Monday, October 7, 2024
Homeநிகழ்வுகள்71வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு

71வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு

குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ எஜமான் பாதுஷா நாயகம் அன்னவர்களின் 71வது வருட அருள் மிகு கந்தூரி நிகழ்வும், அஷ்ஷெய்க் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அன்னவர்களின் நினைவு மஜ்லிஸும் 22.02.2019 தொடக்கம் 24.02.2019ம் திகதி வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக 22.02.2019 வெள்ளிக்கிழமை பி.ப 5.30 மணிக்கு இரு நாதாக்கள் பேரிலான திருக்கொடிகளேற்றமும், பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் ஸியாறத்திற்கு போர்வை போர்த்தும் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸும், இஷா தொழுகையின் சங்கைக்குரிய மௌலவீ ACM.பைஸல் றப்பானீ அவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டு, துஆ, தபர்றுக் விநியோகத்துடன் 1ம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

இரண்டாம் நாள் நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் அன்னவர்களின் மௌலித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் அம்பா நாயகம் மௌலிதும், இஷா தொகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ ASM. இர்ஷாத் றப்பானீ அன்னவர்களின் மார்க்க உபன்னியாசமும், துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாத்துடன் 2ம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

இறுதித் தினமான கந்தூரி தினத்தன்று பி.ப 5.00 மணிக்கு ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் மௌலித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் கஸீததுல் புர்தஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் மௌலவீ AS.குலாம் முஹம்மத் அறூஸீ அன்னவர்களின் விஷேட சொற்பொழிவும், இறைஞான கீத நிகழ்வும் பெரிய துஆவும் ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம் ஸலவாதுடன் கந்தூரி நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments