அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் குடும்பத்தாரினதும் நினைவாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெறும் 33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 2ம் நாள் நிகழ்வுகள் 24.08.2019 சனிக்கிழமை ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் பி.ப 5.00 மணியளவில் கர்ப்பிணித் தாய்மார்களின் சுகப்பிரசவம் வேண்டி தலைபாதிஹா மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின்னர் மவ்லிது அதாஇர் றஸூல் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மவ்லானா குர்ஆன் பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், தொடர்ந்து சங்கைக்குரிய மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA (Hons) அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது.
விஷேட நிகழ்வுகளாக ஹாஜாஜீ மாகந்தூரி தொண்டர்களுக்கான தொண்டர் அட்டை வழங்கும் நிகழ்வும், அல்ஆலிமுல் பாழில் அபுல் இர்பான் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் ஸியாறத்திற்கு சந்தனம் பூசும் நிகழ்வும் சிறப்புற நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் மஸார் ஷரீபை சுத்தம் செய்யும் அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் மாணவர் ஸியாதத் நௌஸீ அவர்களுக்கு அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் “காதிமுல் அப்தால்” சிறப்பு பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்