநாடு – 2019 நிகழ்வின் தொகுப்பு

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் 08.02.2019 வெள்ளிக்கிழமை அன்று
இரவு 8.00 மணிக்கு தொடக்கம் இரவு 11.30 மணிவரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் “1979 முதல் 2019 வரையான ஏகத்துவ வரலாற்றின் மீளாய்வு மாநாடு” மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக மாணவர் அப்துர் றஷீத்தினால் திருமறை வசனம் ஓதப்பட்டு, HM.அபிமான் ஆசிரியா் அவர்களினால் வரவேற்புரையும் நிகழ்த்தப்பட்டது.

இம்மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் 40வருட ஏகத்துவ வாழ்க்கையில் நடைபெற்ற வரலாற்றுச் சுருக்கத்தினை சங்கைக்குரிய மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. Hons அவர்கள் சுமார் 2:30 மணித்தியாலங்களுக்கு மேலான உரையினூடாக தெட்டத் தெளிவாக முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் சிற்றுரை ஒன்றும் இடம் பெற்றது.

இவ்வரலாற்றுச் சிறப்புக்க மிக்க மாநாட்டில் உலமாஉகள், புத்திஜீவிகள், பெருந்திரளான ஆண்கள்,பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இறுதியாக மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு இனிதே ஸலவாதுடன் மாநாடு நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments