அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் குடும்பத்தாரினதும் நினைவாக 23.08.2019 வெள்ளிக்கிழமை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 1ம் நாள் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் பி.ப 5.30 மணியளவில் இலங்கை திருநாட்டின் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து ஹாஜா நாயகம் அன்னவர்களின் திருக்கொடியேற்றி வைக்கப்பட்டு இலங்கை திருநாட்டிற்காகவும், மக்களிடையே சாந்தி சமாதானம் வேண்டியும், அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்காகவும், முப்படையினருக்காகவும் விஷேட துஆப் பிரார்த்தனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் நாயகம் அன்னவர்களி்ன் ஸியாறத் நிகழ்வும், கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின்னர் மவ்லிது அதாஇர் றஸூல் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MM.ஜுமான் றவ்ழீ அன்னவர்களின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்று தபர்றுக் விநியோகம், துஆ, ஸலவாதுடன் 1ம் நாள் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.
இந்நிகழ்வில் முப்படைத் தளபதிகள், உலமாஉகள், ஹாஜாஜீ முஹிப்பீன்களின் பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.
3 தினங்கள் நடைபெறும் அருள் மிகு கந்தூரியின் 2ம் நாள் நிகழ்வுகள் 24.08.2019 இன்று பி.ப 5.00 மணியளவில் ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் ஆரம்பமாகும். இன்ஷா அல்லாஹ்.