லைலதுல் கத்ர் இன்ன இரவுதான் என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன. அது ஆண்டில் ஓர் இரவென்றும், பராஅத் இரவென்றும், றமழானில் ஓர் இரவென்றும், றமழான் 27ம் இரவு என்றும் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான சொல் றமழான் இருபதுக்கு மேல் ஒற்றைப்படையாக வரும் நாட்களில் உள்ள இரவுகளில் ஒரு இரவென்றும், கூறப்பட்டிருப்பதால் றமழான் மாதத்தின் கடைசிப்பத்து நாட்களும் இஃதிகாப் இருப்பது மிக சிறப்பானதாகும்.
கீழ் வரும் ஹதீஸ்கள் லைலதுல் கத்ர் சம்பந்தமாக ஸஹீஹான அறிவிப்புகள் ஊடாக இடம் பெற்ற ஹதீஸ்களாகும்….
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رِجَالًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أُرُوا لَيْلَةَ القَدْرِ فِي المَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخر
நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது; அப்போது, நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!” என்று கூறினார்கள்.
நூல் : புகாரி ஷரீப் , அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி) அவர்கள்.
2016 – حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: سَأَلْتُ أَبَا سَعِيدٍ، وَكَانَ لِي صَدِيقًا فَقَالَ: اعْتَكَفْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العَشْرَ الأَوْسَطَ مِنْ رَمَضَانَ، فَخَرَجَ صَبِيحَةَ عِشْرِينَ فَخَطَبَنَا، وَقَالَ: «إِنِّي أُرِيتُ لَيْلَةَ القَدْرِ، ثُمَّ أُنْسِيتُهَا – أَوْ نُسِّيتُهَا – فَالْتَمِسُوهَا فِي العَشْرِ الأَوَاخِرِ فِي الوَتْرِ، وَإِنِّي رَأَيْتُ أَنِّي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ، فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلْيَرْجِعْ»، فَرَجَعْنَا وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً، فَجَاءَتْ سَحَابَةٌ فَمَطَرَتْ حَتَّى سَالَ سَقْفُ المَسْجِدِ، وَكَانَ مِنْ جَرِيدِ النَّخْلِ، وَأُقِيمَتِ الصَّلاَةُ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِي المَاءِ وَالطِّينِ، حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!” என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன்.
நூல் : புகாரி ஷரீப் , அறிவிப்பாளர் : அபூ ஸயீத்(ரலி) அவர்கள்.
2017 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي الوِتْرِ، مِنَ العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
“ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!” என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி ஷரீப் , அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள்.
2020 – حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجَاوِرُ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ وَيَقُولُ: «تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
நூல் : புகாரி ஷரீப் , அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; ‘ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!” எனக் கூறுவார்கள்.
நூல் : புகாரி ஷரீப் , அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள்.
2021 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «التَمِسُوهَا فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ لَيْلَةَ القَدْرِ، فِي تَاسِعَةٍ تَبْقَى، فِي سَابِعَةٍ تَبْقَى، فِي خَامِسَةٍ تَبْقَى» تَابَعَهُ عَبْدُ الوَهَّابِ، عَنْ أَيُّوبَ
“ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! ‘லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!” நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி ஷரீப் , அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
2022 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي مِجْلَزٍ، وَعِكْرِمَةَ، قَالَ: ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ فِي العَشْرِ الأَوَاخِرِ، هِيَ فِي تِسْعٍ يَمْضِينَ، أَوْ فِي سَبْعٍ يَبْقَيْنَ» يَعْنِي لَيْلَةَ القَدْرِ، وَعَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ التَمِسُوا فِي أَرْبَعٍ وَعِشْرِينَ
“லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாள்களில் உள்ளது; அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!” என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி ஷரீப் , அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
“இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடுங்கள்!” என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்.
லைலதுல் கத்ரு இரவின் சிறப்பு அது அல்லாத மற்ற ஆயிரம் மாதங்களைவிட மேலானதாகும். அதாவது அந்த ஓர் இரவு முப்பதினாயிரம் நாட்களைவிட மேலானதாகும். இரவு என்பது ஒரு நாளில் பாதியாக இருப்பதால் முப்பதினாயிரம் நாட்களை இரண்டாக ஆக்கி கணக்கிட்டால் அறுபதினாயிரம் இரவுகளைவிட மேலானது என்பது தெரியவருகின்றது.
இமாம் கஸ்ஸாலி றஹ் அவர்களும், மற்றும் இமாம்கள் சிலரும் கூறியுள்ளதாவது றமழானின் முதற் பிறை ஞாயிறு அல்லது புதன் கிழமையாயிருந்தால் லைலதுல் கத்ர் இருபத்து ஒன்பதாம் இரவு என்பதாகவும், முதற்பிறை திங்கட்கிழமையாயிருந்தால் லைலதுல் கத்ர் இருபத்து ஒன்றாம் இரவு என்பதாகவும்,செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையாயிருந்தால் லைலதுல் கத்ர் இரபத்து ஏழாம் இரவென்றும், வியாழக்கிழமையாயிருந்தால் இருபத்தைந்தாம் இரவென்றும், சனிக்கிழமையாய் இருந்தால் இருபத்தி மூன்றாம் இரவென்றும் கூறியுள்ளார்கள்.
இந்தக்கணக்குப்படி நான் பருவமடைந்த நாள் முதல் எனக்கு லைலதுல் கத்ர் தவறியதே கிடையாது என்று ஷைகு அபுல் ஹஸன் ஜுர்ஜானி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ومنها ما قال ابن عباس ايضا ليلة القدر تسعة أحرف وهو مذكور فى هذه السورة ثلاث مرات فتكون السابعة والعشرين
லைலதுல் கத்ரைப்பற்றி கூறப்பட்டுள்ள “இன்னா அன்ஜல்னா” சூறாவில் லைலதுல் கத்ரு என்ற வார்த்தை மூன்று தடவைகள் கூறப்பட்டுள்ளன. ஒருவார்த்தையில் ஒன்பது எழுத்துக்கள் வீதம் மூன்று தடவைக்கு இருபத்து ஏழு எழுத்துக்கள் ஆகின்றன. ஆகவே இருபத்தேழாம் இரவுதான் லைலதுல் கத்ர் என்று சிலர் கூறியுள்ளனர். மேற்படி கருத்தானது தப்ஸீர் கலை மேதை இப்னு அப்பாஸ் றழி அவர்களின் கருத்தாகுமென இஸ்மாயீல் ஹக்கீ றஹ் அவர்கள் தங்களின் விளக்கவுரையில் கூறிக்காட்டுகின்றார்கள்.
இவ்வாறு சில காரியங்களில் இமாம்கள் சில எழுத்துக்களின் எண்ணிக்கைக்குத் தோதாக விடயங்களைக் கூறியிருப்பது அறிவுக்குப் பொருத்தமாகவும் அமைந்துள்ளது.
லைலதுல் கத்ருடைய இரவுக்கு சில அடையாளங்கள் ஹதீஸில் கூறப்பட்டுள்ளன. அவை அன்றைய இரவில் நட்ஷத்திரம் எரிந்து விழாது, நாய் குரைக்காது, சூடும் குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான தன்மையாக இருக்கும், அன்று சூரியன் உதிக்கும் போது சுடர் அதிகமின்றி பிறையைப் போல் இருக்கும் மேலும் ஷைதான் வெளியில் வரமாட்டான் என்றும் கூறப்பட்டுள்ளன.
லைலதுல் கத்ரு இரவில் தறாவீஹுக்குப் பின் இரவு முழுவதும் அல்லது முடிந்தளவு திக்ரு, கிறாஅத்,தஸ்பீஹ், ஆகியவற்றில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
றமழான் மாதம் முதல் பத்தில் “அல்லாஹும்மர் ஹம்னீ “ என்று அல்லாஹ்வின் றஹ்மத்தையும்,
“அல்லாஹும்மக் பிர்லீ” என்று நடுப்பத்தில் அவனது பாவமன்னிப்பையும்,
“அல்லாஹும்மஃதிக்னீ மினன்னார்” என்று நரக விடுதலையையும் கேட்பது சுன்னத்தாகும்.
மேலும் லைலதுல் கத்ருடைய இரவிலும் மற்ற நாட்களிலும் பின்வரும் துஆவை அதிகமாக ஓதுவதும் சுன்னத்தாகும்.
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي»
யா அல்லாஹ் நிச்சயமாக நீ மன்னிப்பவன்! நீ மன்னிப்பை விரும்புகின்றாய்; ஆகையால் என்னை மன்னித்தருள்வாயாக!